Home பெண்கள் உடல் கட்டுப்பாடு சிக்ஸ் பேக் ஆசைக்கு ஓர் எச்ச‍ரிக்கை

சிக்ஸ் பேக் ஆசைக்கு ஓர் எச்ச‍ரிக்கை

23

2ஐம்பது வருடங்களுக்கு முன்பு தற்காப்பு கலையான சிலம்பு, குத்துச்சண்டை, ஆகியவற்றை வாலிபர்கள் கற்றுக் கொண்டு உடலமைப்பை பராமரித்தனர். அதன் பின்பு கராத்தே, குங்பூ, போன்ற வீரசாகச பயிற்சிகள் வந்தன. தற்போது ஜிம்மில் 5 முதல் 10 மணி வரை தொடர் பயிற்சியில் ஈடுபட்டு சிக்ஸ் பேக் உடலமைப்பை உருவாக்குவதில் இளைஞர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

அமீர்கான், சல்மா ன்கான், கோலிவுட்டில் சூர்யா, பரத் போன்ற நடிகர்கள் சிக்ஸ் பேக் உடலமைப்பை காட்டும் வகையில் நடித்தனர். இந்த சிக்ஸ் பேக் ஆசை, இன்றைய இளைஞர்களிடம் தீயாக பரவியுள்ளது. பொதுவாக உடலில் சேரும் கொழுப்பு உடலியக்கத்தின் மூலம் இயல்பாக கரைந்து போகும். சில சமயங்களில் கரையாமல் ஆங்காங்கே சேர்ந்து போகும்.

இப்படி சேரும் கொழுப்பைக் கரைத்து தசைகளாக வயிற்றுபகுதியில் உருமாற்றுவது தான் சிக்ஸ்பேக். ஒருமுறை சிக்ஸ் பேக் கொண்டு வந்து விட்டாலும் அதை தொடர்ச்சியாக பராமரிப்பது கஷ்டம். அதனால் தான் உடற்பயிற்சி மூலம் இதை பெற வேண்டும். அதற்காக ஒரு சிலர் ஸ்டீராய்டு மருந்துகள் எடுத்துக்கொள்கிறார்கள். அதனால் உடலில் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படும் ஆபத்து உண்டு. அழகான ஆரோக்கியமான உடலுக்கு அன்றாடம் எளிதான உணவு வகைகளும் இயல்பான உடற்பயிற்சியுமே போதும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

சிக்ஸ் பேக் உடலுக்கு தயாராகுபவர்கள், உடலில் உள்ள கொழுப்பை ஒன்பது சதவிகிதம் ஆகவும், நீரின் அளவினை 40 சத வீகிதம் அளவுக்கு குறைத்தே ஆக வேண்டும். மேலும் புரதச்சத்தை மட்டும் அதிகம் எடுத்து கொள்வதால் கல்லீரல், சிறுநீரகம், இரண்டும் கடும் பாதிப்புக்குள்ளாகும். ஒரு கட்டத்தில் சிறுநீரகம் முற்றி செயலிழந்து விடக்கூடிய அபாயமும் இருக்கிறது.

அதிகளவு உடற்பயிற்சி செய்யும்போது உடலின் வெப்பம் அதிகரிக்கும் என்று கூறுகிறார்கள். புரதம், மாவுச்சத்து, இல்லாமல் கடும் உடற்பயிற்சி செய்யும் போது உடலின் தசை நார்கள் வெளியே தெரிய ஆரம்பிக்கும். மனிதனுக்கு வலிமையான தசைநார்களே தேவை. உடல் வலி, காயம், ஏற்படுவதைத் தடுக்கவும் முதுகுவலி வராமல் காக்கவும் தசைநார்கள் பயன்படுகின்றன.

ஆனால் சிக்ஸ் பேக் வைப்பதால் தேவை இல்லாத வலிகள், பிரச்சனைகள்தான் அதிகம். அழகுக்கு ஆசைப்பட்டு தான் சிக்ஸ் பேக் மாயையில் இளைஞர்கள் படையெடுக்கின்றனர். ஆனால் நிரந்தர அழகுக்கு ஒருவர் முறையாக உடற்பயிற்சி செய்து உடலைக் கட்டுக்குள் வைத்திருத்தலே முக்கியம். சிக்ஸ்பேக் அழகு என்பது தற்காலிகமானதே, நீடித்தது அல்ல. அழகை விட ஆரோக்கியமே முக்கியம்.