Home சமையல் குறிப்புகள் இஞ்சி சட்னி

இஞ்சி சட்னி

27

17d11f29-b290-4b3e-99ee-fff25aa7a989_S_secvpfதேவையான பொருள்கள்:

இஞ்சி (நறுக்கியது) – 2 டேபிள்ஸ்பூன்
தேங்காய்த் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்
புளி – நெல்லிக்காய் அளவு
வெல்லம் – நெல்லிக்காய் அளவு
காய்ந்த மிளகாய் – 3
உளுத்தம் பருப்பு – 1/2 டேபிள்டீஸ்பூன்
கடலைப் பருப்பு – 1/2 டேபிள்ஸ்பூன்
பெருங்காயம் உப்பு – தேவையான அளவு

தாளிக்க :

எண்ணெய்,
கடுகு.

செய்முறை:

• 2 டீஸ்பூன் எண்ணெயில் காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பை நன்கு சிவக்க வறுத்து ஆறியதும், மிக்ஸியில், தேவையான உப்பு, பெருங்காயம், சேர்த்து அரைக்கவும்.

• அத்துடன் சிறிது நீர்சேர்த்து நறுக்கிய இஞ்சி, தேங்காய்த் துருவல், புளி, வெல்லம் சேர்த்து நைசாக அரைத்து எடுக்கவும்.

• ஒரு டீஸ்பூன் எண்ணெயில் கடுகு தாளித்து சட்னியில் சேர்க்கவும்.

* சுவையான இந்த சட்னி வயிற்று உபாதைகளை போக்கும்.