Home பெண்கள் உடல் கட்டுப்பாடு எடையை குறைக்க வைக்கும் இந்திய உணவுகள்

எடையை குறைக்க வைக்கும் இந்திய உணவுகள்

31

தொப்பையை-குறைக்க-இவைகள்-தான்-சிறந்த-வழிகள்நீங்கள் உடல் எடையால் அதிகம் அவஸ்தைப்படுகிறீர்களா? இதற்காக நிறைய முயற்சிகளை எடுத்துள்ளீர்களா? இருப்பினும் எவ்வித பலனும் கிடைத்ததில்லையா? கவலையை விடுங்கள். ஏனெனில் எப்போதுமே ஒன்றைப் பெற நினைக்கும் போது கடுமையாக செயல்படுவதை விட, ஸ்மார்ட்டாக செயல்பட்டால், நிச்சயம் அதனை விரைவில் பெற முடியும்.எனவே உடல் எடையைக் குறைக்க கடுமையாக முயற்சிக்காமல், சிம்பிளான வழிகளைத் தேடுங்கள். உங்களால் தினமும் நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்ய முடியவில்லையா? பரவாயில்லை. மாறாக, கடைகளில் விற்கப்படும் உணவுகளை வாங்கி சாப்பிடுவதைத் தவிர்த்து, உடல் எடையைக் குறைக்க உதவும் அதே சமயம் விலைக் குறைவிலும் கிடைக்கும் உணவுப் பொருட்களை அன்றாட உணவில் சேர்த்து வாருங்கள்.

அதற்கு அந்த உணவுகள் என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். எனவே tamil beauty tips.com உடல் எடையைக் குறைக்க உதவும் விலைக் குறைவில் கிடைக்கும் சில இந்திய உணவுப் பொருட்களை பட்டியலிட்டுள்ளது. அதைப் படித்து அவற்றை தவறாமல் உங்கள் உணவில் சேர்த்து வந்தால் நல்ல பலனை விரைவில் பெறலாம்.

1. சிறுதானியங்கள்

சிறுதானியங்களான கம்பு, கேழ்வரகு போன்றவற்றில் நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. இத்தகைய தானியங்களை நம் முன்னோர்கள் அதிகம் எடுத்து வந்ததால் தான், அவர்கள் உடல் பருமன் பிரச்சனையால் அவஸ்தைப்படாமல் இருந்தார்கள். எனவே இவற்றை முடிந்தால் அன்றாட உணவில் சேர்த்து உடல் எடையை குறையுங்கள்.

2. பாசிப்பருப்பு

பாசிப்பருப்பில் கலோரி குறைவாக இருப்பதால், உடல் எடையைக் குறைக்க நினைப்போர், தினமும் உணவில் இதனை சேர்த்து வருவது நல்லது. மேலும் இதனால் உடலுக்கு வேண்டிய வைட்டமின்களான ஏ, ஈ மற்றும் சி அதிகம் கிடைக்கும். எனவே சாம்பார் செய்யும் போது துவரம் பருப்புக்கு பதிலாக பாசி பருப்பை பயன் படுத்தலாம்

3. மஞ்சள்

அனைத்து வீடுகளிலும் இருக்கும் ஒரு பொருள் தான் மஞ்சள். இந்த மஞ்சள் கூட உடலில் தங்கியுள்ள கொழுப்புக்களை கரைக்கும். அதற்கு தினடும் ஒரு டம்ளர் பாலில் 1 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து பருக வேண்டும்.

4. மோர்

மோரில் 2.2 கிராம் கொழுப்புக்களும், 99 கலோரிகளும் தான் உள்ளது. எனவே இவற்றை அன்றாடம் பருகி வந்தால், உடலில் கொழுப்புக்கள் சேர்வது குறைவதோடு, உடலும் ஆரோக்கியமாக இருக்கும். பச்சை மிளகாய், கொத்தமல்லி சேர்த்து சாப்பிட்டால் மிகவும் நல்லது

5. தேன்

உடல் பருமனால் அவஸ்தைப்படுபவர்களுக்கு ஒரு சிறந்த மருத்துவ குணம் வாய்ந்த ஒரு பொருள் தான் தேன். இத்தகைய தேனை சர்க்கரைக்கு பதிலாக சேர்த்து வந்தால் தொப்பை குறைவதோடு, சருமமும் பொலிவோடு இருக்கும்.

6. முட்டைக்கோஸ்

முட்டைக்கோஸில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே இவற்றை உடல் பருமன் உள்ளவர்கள் உட்கொண்டு வந்தால், தொப்பை வளர்வது குறையும். அதுமட்டுமின்றி, அன்றாட உணவில் சேர்த்து வர தொப்பையும் குறைய ஆரம்பிக்கும்.

7. கடுகு எண்ணெய்

சமைக்கும் போது உணவில் வெஜிடேபிள் ஆயிலை சேர்ப்பதற்கு பதிலாக, கடுகு எண்ணெயை சேர்த்து வந்தால், உடலில் செரிமான மண்டலம் சுத்தமாகி கொழுப்புக்கள் வெளியேற ஆரம்பிக்கும். இதனால் உடல் எடையும் குறையும்.

8. பூண்டு

பூண்டில் சல்பர் அதிகம் இருப்பதால், அவை கொழுப்புக்களை உடையச் செய்து, உடலில் சேர்வதைத் தடுக்கும். அதற்கு ஒவ்வொரு முறை உணவு உட்கொண்ட பின்னரும் ஒரு பூண்டை சாப்பிட வேண்டும். இப்படி பச்சையாக சாப்பிட்டால், இதன் பலன் விரைவில் தெரியும்.

9. ஓட்ஸ்

ஓட்ஸில் கலோரிகள் குறைவாக இருப்பது மட்டுமின்றி, உடலுக்கு ஆற்றலையும் தருவதால், இதனை அன்றாடம் காலை உணவாக எடுத்து வருவது நல்லது.

10. தக்காளி

 
விலைக் குறைவில் கிடைக்கும் உணவுப் பொருட்களில் ஒன்று தான் தக்காளி. இத்தகைய தக்காளியில் கலோரிகள் குறைவாக இருப்பதுடன், இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், இது செரிமான மண்டலத்திற்கு மிகவும் நல்லது