Home சூடான செய்திகள் நீங்கள் செக்ஸ் உறவில் உட்சாகமுடன் செயல்பட வேண்டுமா?

நீங்கள் செக்ஸ் உறவில் உட்சாகமுடன் செயல்பட வேண்டுமா?

23

Hot-Indian-couple-in-webcam2-300x212சுவாசத்தில் நுழையும் சுத்தமான காற்று நமது மனதையும், உடலை உற்சாகப்படுத்தும். அதுபோல தாம்பாத்யத்தில் உற்சாகமுடன் செயல்பட மூன்று முக்கிய வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கின்றனர் உளவியலாளர்கள்.

முத்தான மூன்று வழிகள்

1. பார்வையாளராக மட்டுமே இருப்பதை தவிர்க்க வேண்டும்
2. உறவுகளுக்கிடையேயான தொடர்பை அதிகரிக்க வேண்டும்
3. ஒருவருக்கொருவர் தவறாக புரிந்து கொள்வதை விடவேண்டும்

பார்வையாளராக இருக்க வேண்டாம்
தாம்பத்யத்தில் இருவரின் பங்களிப்புமே முக்கியமானது. ஒருவர் பார்வையாளராக இருந்து மற்றொருவர் மட்டுமே செயல்புரிந்தால் அது ஓரங்க நாடகம் போல ஆகிவிடும். இருவருமே இணைந்து செயல்புரிவதில்தான் சுவாரஸ்மே உள்ளது. எனவே பார்வையாளராக மட்டுமே இல்லாது பங்களிப்பாளராக இருப்பதும் முக்கியம்.

ஸ்பரிசங்கள் உணர்த்தும்
தகவல் தொடர்பு என்பது தாம்பத்யத்தில் மிகவும் முக்கியமானது. வார்த்தையாகவோ, தொடுகையாகவோ எப்படியாகிலும் உங்கள் துணையுடன் நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டும். எது நன்றாக இருக்கிறது என்பதை உணர்த்துவதில்தான் வெற்றியின் ரகசியம் இருக்கிறது. ஆயிரம் பேச்சு உணர்த்துவதை ஒரு ஸ்பரிசம் புரிய வைத்துவிடும் என்பார்கள். எனவே தாம்பத்யத்தின்போது உங்கள் வாழ்க்கைத் துணைக்கு நீங்கள் என்ன விரும்புகிறீர்கள் என்பதை புரிய வைக்க வேண்டும். பிறகு பாருங்கள் உங்களுக்கு தேவையானவை தானாகவே கிடைக்கும்.

தாம்பத்யத்தில் தொடுகையின் பங்கு முக்கியமானது. தொடத் தொட மலரும் பூக்களைப் போல உங்களின் வாழ்க்கைத்துணை உங்களின் பங்களிப்பை கண்டு உற்சாக மடைவார் என்பது நிச்சயம். அதற்காக ஓவர் ஆக்டிங் தேவையில்லை ஏனெனில் அது முழுவதையும் சொதப்பிவிடும். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து மகிழ்விப்பதில் இருவரின் பங்களிப்புமே சரிசமமாக இருக்க வேண்டும்.

புரிதல் தேவை
தாம்பத்யத்தைப் பொறுத்தவரை யார் பெரியவர் என்ற ஈகோ தேவையற்றது. சரியான புரிந்து கொள்ளும் தன்மையுடன் அணுகினாலே அன்றைக்கு வீட்டில் அமர்க்களம்தான். அதை விடுத்து தன்னுடைய செயல்பாடுதான் சரியானது என்றும் தான் சொல்வதைக் கேட்டால்தான் சரியாக இருக்கும் என்று கூறினாலே அங்கே சிக்கல் எட்டிப்பார்க்க ஆரம்பிக்கும்.

ஸ்பரிசம் என்பது தம்பதியரிடையே உறவின் போது காதலை வெளிப்படுத்தும் உன்னத வழி. ஆனால் தொடாமலேயே காதலை வெளிப்படுத்த முடியுமா? உணர்வு பூர்வமான செய்கைகளினால் காதலை உணர்த்தி பெண்களின் உணர்ச்சிகளை கிளர்ந்தெழச் செய்யமுடியும்.

பூக்களின் வாசம் தரும் இதம்
மலர்களின் சுகந்தம் தரும் இதம் பெண்மையை மலர வைக்கும். காதலை சொல்லாமலேயே சொல்லும் மலர்கள் பெண்களை சரியான மூடுக்கு கொண்டு வரும். கைகள் பேசும் பாஷையை அந்த மலர்கள் பேசும் அப்புறம் பாருங்கள்.

அருகாமையில் அமருங்கள்
துணையின் அருகில் நெருக்கமாக அமருங்கள், தொடவேண்டாம். கூந்தலையும், காதுமடலையும் லேசாக முகர்ந்து பார்த்தாலே போதும். உணர்ச்சி வசப்படத் தொடங்கி விடுவார்கள் பெண்கள். உங்களின் உணர்வுப்பூர்வமான இந்த நெருக்கம் தொடாமலேயே உங்களின் அதீத காதலை வெளிப்படுத்தும். இருவருக்குமிடையே நெருக்கத்தை அதிகரிக்கும்.

பழங்களால் தீண்டுதல்
காதலை வெளிக்கொணரும் மலர்களில் திராட்சைக்கும், ஸ்ட்ராபெரிக்கும் தனி பங்குண்டு. இந்த பழங்களைக் கொண்டு பெண்களில் இதழ்களைத் தீண்டலாம். கைகளால் தீண்டுவதை விட இந்த பழங்களினால் தொடுவது அதீத கிளர்ச்சியை ஏற்படுத்துமாம். அதேபோல் சாக்லேட், கேக் கிரீம்களும், காதலின் உணர்வை வெளிப்படுத்தும் என்கின்றனர் உளவியலாளர்கள்.

பறவையின் இறகு
பெண்களின் மென்மையான உடலை கைகளால் தொடுவதை விட பறவையின் இறகினால் லேசாக வருடுவது இதமான கிளர்ச்சியை ஏற்படுத்தும். அவர்களின் அந்த கிளர்ச்சி ஆணின் உணர்வுகளையும் அதிகரிக்கும் என்கின்றனர் உளவியலாளர்கள். மென்மையான தோலினை மயிலிறகால் வருடும் போது ஏற்படும் உணர்ச்சிக்கு ஈடு இணையில்லை என்கின்றனர் அவர்கள்.

பேச்சிலேயே கிளர்ச்சியூட்டலாம்
தொட்டுத்தான் உணர்த்த வேண்டும் என்பதில்லை. பேச்சிலேயே கூட கிறங்கடிக்கலாம் என்கின்றனர் உளவியலாளர்கள். காதலை சொல்ல நெருக்கமான ஒரு சூழலில் மென்மையான, ரகசியத்தைப் போல பேசும் பேச்சிலும் கூட கிளர்ச்சியூட்டலாம் என்கின்றனர்.