Home பாலியல் 10 நிமிடத்திலேயே விந்து வெளி வந்து விடுகிறது. அவருக்கோ அதிக நேரம் செக்ஸ் பண்ண ஆசை....

10 நிமிடத்திலேயே விந்து வெளி வந்து விடுகிறது. அவருக்கோ அதிக நேரம் செக்ஸ் பண்ண ஆசை. சீக்கிரம் விந்து வெளி வராமல் இருக்க

84

solution-for-early-exposure-of-sperm03-615x448விந்து முந்துதலை ஆங்கிலத்தில் Pre mature Ejaculation என்பர். முதலில் இது ஒரு பாலியல் பிரச்சினையே கிடையாது. நீங்கள் குறிப்பிட்ட 10 நிமிடங்கள் என்பது கூடுதலானது. கணவருடனான உறவில் உங்களுக்கு திருப்தி இல்லை என்பது புரிகிறது. நீங்கள் முன் விளையாட்டுக்களில் (Fore Play) கூடுதல் கவனம் செலுத்துங்கள். செக்ஸ் உறவின் போது அவருடன் தொடர்பில் இருங்கள்.

உறவின் போது பெண் தனது உணர்வின் உச்ச கட்டத்தை எய்துவ தற்கு முன்னரே ஆணுக்கு உணர்வின் உச்ச கட்டம் எட்டி விந்து வெளியேறிவிடுவதைத்தான் விந்து முந்துதல் என்கிறோம்.

விந்து முந்துவதாகக் கருதும் ஆண்களுக்கு சராசரியாக 1.8 நிமிடங் களில் வெளியேறியது.

எவ்வித பிரச்சனையும் இல்லை, சாதாரணமாக வெளியேறுகிறது எனக் கருதும் ஆண்களுக்கு 7.3 நிமிடங்கள் தாக்குப் பிடிக்கத்தக்க தாக இருந்தது.

இது ஒரு பரவலான பிரச்சினை ஆன போதும் இதற்கான அடிப்படைக் காரணம் தெளிவாகப் புரியவில்லை. இருப்பினும் உயிரியல் காரணங்களும் மனோவியல் காரணங்களும் இணைந்தே இருப்பதை வைத்தியர்கள் உணர்கிறார்கள். இதனால்தான், இதற்கான சிகிச்சையும் கூட பல் வழிப்பட்டதாகவே அமைகிறது.

உறவின் போது நிதானத்தைக் கடைப்பிடித்து, செயல் முறைகளில் விந்து முந்துதலுக்கு இடம் அளிக்காத மாற்று முறைகளைக் கையாள்வது நல்ல பலனைக் கொடுக்கிறது. இதுதவிர சில மருந்து மாத்திரைகளும் பயன்படுத்தப்படுகின்றன.

இவை தவிர, சில வெளிப் பூச்சு களிம்புகளும் பலன் அளிக்கும் என நம்பப்படுகிறது. விந்து முந்தும் பிரச்சினை உள்ள ஆண்களின் உறுப்பின் முனையில் உள்ள மொட்டுப் பகுதியானது ஏனையவர்களதை விட தூண்டப்படும் போது கூடியளவு உணர் வினைத்திறனைக் கொண்டிருப்பதே முந்துவதற்குக் காரணம் என்று நம்பப்படுகிறது.