Home பெண்கள் உடல் கட்டுப்பாடு டயட்டை விட ஏன் உடற்பயிற்சி சிறந்தது

டயட்டை விட ஏன் உடற்பயிற்சி சிறந்தது

13

Captureஉண்மையில் சொல்லப்போனால், டயட்டின் மூலம் வெறும் கொழுப்பு நிறைந்த உணவுகள் உட்கொள்ளப்படுவது தான் தடுக்கப்படுகிறது. ஆனால் உடற்பயிற்சியின் மூலம் உடலுக்கு நல்ல வடிவத்தைக் கொடுக்க முடியும்.

அதற்காக வெறும் உடற்பயிற்சி மட்டும் செய்து உடல் எடையைக் குறைக்கவோ மற்றும் உடலை நல்ல வடிவமைப்புடன் வைத்துக் கொள்ளவோ முடியாது.

முதலில் உடற்பயிற்சி செய்வதற்கு உடலுக்கு ஆற்றல் வேண்டும். அத்தகைய ஆற்றலை உணவின் மூலம் தான் பெற முடியும். அதற்காக டயட் இருந்து தான் ஆற்றல் பெற வேண்டும் என்பதில்லை.

சொல்லப்போனால், வெறும் டயட்டை மேற்கொண்டால் உடல் சோம்பேறித்தனத்துடன் தான் இருக்கும். அதுவே உடற்பயிற்சி செய்தால், சுறுசுறுப்புடன இருப்பது போல் உணர முடியும். இதுப்போன்று நிறைய காரணங்கள் உள்ளன. சரி, இப்போது ஏன் டயட்டை விட உடற்பயிற்சி சிறந்தது என்று பார்ப்போம்.

கடுமையான டயட் அல்லது பட்டினி கிடப்பது மிகவும் ஆபத்தானது என்று உடல்நல நிபுணர்கள் கூறுகிறார்கள். ஆனால் வயிறு நிறைய சரியான உணவுகளை உட்கொண்டு உடற்பயிற்சியை செய்து வருவது எடையைக் குறைப்பதற்கான யதார்த்தமான அணுகுமுறையாகும்.

டயட்டில் இருந்து, உடலில் உள்ள கலோரிகளின் அளவைக் குறைப்பதை விட, உடற்பயிற்சி மூலம் ஏராளமான கலோரிகளை எரிக்கலாம்.

மற்றொரு முக்கியமான நன்மை, உங்களுக்கு விருப்பமான உணவை உட்கொண்டு, அதற்கேற்ப உடற்பயிற்சியில் ஈடுபட்டால், உடல் எடை அதிகரிப்பதைத் தடுக்கலாம்.

டயட்டில் இருந்தால், ஒருகுறிப்பிட்ட உணவுகளைத் தான் உட்கொள்ள வேண்டியிருக்கும். இதனால் உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைக்காமல் சத்து குறைபாடு ஏற்படும். ஆனால் உடற்பயிற்சி செய்து வந்தால், டயட் மேற்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. உங்களுக்கு பிடித்த எந்த உணவையும் உட்கொள்ளலாம்.

டயட் மூலம் கொழுப்புக்களை மட்டுமே குறைக்க முடியும். ஆனால் உடற்பயிற்சியின் மூலம் அழகான உடலமைப்பைப் பெற முடியும்.

உடற்பயிற்சி உடலின் வலிமை மற்றும் ஆற்றலை அதிகரிக்கும். ஆனால் டயட் இருந்தால், விரைவில் உடலில் உள்ள ஆற்றல் குறைந்து, சோர்ந்துவிடக்கூடும்.