Home பாலியல் பெண்கள் மார்பக முதிர்ச்சியோடு பூப்படைய ஆரம்பிப்பது போல ஆண்கள்

பெண்கள் மார்பக முதிர்ச்சியோடு பூப்படைய ஆரம்பிப்பது போல ஆண்கள்

23

tpnm4.2பெண்கள் மார்பக முதிர்ச்சியோடு பூப்படைய ஆரம்பிப்பது போல ஆண்கள் விதைகளின் முதிர்ச்சியோடு பூப்படைய ஆரம்பிப்பார்கள்.

விதைகள் சற்றுபெரிதாகி முதிர்ச்சியடையத் தொடங்கும் , அத்தோடு ஆணுறுப்பும் சற்றுபெரிதாகும்.

தொடர்ந்து பெண்களைப் போலவே ஆண்களிலும் குறிப்பிட்ட இடங்களில் மயிர் வளரும் குறிப்பாக பிறப்புறுப்புக்கு மேலே மற்றும் அக்குள்பகுதிகளில்.

ஆனால் பெண்களில் இருந்து வேறுபடும் முகமாக முகம்நெஞ்சுப் பகுதிகளிலும் ஆண்களுக்கு மயிர் வளரத் தொடங்கும். ஆண்களுக்குரிய புஜ , மற்றும் நெஞ்சு அமைப்புக்களும் உறுதியாகும்.

பெண்கள் மாதவிடாய் ஆரம்பிப்பது போல ஆண்கள் விந்துகளைவெளியேற்றத் தொடங்குவார்கள். இந்தக் காலகட்டத்தில் ஆண்கள் சுய இன்பம் போன்ற செய்கைகள் மூலம்விந்துகளை வெளி ஏற்றத் தொடங்குவார்கள்.

சில வேளைகளில்தானாகவே விந்துகள் வெளியேறும் குறிப்பாக அதிகாலை வேளையில்.இந்த புதிய மாற்றம் ஆண்களுக்கு ஆரம்பத்தில் அச்சத்தையும் மனஉளைச்சலையும் ஏற்படுத்தலாம்.

பூப்படையும் வயதில் உள்ள ஆண் பிள்ளைகளுக்கு தானாக விந்து வெளியேறும் என்பது பற்றி அறிவுரைகள் வழங்கி அது சாதாரணமான ஒன்று என்று விளக்கப் படவேண்டியது சுற்றத்தாரின் கடமையாகும்.

பெண்களைப் போலவே ஆண்களும் பூப்படையும், காலத்தில் சடுதியான வளர்ச்சியைக் காண்பிப்பார்கள்.

இங்கே பெண்கள் முதலில் பூப்படையத் தொடங்குவதாலே சிறுவயதில் ஆண் பிள்ளைகளை விட பெண் பிள்ளைகள் சற்று உயர்வாக இருக்கக் காரணமாகும்