Home சூடான செய்திகள் ஆணுக்கும், பெண்ணுக்கும் செக்ஸ் ‘மூட்’ அதிகமாக இருக்கும் நாள் எது?

ஆணுக்கும், பெண்ணுக்கும் செக்ஸ் ‘மூட்’ அதிகமாக இருக்கும் நாள் எது?

34

couples-sex-days (1)தாம்பத்திய உறவு கொள்ள விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை சரிப்படாதாம். வார நாளான வியாழக்கிழமைதான் உகந்த நாள், என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அதுவும் வியாழக்கிழமை காலை வேளைதான் அதுக்கு ஏற்ற நாளாம் என, செக்ஸாலஜிஸ்ட்கள் அடித்துக் கூறுகின்றனர்.

‘யாரும்…எப்ப வேணாலும் வைத்துக்கொள்ளக்கூடிய சமாச்சாரம் செக்ஸ்’ என்று செக்ஸாலஜிஸ்டுகள் ஒருபுறம் அடித்துக் கூறினாலும், வியாழக்கிழமை காலை வேளைதான் “அது”க்கு சிறந்த தினம் என கண்டுபிடித்துள்ளனர் ஆய்வாளர்கள்!. தாம்பத்திய உறவு கொள்ள ஏற்ற நாள் என்பது குறித்து சமீபத்தில் லண்டன் ஸ்கூல் ஆப் எக்கானமிக்ஸ் ஆய்வு மேற்கொண்டது. அதன்படி, வியாழக்கிழமை அன்று தான், ஆண்களுக்கு செக்ஸ் ‘மூட்’ஐ கிளப்பும் ‘டெஸ்டாஸ்டெரோன்’ அதிகமாக சுரக்கிறதாம்.

அதே போல பெண்களுக்கும் அந்த ‘மூட்’ஐ கிளப்பும் ‘ஆஸ்ட்ரோஜன்’ ஐந்து மடங்கு அதிகமாக சுரக்கிறதாம். அன்றைய தினம் காலை வேளைகளில்தான் ஆணுக்கும், பெண்ணுக்கும் உறவுக்கான ஹார்மோன்களை தூண்டும் ‘ஹாரிஸ்டல்’ – அளவு அதிகமாக இருக்குமாம். எனவே, அன்றைய தினம் அதிகாலை தம்பதிகள் தங்கள் சந்தோஷ சமாச்சாரங்களைத் தொடங்கலாம் என, ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வு குறித்து கருத்து தெரிவித்த செக்ஸாலஜிஸ்ட் ஒருவர், “வாரத்தின் மத்தியில் வியாழக்கிழமை வருவதால் அன்றைய தினம் அலுவலக மற்றும் இதர டென்ஷன்கள் ஓய்ந்து இருக்கும் என்பதால், மனம் ‘”அது”க்கு ரொம்பவே தயாராக இருக்கிறதோ என்னவோ!” என்று கூறியுள்ளார். இதே போல் அமெரிக்காவில் நடைபெற்ற ஆய்வு ஒன்றில் மகப்பேறு மருத்துவமனைகளில் வியாழக்கிழமைகளில்தான் அதிகளவு குழந்தை பிறப்பு நடைபெறுவதாக கண்டறியப்பட்டுள்ளது.