Home உறவு-காதல் ஆண்கள் தான் முதலில் காதலை கூறவேண்டும் என்று பெண்கள் காத்திருப்பது இதற்காக தானாம்…!!

ஆண்கள் தான் முதலில் காதலை கூறவேண்டும் என்று பெண்கள் காத்திருப்பது இதற்காக தானாம்…!!

27

images (2)நமது நாட்டில் மட்டுமல்ல அமெரிக்கா, ஐரோப்பிய போன்ற வெளி நாடுகளிலும் கூட பெண்கள் ஆண்களே முதலில் காதலை வெளிபடுத்தட்டும் என்று தான் பெண்கள் எண்ணுகின்றனர். “பசங்கள காத்துக்கெடக்க வைக்கிறதுல என்ன ஒரு ஆனந்தம்ன்னு தெரியல..” இதற்கு சில பல காரணங்களும்
இருக்கிறது என்று பெண்கள் கூறுகிறார்கள்.

அதாவது ஆண்கள் தான் காதலை முதலில் கூற வேண்டும் என்பது இயற்கை எழுதி வைக்காத முதல் விதியாம். ஆண்களுக்கு வேறு என்ன வேலை இதைவிட, எங்களுக்காக காத்திருக்க முடியாத என்றும் ஒரு குழுவினர் கூறுகிறார்கள். காத்திருப்பது தான் உண்மையான காதல் என்று கிழக்கே போகும் ரயில் காலத்துலேயே சில பெண்கள் இருக்கிறார்கள்.
எ.சி வண்டியே வேணும்ன்னு யாரும் காத்திருக்கிறது இல்லம்மா, ஷேர் ஆட்டோ கிடைச்சா கூட இப்ப பசங்க ஓடிறாங்க… பாத்து சூதானமா இருந்துக்குங்க.

யாசிக்க வேண்டும் என்ற எண்ணம் :
காதலை முதலில் கூற வேண்டியது ஆண்களின் கடமை. அவர்கள் தான் தங்களிடம் யாசிக்க வேண்டும் என்ற எண்ணம் பெண்கள் மத்தியில் இருக்கின்றது. உண்மையிலும் கூட, காதலாக இருந்தாலும் சரி, காமமாக இருந்தாலும் சரி ஆண்கள் தான் பெண்களிடம் யாசிக்கிறார்கள்.

காதலுக்காக என்ன வேண்டுமானாலும் செய்ய வேண்டும்
ஆண்கள் காதலுக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என்று பெண்கள் கருதுகிறார்கள்.

அதற்காக தானே :
பெண்களிடம் ஆண்கள் தங்களை உடலுறவிற்காக மட்டுமே விரும்புகிறார்கள் என்ற எண்ணமும் இருக்கிறது. ஆண்கள் உடலுறவில் நாட்டம் அதிகம் கொண்டவர்கள் தான் ஆனால், அதற்காக மட்டும் எந்த ஆணும் ஓர் பெண்ணை விரும்புவது இல்லை.

துரத்த வேண்டும் :
காதலை கூறி, தங்களிடம் இருந்து காதல் ஒப்புதலை பெற ஆண்கள் தங்களை துரத்த வேண்டும் என்று சில பெண்கள் விரும்புகிறார்கள். (அதிகமா ஓடவிடாதீங்க, நடுவுல வேற வண்டி வந்தா ஏறி போயிடுவாங்க)

ஆண்கள் காத்திருப்பார்கள் :
உண்மையாக காதலித்தால் ஆண்கள் காத்திருப்பார்கள் என்று பெண்கள் எண்ணுகிறார்கள். ஆண்களிடம் விடாப்பிடியான நிலை இருக்கிறது. அதை சோதிக்கவே பெண்கள் இப்படி செய்கிறார்கள்.

எல்லாரும் ஒண்ணு தான் :
“எல்லா ஆம்பளைங்களும் ஒரே மாதரி தான்” என்ற ஒரு எண்ணமும் பெண்களின் மனதில் காலம் காலமாக பதிந்திருக்கிறது. இதுவும் ஓர் காரணம் என்று கூறலாம். “ஒரு பொண்ணு சுமாரா இருந்தா கூட நாம ஒரு அப்ளிகேஷன் போட்டுறோம் பின்ன எப்படி இருக்கும்.” எனவே, யார் ஒருவர் காத்திருந்து காதலை கூறுகிறார்களோ அவர்கள் தான் நேர்மையான, ஒழுங்கான, கடமையான, விசுவாசமான காதலர் என்று நினைக்கிறார்கள் போல.