Home குழந்தை நலம் குழந்தையின் எடை அதிகமா இருக்கா? முதல்ல கவனிங்க…

குழந்தையின் எடை அதிகமா இருக்கா? முதல்ல கவனிங்க…

29

கர்ப்பம் தரிக்கும் போது மருத்துவர்கள் ஆலோசனை என்னவென்று கேட்டால், சரியான எடை இருக்க வேண்டும் என்பது தான். மேலும் குழந்தை ஆரோக்கியமாக இருக்க எளிதான உடற்பயிற்சியை தினமும் செய்ய வேண்டும் என்றும் சொல்வார்கள். ஏனெனில் குழந்தை கருவில் இருக்கும் போது அதிக எடையோடு இருந்தால், பிறந்த பின்னும் குழந்தை குண்டாக இருக்கும். ஆகவே குழந்தையின் எடை அதிகமாக இல்லாமல் சரியான அளவு இருக்க குழந்தையை பிறந்ததிலிருந்தே சரியாக பராமரிக்க வேண்டும். அதற்கு குழந்தை நல மருத்துவர் கூறும் பராமரிப்பு அறிவுரைகளை படித்து தெரிந்து கொள்ளுங்களேன்…

1. குழந்தை கருவில் இருக்கும் போதே தினமும் உடல் எடையை தாயானவள் பரிசோதிக்க வேண்டும். ஒரு வேளை கருவில் இருக்கும் போது தாயின் எடை அதிகரித்தால், பிறந்த பின் குழந்தையும் அதிக எடையுடன் இருக்கும். ஆகவே அப்போது குழந்தையின் நலத்துக்காக தாய், உணவில் ஒரு சில டயட் அல்லது எளிய உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். இதனால் குழந்தை அதிக எடையுடன் இல்லாமல் இருக்கும்.

2. குழந்தை அதிக எடையோடு இல்லாமல் இருக்க, குழந்தை பிறந்த பின் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். ஏனெனில் தாய்ப்பாலானது பாட்டில் பாலை விட ஆரோக்கியமானது. அவ்வாறு தாய்ப்பால் கொடுத்தால் குழந்தையின் எடை கண்டிப்பாக குறையும். மேலும் அவ்வாறு தாய்ப்பால் கொடுத்தால், குழந்தை பசிக்கு ஏற்றவாறு மட்டுமே குடிக்கும்.

3. சில சமயங்களில் பரம்பரை ஜீன்கள் காரணமாகவும் குழந்தைகள் அதிக எடையுடன் இருக்கும். அதுமட்டுமல்லாமல் குடும்பத்தில் யாராவது அதிக எடையுடன் இருந்தாலும் குழந்தை குண்டாக இருக்கும். ஆகவே அப்போது குழந்தையை குழந்தை நல மருத்துவரிடம் அழைத்துச் சென்று, அவரது ஆலோசனையின் படி மருந்துகளை குழந்தைக்கு கொடுத்து, குழந்தையின் எடையை குறைக்கலாம்.

4. குழந்தை அழ ஆரம்பித்தால் சில தாய்மார்கள் உடனே பாலைக் கொடுப்பார்கள். முதலில் தாய்மார்கள் குழந்தை பசிக்கு மட்டும் அழாது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். அவ்வாறு தெரியாமல் குழந்தைக்கு அழும் போதெல்லாம் பாலைக் கொடுத்தால், குழந்தைக்கு அதுவே பழக்கமாகிவிடும். ஆகவே அப்போது அவர்களை சமாதானப்படுத்த வேறு வழிகளை மேற்கொள்ள வேண்டும். குழந்தை அதிக எடையுடன் கொழுக் மொழுக் என்று இருந்தால் நன்றாகத் தான் இருக்கும், ஆனால் அது குழந்தையின் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.

5. குழந்தையின் எடை அதிகமாக இருக்கும் போது குழந்தைக்கு சிறிது டயட் ஆனது தேவைப்படுகிறது. ஆகவே அப்போது குழந்தைக்கு மருத்துவரின் ஆலோசனையின் படி, ஜூஸ் மற்றும் சிறிது திட உணவுகளை கொடுக்கலாம். அதற்காக ஓவர் டயட் கூடாது. சில பெற்றோர்கள் குழந்தைக்கு கிரீம் பால் மற்றும் வெண்ணெயை கொடுப்பார்கள். அது எதிர்காலத்தில் அவர்களுக்கு மிகவும் சிரமத்தை தரும்.

ஆகவே மேற்கூறியவற்றையெல்லாம் மனதில் கொண்டு, குழந்தையின் உணவுப் பொருட்களை, அவர்களது எடையை சரியாக பராமரித்து வந்தால், ஆரோக்கியமாக இருப்பதோடு, குழந்தையும் ஃபிட்டாக அழகாக இருக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.