Home ஆண்கள் ஆண்குறி பற்றிய தவறான எண்ணங்கள்

ஆண்குறி பற்றிய தவறான எண்ணங்கள்

26

imagesமுதலில் ஆண் பிறப்புறுப்பு பெரிதாக இருந்தால்தான் பெண்ணை திருப்திப்படுத்த முடியும் என்பதை எடுத்துக் கொள்வோம். ஆண் பிறப்புறுப்பு விறைப்புத்தன்மை இல்லாத சாதாரண நேரங்களில் எவ்வளவு சிறியதாக இருந்தாலும், அதுபற்றி யாரும் கவலைப்படுவதில்லை. ஏனெனில், அப்போது அதனுடைய வேலை, சிறுநீர் கழிப்பது மட்டும்தான். ஆனால், விறைப்புத்தன்மை அடைந்த பிறகு, எந்த அளவுக்கு அது நீளமாக, தடிமனாக இருக்கிறதோ, அந்த அளவுக்குப் பெண்ணைத் திருப்திப்படுத்த முடியும் என்னும் நம்பிக்கை உள்ளதால், விறைப்புத் தன்மை அடைந்த நிலையில், ஆண் பிறப்புறுப்பு எவ்வளவு நீளம் இருக்கிறது என்பது முக்கியமாகிவிடுகிறது. அதாவது, பெண் பிறப்புறுப்பின் உட்பகுதி இடைவெளி இல்லாமல் நிரப்பப்படும்போதுதான், பிறப்புறுப்பின் உட்புறச் சுவர்களில் உராய்வு ஏற்பட்டு, அவள் உச்சகட்ட இன்பத்தைப் பெற்று திருப்தியடைகிறாள் என்பது நம்பிக்கை. அதைவிட முக்கியமானது, பெண்ணை திருப்திப்படுத்துவது என்பது ஆண்மையின் அடையாளமாகவும், வீரத்தின் அடையாளமாகவும் வேறு கொள்ளப்படுகிறது. இதனடிப்படையில்தான் இந்த நம்பிக்கை உருவாகியுள்ளது. பெண்களுக்கும் இந்த நம்பிக்கை உள்ளது என்பது இதற்கு மேலும் வலு சேர்த்துவிட்டது. இனி விஞ்ஞான ரீதியான முடிவுகளைப் பார்ப்போம்.

சாராசரியாக உணர்ச்சிவசப்படாத நிலையில், அதாவது விறைப்பற்ற நிலையில் ஆண் பிறப்புறுப்பு 2 அங்குலம் முதல் 4 அங்குலம் வரை உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது. விறைப்படைந்த நிலையில், 5 அங்குலம் முதல் 6 அங்குலம் வரை உள்ளது. ஆனால், பெண் பிறப்புறுப்பின் முதல் 2 இன்ச் பகுதிகளில்தான் அவள் து}ண்டப்பட்டு செக்ஸ் உணர்ச்சிகளை அடைகிறாள் என்று விஞ்ஞான ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. ஏனெனில், பெண்ணின் செக்ஸ் உணர்ச்சி நரம்புகள் இந்த பகுதியில்தான் உள்ளன. அதையும் கடந்து உள்ளே எவ்வளவு தூரம் சென்றாலும், பிரயோஜனமில்லை. எனவே, ஒரு பெண்ணின் செக்ஸ் உணர்ச்சிகளைத் தூண்ட, ஒரு ஆணுக்கு விறைப்படைந்த நிலையிலும்கூட 2 இன்ச் பிறப்புறப்பு போதும். ஆனால் இதைவிட அதிகமான நீளம்கொண்டதாகத்தான் உலகம் முழுக்க ஆண்களுக்கு பிறப்புறுப்பு அமைந்துள்ளது. எனவே ஆண் பிறப்புறுப்பு சிறியதாக உள்ளதா, பெரியதாக உள்ளதா என்பது உடலுறவில் ஒரு பிரச்னையே இல்லை.