Home பாலியல் உங்கள் குழந்தைகள் பாலியல் கொடுமைக்கு உள்ளாகாமல் இருக்க சொல்லிக் கொடுக்க வேண்டியவைகள்

உங்கள் குழந்தைகள் பாலியல் கொடுமைக்கு உள்ளாகாமல் இருக்க சொல்லிக் கொடுக்க வேண்டியவைகள்

25

04-1407138845-4-thebadgoodtouch-730x400தற்போது நாட்டில் மக்கள் தொகை அதிகரித்து வருவதை விட, கற்பழிப்பு மற்றும் பாலியல் கொடுமைகள் தான் அதிகம் வளர்ந்து வருகிறது. அந்த கொடுமைகளுக்கு பெண்கள் மட்டுமின்றி, சிறு குழந்தைகள் கூட பலியாகின்றனர். இதற்காக நாட்டின் பல்வேறு இடங்களில் பாலியல் வன்முறைக்கு எதிரான பல போராட்டங்கள் மேற்கொண்டு வந்தாலும், தற்போதைய பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே பாலியல் வன்முறைகளைப் பற்றி சொல்லிக் கொடுக்க வேண்டியது அவசியமாகிறது.
ஏனெனில் குழந்தைகள் ஒழுக்கத்தை கற்றுக் கொள்ள வேண்டுமென்று பெற்றோர்கள் பள்ளிக்கு அனுப்பினால், அங்குள்ளோராலும் குழந்தைகள் பாலியன் கொடுமைக்கு ஆளாகின்றனர். எனவே குழந்தைகள் சிறுவயதிலேயே பாலியல் கொடுமைகளைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது இன்றியமையாதது ஆகிவிட்டது.
இங்கு பெற்றோர்கள் குழந்தைகளுக்கு பாலியல் கொடுமைகளைப் பற்றி சொல்லிக் கொடுக்க சில டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
படங்கள் மற்றும் வீடியோக்கள்.
பொதுவாக குழந்தைகளுக்கு படங்கள் மற்றும் வீடியோக்கள் மூலம் எதை சொல்லிக் கொடுத்தாலும் புரிந்து கொள்வார்கள். அதிலும் தற்போது இணையதளங்களில் குழந்தைகள் புரியும் வகையில், பாலியல் கொடுமைகள் பற்றி விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே அவற்றை குழந்தைகளுக்கு காட்டி சொன்னால், குழந்தைகள் புரிந்து உஷாராகிக் கொள்வார்கள்.

கதை சொல்லுங்கள்.
குழந்தைகளுக்கு கதை என்றால் மிகவும் பிடிக்கும். மேலும் அதனை அவர்கள் மிகவும் ஆர்வத்துடன் கேட்பார்கள். எனவே உங்கள் குழந்தைகளுக்கு புரியும் வண்ணம், செய்கையுடன் பாலியல் கொடுமைகளைப் பற்றி சொல்லுங்கள்.
உதாரணத்தை காட்டுங்கள்.
மற்றொரு முறை, குழந்தைகளுக்கு உதாரணத்தை காட்டுவது. இப்படி உதாரணத்துடன் சொல்லிக் கொடுத்தாலும், குழந்தைக்கு பாலியல் தொல்லை ஏற்படுவதில் இருந்து விடுவிக்கலாம்.
தொடும் முறை.
குழந்தைகளுக்கு ஒருவர் எந்த எண்ணத்தில் தொடுகிறார் என்பதை பெற்றோர்கள் அவசியம் சொல்லிக் கொடுக்க வேண்டும்.
நல்ல எண்ணத்தில் தொடுவது: ஒருவர் பேசும் போது கைகள் மற்றும் கன்னத்தை மட்டும் செல்லமாக கொஞ்சி தொட்டால், அதில் காமம் இல்லை என்று சொல்லுங்கள்.
கெட்ட எண்ணத்தில் தொடுவது: அம்மாவைத் தவிர வேறு யாரேனும் அந்தரங்க உறுப்பை தொட்டாலோ, உடனே தங்களிடம் வந்து சொல்ல வேண்டும் என்றும், இனிமேல் அவர்களுடன் பேசவோ, பழகவோ கூடாது என்றும் சொல்லிக் கொடுங்கள்.
ரகசியமாக தொடுவது.

ரகசியமாக தொடுவது என்பது, குழந்தைகளை பாலியல் கொடுமைக்கு உட்படுத்தும் வகையில் செய்வதாகும். அதாவது குழந்தையிடம் தவறாக நடந்துவிட்டு அல்லது கற்பழித்துவிட்டு, யாரிடமும் இதை சொல்ல வேண்டாம் என்று யாரேனும் சொன்னால், அதை மறைக்காமல் உடனே வந்து தங்களிடம் சொல்ல வேண்டும் என்று சொல்லுங்கள்.
வெளிப்படையாக பேச சொல்லுங்கள்.
முக்கியமாக குழந்தைகளை வெளிப்படையாக, எப்போதும் அஞ்சாமல் பேச சொல்லுங்கள். மேலும் பள்ளி முடிந்து வந்ததும், அவர்களிடம் அன்றாடம் பள்ளியிலோ அல்லது அந்நாளிலோ நடந்ததை மறைக்காமல் சொல்லும் பழக்கத்தை மேற்கொள்ளுங்கள். இதன்மூலம் அவர்களின் நிலையை பெற்றோர்கள் அறிந்து கொள்ள முடியும்.
‘முடியாது’ என்பது அவசியம்.
குழந்தைகளிடம் யாரேனும் வந்து சாப்பிட வாங்கித் தந்தாலோ அல்லது எங்கேனும் அழைத்துச் செல்கிறேன் என்று சொன்னாலோ, சற்றும் அஞ்சாமல் முடியாது என்று சொல்லச் சொல்லுங்கள். மேலும் அது தான் நல்லது என்றும் சொல்லிக் கொடுங்கள்.
அந்தரங்க உறுப்பு பற்றி சொல்லுங்கள்.
குழந்தையாக இருக்கும் போதே, அவர்களுக்கு அந்தரங்க உறுப்பு பற்றி சொல்லிக் கொடுக்க வேண்டும். மேலும் அந்த இடத்தை யாரும் தொட அனுமதிக்கக்கூடாது என்றும் சொல்லிக் கொடுங்கள். இதன் மூலம் அவர்கள் உஷாராவார்கள்.
ஆடையில்லாமல் இருக்கக்கூடாது.
தற்போது குழந்தைகளை யாரும் குழந்தையாக பார்க்காததால், அவர்களை ஆடையின்றி எப்போதும் இருக்கக்கூடாது என்று சொல்லுங்கள். குறிப்பாக வீட்டிற்கு யாரேனும் வந்தால், அப்போது ஆடையில்லாமல் இருக்கவே கூடாது என்று கற்றுக் கொடுங்கள்.
அஞ்சாமல் உதவியை நாடுங்கள்.
ஒருவேளை யாரேனும் உன்னிடம் தவறாக, உனக்கு வலிக்கும் வகையில் மிரட்டி நடந்து கொண்டால், அப்போது சிறிதும் அஞ்சாமல் சப்தத்தை எழுப்புங்கள். அது யாராக இருந்தாலும், அவருக்கு அஞ்சாமல் கத்துங்கள்