Home அந்தரங்கம் கலாச்சாரத்தில் நீலப்படங்களின் தாக்கம்..!! அறிவுபூர்வமான கட்டுரை (பகுதி – 06)

கலாச்சாரத்தில் நீலப்படங்களின் தாக்கம்..!! அறிவுபூர்வமான கட்டுரை (பகுதி – 06)

61

ஈ: இதில் படத்தொகுப்பு (editing) தொழில்நுட்பங்கள் நிறைய உள்ளன. நீலப்படங்கள் வழக்கமான திரைப்படங்களைப் போலத்தான் சிறு சிறு காட்சி அமைப்புகளாக எடுக்கப்பட்டு வெட்டி ஒட்டப்படுகின்றன. ஆனால் படத்தின் தொடர்ச்சி எதோ ஆண் அதீத ஆற்றலுடன் தொடர்ந்து புணர்ச்சியில் ஈடுபட்டு பெண் பலவித சிரமத்திற்கு ஆட்படுத்தி இறுதியில் எழுச்சி உச்சம் அடைவதாகக் காட்டப்படுகிறது. இது புணர்ச்சியில் வெற்றிப்பெற்ற ஆண்பிம்பம் என்கிற ஒவ்வொரு ஆணிற்குள்ளும் செயல்படும் தன்முனைப்புக்கு (ego) தீனிபோடுகிறது. பெண் எந்த அளவிற்கு உணர்ச்சிவசப்படுத்தப்படுகிறாளோ அந்த அளவு ஆண் வெற்றியடைந்தவனாகக் கருதப்படுகிறான். இதனுடைய நீட்சி ஆணின் சுயத்தை அளவிடுவதாக போய்முடிகிறது. இப்படங்களில் நடிக்கும் ஆண்கள் பலவித செயற்கை பாலியல் வேதிமங்களை (enzymes) உடலுக்குள் செலுத்தி கொண்டிருக்கலாம். அத்துடன் புணர்ச்சியில் ஈடுபடும் ஆணின் எழுச்சி என்பது ஒரே ‘ஷாட்’-டில் எடுக்கப்படுவது இல்லை. அது பல நாட்கள் தனித்தனியாக எடுக்கப்பட்டு தொகுக்கப்படுகிறது. அதேபோன்று பெண்களின் காட்சி அமைப்புகளும். இவை திரைப்படம் என்கிற தொழில்நுட்ப சாதனத்தின் வசதியால் செய்யப்படுபவை. எனவே, நீலப்படங்கள் பர்க்கப்படும்முறை என்பது வழுக்கமான திரைப்படங்களைப்போல ‘காட்சியை பின்பற்றுதல்’ என்பதாக இருப்பதால் இந்த படங்கள் யதார்த்தமாக தெரிகின்றன. இப்படங்கள் திரப்படத்தைவிட நேரடியானதாக இருப்பதால் நிஜம் போன்ற உணர்வை ஏற்படுத்துகின்றன. இப்படங்கள் ஒரு வரையறுக்கப்பட்ட சூத்திரங்களைக் கொண்டே அமைந்திருக்கின்றன. என்றாம் உடலின் சாத்தியப்பாடுகளின் தளத்தை இவை விரிவடைய வைக்கின்றன என்பது முக்கியமான ஒரு அவதாணிப்பு ஆகும்.

ஆ: நீங்கள் கூறுவது சரி! பாலியல் பற்றிய ஒழுங்கான அனுகுமுறையை காட்டுவதில்லை என்றாலும் எடுக்கப்பட்டிருக்கும் படங்களின் பிண்ணனி முக்கியமானது. மேற்கு ஐரோப்பிய படங்களில் வரும் பாலியல் முறைகளும் ஆசிய ஆப்பரிக்க கீழைத்தேய படங்களில் வரும் பாலியல் முறைகளும் நிறைய வேறுபாட்டுடன் இருக்கிறது. இதற்கு பண்பாட்டு ரீதியான மாறுபாடுகளே காரணம். அதாவது குதவழி, வாய்வழி பாலுறவிற்கு முக்கியத்துவம் தருவதும் ஒரு ஆணை இயங்காமல் வைத்து ஒரு பெண் இயங்குவது போன்றவையும் குழுப்பாலியலும் இந்தியா போன்ற பண்பாடு இறுகிய நாடுகளின் படங்களில் மிகவும் அரிதாக உள்ளது. ஆனால் இவ்வகைப்படங்களுக்கு முன்னொடியாக ஆங்கிலப் படங்களே அமைந்திருப்பதால் அவற்றின் பாதிப்புகள் தவிர்க்க இயலாமல் நம் நாட்டு படங்களிலும் வந்துவிடுகிறது. இது நமது பண்பாட்டு அமைப்புடன் முரண்படுவதும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. பண்பாட்டின் ஆழ்தள கட்டமைப்பிற்குள் ஒரு உடைசலை இவை உருவாக்குகின்றன அல்லது அதற்கான புரிதலை அல்லது பண்பாடு ஒரு உடலின்மீது வரைந்து வைத்திருக்கும் அறங்களை புணிதங்களை இவை இலேசாகவேனும் அசைக்கின்றன என்பது முக்கியம்.

அ: ‘லெஸ்பின்’ எனப்படும் பெண்ணோடு பெண் உறவுகொள்ளும் காட்சிகள் எல்லாப் படங்களிலும் ஒரு துணை அங்கமாக காட்டப்படுகிறது. ஆண்களிடம் குறிப்பாய் தனியர்களாக அறைகளில், விடுதிகளில் இருப்பவர்களிடம் பரவலாகக் காணப்படும் ஓரிணப்புணர்ச்சி ஏன் அதிகமாகவோ அல்லது ஒரு அங்கமாகவோ காட்டப்படுவதில்லை? இதற்கு நாம் வெறும் ஆண் பார்வையாளர்களாக இருப்பதால் படம் வரவேற்பை பெறாது என்று ஒரு காரணத்தை மட்டும் சுட்ட முடியாது. இது அலசுலுக்கு உட்படுத்தப்பட வேண்டிய ஒன்று.

ஈ: இப்படங்களின் சந்தை விதிகள் விற்பனை வலைப்பின்னல்கள் ஒரு காரணம். எடுக்கப்படும் சூழலும் பரவிவரும் சூழலும் மற்றொரு காரணம். ஓரிணப்பபுணர்ச்சி எப்படி ஒரு பாலியல் வகைத்திணையாக மாற்றப்பட்டு சமூக விளிம்பிற்கு தள்ளப்பட்டுள்ளது என்பது குறித்து ஆய்வுகள் உள்ளன. குறிப்பாக இத்துறையில் பூஃக்கோவின் ஆய்வுகள் முக்கியமானவை. சமூக அதிகாரமானது திருமணமுறைகளை மையத்திற்குள் கட்டிவைத்திருப்பதற்காக ஓரிணப் புணர்ச்சியை விளிம்பிற்கு தள்ளி பேசாப் பொருளாக குற்ற உணர்ச்சியாக ஒரு நோய்க் கூறாக மாற்றியுள்ளன. அதனை இப்படங்கள் ஓரளவு வெளிப்படையாக முன்வைத்து அது குறித்த உணர்வுகளை பேசுபொருளாக மாற்றியுள்ளன. இப்படங்கள் திரையைத் தாண்டி நீண்டு பார்வையாளர்களக்குள் பலவித பிம்பங்களையும் அப்பிம்பங்களின் சலனம் எற்படுத்தும் எழுச்சியுணர்வும் முக்கியமானது. ஆண்களின் ஆதிக்கத்தில் சமூக உறவுகள இருப்பதால் இப்டங்களின் சந்தை வலைப்பின்னல் ஆண்களுக்குள்ளாகவே அமைவதால் பெண் பிம்பங்களை ஒரு ஆணிற்குள் திணிக்கும் வண்ணம் படம் அமைய வேண்டிய தேவை இருக்கிறது. இதன் பார்வையாளர்களுக்கு பலவித பெண் பிம்பங்கள், அதில் ஈடுபடும் நிர்வாணப் பெண் பிம்பம், அவர்களின் விணோதக் கோலம் பற்றிய ஆர்வம் ஆகியனவும், புணர்ச்சி பற்றிய மர்மக் கதையாடல்களும், புனைவுகளும் தேவைப்படுகிறது. இப்பிம்பங்கள தனிமையில் பார்வையாளனின் சிந்தனையை ஆக்ரமித்து அவர்களது உடலுக்குள் வியாபித்து ஒருவித பாலியல் மின்தூண்டலை ஏற்படுத்தி சிலிர்ப்பையும், கற்பணார்த்தத்தையும் தருகிறது. இவை ஒருபுறம் சிந்தனையை சிதறடிப்பதும் மறுபுறம் ‘தொட்டால் சுருங்கி’ என்ற நிலையில் அவர்களது பாலியல் ஆற்றலை பலவீனப்படுத்தவும் செய்கிறது. பாலியல் தூண்டலுக்கு உடலற்ற பிம்பமே போதும் என்கிற நிலையையம் பிற பெண் உடலுடன் உறவில் ஈடுபடும்போதுகூட அப்பெண் உடலின் நுட்பங்கள் அறியும் ஆர்வத்தையும் விடுத்து இவ்வகை பிம்ப உணர்வுகளே எழுச்சியூட்டுவதாகவும் அமைவது தனிமனித பாலியலில் இவ்வகைப்படங்கள் செலுத்தும் ஒரு விரும்பத்தகாத விளைவாக கொள்ளலாம். இங்கு ‘லெஸ்பியானிஸம்’ காட்டப்டுவது சில ஆண் பார்வையாளர்களுக்கு எழுச்சி ஊட்ட மட்டுமல்ல பெண்ணிற்கு அதீத பாலியல் ஆற்றலையும், அவஸ்தைகளையும் பிறதொரு பெண் உடல் மூலம் அங்கீகரிக்கச் செய்வதன் மூலம் அதை ஆண் பார்வைளயார்கள் மத்தியில் ஒருவகை நிரூபனமாக்குதல் என்பதாக கவனத்தில் கொள்ளலாம்.

பொதுவாக பெண்ணின் அதீத பாலியல் ஆற்றல் என்கிற கருத்தாக்கம் ஆணிற்கு ஒரு தாழ்வு மனப்பான்மையை உருவாக்குகிறது. இதுவே எதிர் நிலையில் ஆணின் ‘தன்முனைப்பை’ கிளறிவிடுகிறது. படுக்கையில் பெண் பற்றிய அதீத பிபம்பம் உள்ள ஆண் தோல்வியுறுவதாக கருதுவதை ஏற்காத தன்முனைப்பு பகலில் பெண்ணை அடிமையாக நடத்தி பல வேலைகளை பனித்து வதைப்பதன் மூலம் ஆணாதிக்கமாக உருவாகி அதன் மூலம் தன்னை நிலைநிறுத்துகிறது என்கிற உளவியலின் அடிப்படையாக இதனைக் கொள்ளலாம். பெண்ணின் அதீத அற்றல்பற்றிய கருத்தாகக்கம் இந்திய தத்துவ சிந்தனைகளில் ஒரு பதற்றமாக மாறி தனிக்கிளையாக காமத்தை வெல்லுதல் என்கிற தாய்தெய்வ வழிபாட்டை அடிப்படையாகக்கொண்ட தாந்ரீகமாக வளர்ந்து வந்துள்ளது. இந்த மரபை பின்பற்றியே ஓஷோ ரஜனீஷ் காமத்திலிருந்து கடவுள் நிலை அடைவது குறித்து பேசுகிறார்.

இ: உரையாடலை மீண்டும் நீலப்படங்கள் நோக்கியே ஒரு முகப்படுத்திக் கொள்வோம். பெரும்பாலான படங்களில் புணர்ச்சியின் உச்சமாக விந்து வெளியெற்றத்தை வெளியில் எடுத்து நேரடியாக காட்டப்படுவது ஏன்?

ஆ: அது பார்வையாளர்களை ஏய்க்கும் வேலை. நீங்கள் நம்பமாட்டீர்கள் இத்தனை நேரம் புணர்ச்சியில் ஈடுபடுவதுபோல் காட்டப்படுவதால் ஆணுக்கு முன்பே உச்ச எழுச்சி முடிந்திருக்கும் என நீங்கள் நினைத்து விடக்கூடும். அதனால்தான் நேரடியாக நிரூபிக்க முயலுகிறார்கள். சிலவேளை அந்த ஆணுக்கு விந்து வெளியேற்றம் இல்லை என நீங்கள் முடிவெடுத்தால் படத்தின் ஒட்டுமொத்த உணர்வு நிலையும் மாறிவிடும் பார்க்கும் நமக்கு அநத ஆணுடன் ஆன ஒட்டுதல் சிதைந்துவிடும். அதனால் பார்வையாளனை எப்பொழுதும் அதில் இயங்கும் ஆணுக்கு சமதளத்தில் கொண்டு செல்ல வேண்டியுள்ளது. பார்வையாளனை உச்ச உணர்ச்சிக்கு கொண்டு செல்ல வெளியில் காட்டப்படும் விந்து வெளியேற்றத்தை பெண்கள் மேலே பூசிக்காள்வதும், ருசிப்பதும், ரசிப்பதுமாக காட்டுவதன் மூலம் ஆணின் வெறியுணர்ச்சியை உசிப்பி விடுகிறது. ஒருவகையில் உடல் மீதான அறுவெறுப்பு என்கிற மதப் புணிதங்களை இவை களைத்துப் போடுகிறது என்றாலும் இதன் அடிப்படை பார்வை ஆண்மைய பாலியலே (ANDROCENTRIC SEXUALITY ). இங்கு நீங்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். ஆண்மையப் பாலியல் என்பது ஆணிய பாலியலும் ஒன்றல்ல. நீலப்படங்கள் ஆணிய பாலியலை (MALE SEXUALITY) அடிப்படையாகக் கொண்டதல்ல. பெண் பாலியலை மறுக்கிற அல்லது மறைக்கிற ஆண்மையப் பாலியலை அடிப்படையாகக் கொண்டது.

அ: தமிழ், மலையாளம போன்ற திரைப்படத்துறையில் தொழில்நுட்பம் வளர்ச்சியுற்ற மொழிகளின் படங்களை உதாரணமாகக் கொண்டால் இப்படங்கள் பெருமளவில் தோல்வியடைந்து பார்வையாளனுக்கு எரிச்சலூட்டுவதாக அமைவதை பலரின் உரையாடலில் புரிந்துகொள்ள முடிகிறது.

ஆ: இப்படங்களின் சந்தைகளும் ஒரு காரணம். இது ஒரு பெரும்தொழிலாக வளராது நிலையும் ஒர காரணம் எனலாம். இப்படிப் பாருங்கள் ஒரு பெண்ணின் உச்ச எழுச்சியை அளவிடுவது பற்றியோ, அதற்கான அடையாளங்கள் பற்றியோ எந்த நீலப்படமாவது கவலைப்படுகிறதா? இல்லையே.

இ: அப்படியானால் இப்படங்கள் எப்படித்தான் எடுக்கப்பட வேண்டும் என்கிறீர்கள? ‘காமசாஸ்திரம்’ போன்ற நூல்களில் காட்டப்படுவது போலவா? அதல் கூடத்தான் 64 கலைகள் கூறப்படவதாகக் கூறுகிறார்கள்.

ஈ: இல்லை! ‘காமசாஸ்திரம்’ போன்ற நூல்கள் பாலியல் பற்றிய மரபான அனுகுமுறைகளைத்தான் தருகின்றன. அத்துடன் 64 கலைகள் என்பது ஒரு குடும்ப உறவில் பெண் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டிய விஷயங்கள் நகம் வெட்டுவது முதல் உணவு சமைப்பது வரை பலவித அலங்கார, வாசனைத் திரவிய, அழகியல், கட்டடக்கலைப் போன்ற சமாச்சாரங்கள்தான். அதேசமயம் பாலுறவின் முத்தமிடல், தட்டுதல், ஆலிங்கணம் போன்ற புற விளையாட்டுகளின் பலவகை நுட்பங்களையும் புணர்ச்சியின் நிலைகளையும் விளக்குகிறது. முத்தமிடலில் பல வகையான முத்தங்கள் பெண்ணை உணர்ச்சி நிலைக்கு எடத்து செல்லுதல் மற்றும் பெண்ணை மயக்குதல் போன்ற ‘அண்ணலும் நோக்கினாள் அவளும் நோக்கினால்’ வகை ‘சைட்’ அடி சமாச்சாரங்கள் பெண்ணிற்கு செய்தி தெரிவி்க்கும் முறை இப்படி பல குடும்பம் சார்ந்த பாலியல் ஒழுங்குபற்றி பேசுகிறது. இங்கு நாம் காமசாஸதிரத்தின் அரசியல் பின்புலத்தை உள்ளடக்கி கொஞ்சம் விரிவாக இதனை புரிந்துகொள்ள முயல்வோம். இதனோடு இனைத்து கீன்ஷே ஆய்வறிக்கை உடல்களை பிரிக்கும் முறை பற்றியும் பெண்பாலியலின் கட்டமைப்புகளின் துவக்கங்கள் பற்றியும் பேசுவது பயனுடையதாக இருக்கும்.

(உரையாடல் தொடரும்)