Home பெண்கள் தாய்மை நலம் தாய்மையடைவது எப்படி?

தாய்மையடைவது எப்படி?

40

25-infertility-treatment1-300தாய்மையடைய விரும்பும் பெண்கள் முதலில் தாய்மையடைவது எப்படி நிகழ்கிறது என்பதை விஞ்ஞானபூர்வமாக தெரிந்துகொள்ள வேண்டும். தாய்மையடைய அடிப்படையாக இருக்கும் உயிரணு ஆணின் உடலில் வெவ்வேறு பகுதியிலிருந்து உருவாகிறது. விரைப்பையிலிருந்து 5 சதவீதம். `செமைனல் வெஜைக்கிள்’ என்ற சுரப்பியிலிருந்து 55 சதவீதம். `பிராஸ்டேட்’ சுரப்பியிலிருந்து 35 சதவீதம். `கூப்பர்ஸ் கிளான்ட்’ போன்ற சுரப்பிகளிலிருந்து 5 சதவீதம்…! இப்படி வெவ்வேறு பகுதியிலிருந்து வருபவை அனைத்தும் உறவு நேரத்தில் கண் இமைக்கும் நேரத்தில் ஒரே இடத்தில் கலந்து ஒன்றாய் பெண் உறுப்புக்குள் செல்கிறது.

ஒரு பெண் தாய்மையடைய உயிரணு மட்டும்தானே தேவை. இப்படி விதவிதமாய் திரவங்கள், விதவிதமான இடங்களிலிருந்து வர வேண்டிய அவசியம் என்ன?-என்ற கேள்வி உங்களுக்குள் எழத்தான் செய்யும். ஐந்து சதவீத உயிரணு தன் பணியை சிறப்பாய் செய்ய, இயற்கை ரசாயனங்களும், ஊக்கிகளும் தேவைப்படுகின்றன. அதைத்தான் இதர 95 சதவீத திரவமும் செய்கிறது.
உயிரணு பெண்ணுறுப்புக்குள் சென்றடைந்ததும் முதலில் கெட்டியாகும். பின்பு திரவம் போல் நீர்த்துப்போகும். இந்த செயல்பாடுகள் நிகழ்ந்த பின்புதான் உயிரணு நீச்சலடித்துச் செல்ல முயற்சிக்கும். பெண்ணின் உறுப்பில் காரத்தன்மைகொண்ட அமிலம் உண்டு. அந்த காரத்தன்மை, உயிரணுவின் உயிர்த்தன்மையை குறைத்துவிடாமல் இருக்க உயிரணுவோடு கலந்திருக்கும் திரவம் செயல்பட்டு, உயிரணு வேகமாக நீந்திச் செல்ல உதவும். ஒரு முறை உடலுறவு கொள்ளும்போது வெளியாகும் உயிரணுவில் 2 கோடி முதல் 10 கோடி உயிரணுக்கள் இருக்கும். அவைகளுக்கு கண் கிடையாது. அவை நீச்சல் அடித்து முண்டியடித்து செல்ல `பிரக்டோஸ்’ என்ற சக்தி உதவும். அதனால் உயிரணு மட்டுமின்றி இதர திரவங்களும் கருத்தரிப்பிற்கு மிக அவசியம்.

உறவு முடிந்ததும் அனைத்தும்(விந்து) வெளியே வந்து விடுகிறது என்று நீங்கள் எண்ணலாம். ஏன் என்றால் இயற்கையாகவே ஐந்து சதவீத உயிரணுக்கள் மட்டுமே செயலாக்கத்திற்காக உள்ளே செல்லும். அதற்கு துணைபுரியும் 95 சதவீத திரவமும் வெளியே வந்துதான் ஆகவேண்டும். அதை பார்த்துவிட்டுத்தான் நீங்கள் அனைத்தும் வெளியே வந்துவிடுவதாக நினைக்கிறீர்கள். உறவு முடிந்ததும் சிறிது நேரம் எழுந்திருக்காமல் படுத்துக்கொள்ளுங்கள். மேலும் உறவு முடிந்த உடனே சோப்பு பயன்படுத்தி உறுப்பு பகுதியை சுத்தப்படுத்தவும் வேண்டாம்.