Home பெண்கள் தாய்மை நலம் பெண்களின் குழந்தையின்மை பிரச்சனைக்கு இயற்கை வைத்தியம்

பெண்களின் குழந்தையின்மை பிரச்சனைக்கு இயற்கை வைத்தியம்

20

Polycystic-ovarian-syndromeபெண்களுக்கு குழந்தையின்மை பிரச்சனை ஏற்படுவதற்கு மாதவிடாய் சார்ந்த பிரச்சனைகள், கருப்பைக் கோளாறுகள், கருப்பை வலு போன்றவை ஆகும்.

• வெள்ளறுகுச் செடியை தேவையான அளவு எடுத்து மாதவிடாயின் முதல் மூன்று நாட்கள் எலுமிச்சை அளவு அரைத்து நீரில் கலந்து குடித்து வந்தால் மாதவிடாய்க் கோளாறுகள் குறையும்.

• அரச மரத்தின் இலை, பட்டை, வேர், விதை இவற்றை இடித்துபொடியாக்கி வைத்துக்கொண்டு கஷாயம் செய்து அருந்தி வந்தால் கருப்பைக் கோளாறுகள் குறையும்.

• அருகம்புல் சாறு காலை உணவுக்கு முன் குடிக்கவும். செவ்வாழை பழம் மதிய உணவுக்கு பின் சாப்பிடவும். மாதுளம்பழச் சாறு இரவு உணவுக்கு பின் குடித்து வர கருப்பை வலுப்பெறும்.

• 48 நாட்கள் தொடர்ந்து பசலைக்கீரையை (கணவன், மனைவி இருவரும்)உணவில் சேர்த்து கொண்டால் கர்ப்பப்பை தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் தீரும்.

– சிலருக்கு ஒவ்வாமையாக இருக்கக் கூடும். எனவே, முதலில் தகுந்த மருத்துவரிடம் பரிசோதனை செய்துக் கொண்டு மற்றும் இது உங்களுக்கு எந்த விதத்திலும் பக்கவிளைவுகள் ஏற்படுத்தாது என்பதை உறுதி செய்துக் கொண்டு பயன்படுத்துங்கள்.