Home சமையல் குறிப்புகள் வெண்டைக்காய் குடைமிளகாய் மசாலா

வெண்டைக்காய் குடைமிளகாய் மசாலா

21

உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் குடைமிளகாய் மற்றும் வெண்டைக்காயை வைத்து எந்த ஒரு ரெசிபியும் இதுவரை செய்திருக்க மாட்டோம். இப்போது அவற்றை வைத்து ஒரு மசாலா செய்து, அவற்றை சாதம் அல்லது சப்பாத்திக்கு தொட்டு சாப்பிட்டால் மிகவும் நன்றாக இருக்கும். அதை எவ்வாறு செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

வெண்டைக்காய் – 1/2 கிலோ (நறுக்கியது)
குடைமிளகாய் – 2 (நறுக்கியது)
வெங்காயம் – 2 (நறுக்கியது)
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
மல்லித் தூள் – 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
மிளகுத் தூள் – 1 டீஸ்பூன்
சீரகத் தூள் – 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி – சிறிது (நறுக்கியது)
எலுமிச்சை சாறு – 2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் சற்று அதிகமான அளவு எண்ணெய் விட்டு, காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

பின் அதில் நறுக்கிய வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கி, வெண்டைக்காயை போட்டு, நன்கு வதக்கவும்.

வெண்டைக்காய் நன்கு வெந்தது போல் தெரியும் போது, அதில் குடைமிளகாயை போட்டு நன்கு பிரட்டவும். பின்னர் அதோடு மிளகாய் தூள், மஞ்சள் தூள் மல்லித் தூளை சேர்த்து, சிறிது தண்ணீர் மற்றும் உப்பை சேர்த்து நன்கு கிளறவும்.

பச்சை வாசனை போனதும் அதனை இறக்கி, அதில் மிளகுத் தூள், சீரகத்தூள் சேர்த்து கிளறி, எலுமிச்சை சாற்றை விட்டு, கொத்தமல்லியை தூவி பரிமாறவும்.

இப்போது சுவையான வெண்டைக்காய் குடைமிளகாய் மசாலா ரெடி!!!