Home உறவு-காதல் உங்கள் மனைவியை உங்களுக்கு ஏற்ற சிறந்த மனைவியாக மாற்றுவது எப்படி?

உங்கள் மனைவியை உங்களுக்கு ஏற்ற சிறந்த மனைவியாக மாற்றுவது எப்படி?

31

images (2)காதலில் விழுவது என்பது சுலபம். ஏனெனில் காதலுக்கு கண்ணில்லை. ஆனால் காதல் என்ற ஒன்று வந்துவிட்டால், எதிர்காலத்தைப் பற்றி நினைக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. ஏனெனில் சுலபத்தில் கண்மூடித்தனமாக வரும் காதல், திருமணத்திற்கு பின்னும் இருவரும் நீண்ட நாட்கள் சந்தோஷமாக காதலர்களாக வாழ வேண்டுமெனில், இருவருக்கிடையே ஒரு நல்ல புரிதல் மற்றும் இருவரும் இருவருக்கேற்றவாறு இருக்க வேண்டும். பொதுவாக பார்த்ததும் வரும் காதலானது, காதலிப்பவரைப் பற்றி எந்த ஒரு விஷயமும் தெரியாமல் வரும். இதனால் இந்த காதல் சில சமயங்களில் எளிதில் முறிய வாய்ப்புள்ளது. ஆனால் நன்கு புரிந்து, பிடித்ததை இருவரும் பகிர்ந்து கொண்டு, பின்னர் வரும் காதல் மிகவும் வலுவாக இருக்கும். இருப்பினும் அவற்றில் சில மனஸ்தாபங்கள் வரும். குறிப்பாக ஆண்களது மனதிற்கேற்ப பெண்கள் நடப்பது என்பது சற்று கடினம். ஏனெனில் ஆண்களுக்கு திருமணம் என்ற ஒன்று நெருங்கும் போது, அவர்களது கடமைகள் மற்றும் பொறுப்புக்கள் அதிகம் இருக்கும். அதேப் போன்று காதல் திருமணமாக இருந்தால், ஆண்களின் குடும்பத்தினருக்கு ஏற்ற வகையில் பெண்கள் நடந்தால் தான், திருமணமானது எந்த ஒரு பிரச்சனையுமின்றி நடக்கும்.

ஆகவே ஆண்கள் தங்கள் காதலியை திருமணம் செய்வதற்கு முன்னர், அவர்களிடம் இரு விஷயங்களைப் பற்றி ஆலோசிக்க வேண்டும். அவை அவர்களது குடும்பம் மற்றும் பொருளாதாரம். ஏனெனில் அவ்வாறு ஆலோசித்துக் கொண்டால், காதலியை குடும்பத்தினரிடம் அறிமுகப்படுத்தும் போது, அது அவர்களுக்கு குடும்பத்தினரை மடக்குவதற்கு எளிதாக இருக்கும். இதுப் போன்று ஆண்கள் காதலியை தங்களுக்கு ஏற்றவாறு மாற்றுவதற்கு பல விஷயங்கள் உள்ளன. அவை என்னவென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, அதற்கேற்றாற் போல் காதலியிடம் கலந்தாலோசித்து நடந்தால், திருமண வாழ்க்கை செழிப்புடன் இருக்கும்.

நேரம் செலவழித்தல்
தோழி/காதலியாக இருக்கும் போது, அவர்கள் அவர்களது தோழிகள் அல்லது நண்பர்களுடன் அதிக நேரத்தை செலவழிக்கலாம். ஆனால் இருவரும் திருமணம் செய்து கொள்ள நினைத்தப் பின்னும், அதேப் போல் இருந்தால், நன்றாக இருக்காது. ஆகவே அவர்களிடம் அதைச் சொல்லி புரிய வைப்பதோடு, வேலையில்லாத நேரத்தில் இருவரும் ஒன்றாக சேர்ந்து வெளியே சென்று, மனம் விட்டு பேசி மகிழ விரும்புவதாகவும் சொல்லலாம்.

செலவுகளை பகிர்தல்
இன்றைய காலத்தில் கணவன்/மனைவி இருவரும் தான் செலவுகளை பகிர்ந்து கொள்கின்றனர். எனவே இத்தகைய பழக்கம் காதலிக்கும் போது இல்லாவிட்டாலும், திருமணத்திற்கு பிறகு, இருவரும் குடும்ப செலவுகளை பகிர வேண்டுமென்ற எண்ணத்தை சொல்ல வேண்டும்.

அழகை பராமரித்தல்
தற்போதுள்ள ஆண்களுக்கு நன்கு அழகைப் பராமரித்து வரும் பெண்களை மிகவும் பிடிக்கும். ஆகவே ஒருவேளை உங்கள் காதலி, இந்த மாதிரி இல்லாமல் இருந்தால், அவர்களுக்கு அழகின் முக்கியத்துவத்தை கூறி, பின்பற்றுமாறு சொல்லலாம்.

பெற்றோர்களை சந்தித்தல்
காதலியை பெற்றோர்களிடம் அறிமுகப்படுத்துவது என்பது மிகவும் கடினமான ஒன்று. ஆகவே பெற்றோர்களிடம் அறிமுகப்படுத்தும் முன், அவர்களுக்கு குடும்ப உறுப்பினர்களின் குணங்களைப் பற்றி முன்பே சொல்லி விட வேண்டும்.

திருமணம் என்றால்….
இது மிகவும் முக்கியமான ஒன்று. ஏனெனில் இருவருக்கும் திருமணம் என்பதற்கான அர்த்தம் ஒன்றியிருந்தால் தான், எந்த நிலையிலும் இருவரும் சந்தோஷமாக இருக்க முடியும். ஆகவே இதனைப் பற்றி தவறாமல் கலந்தாலோசிக்க வேண்டும்.எதிர்காலம் திருமணம் செய்வதற்கு முன் வாழ்வில் ஒரு நிலையில் இருக்க வேண்டும் என்று ஆண்கள் நினைப்பர். அத்தகைய எதிர்காலத்தை பற்றி நினைக்கும் போது, அதை காதலியிடம் சொல்வதோடு, அவர்களது எதிர்காலத்தைப் பற்றியும் நினைக்க வேண்டும். முக்கியமாக காதலியும் உங்களது எதிர்காலத்தைப் பற்றி நினைக்க வேண்டும்.

மொழிப் பிரச்சனை
ஒருவேளை இருவரும் வெவ்வேறு மொழியினத்தவராக இருந்தால், இருவரும் பேசிக் கொள்வது, எண்ணங்களைப் பகிர்வது என்பது மிகவும் கடினமாகிவிடும். ஆகவே காதல் செய்யும் ஆரம்பத்தில் முதலில் செய்ய வேண்டியது என்னவென்றால், ஆண்கள் தங்கள் தாய்மொழியை காதலிக்குக் கற்றுக் கொடுப்பது தான். அதுமட்டுமின்றி அவர்களது தாய்மொழியையும் கற்றுக் கொள்ள வேண்டும்.