Home உறவு-காதல் காதலா? காமமா? அதையும் தாண்டியதா?

காதலா? காமமா? அதையும் தாண்டியதா?

21

in-bed-300x199காதல் என்ற வார்த்தை எத்தனையோ இடங்களில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இடம், பொருளைப் பொருத்துதான் அது புனிதத்துவம் பெறுகிறது. பதின் பருவத்தில் வரும் காதல் இனக்கவர்ச்சி என்றும், படித்து முடித்து கைநிறைய சம்பாதிக்கும் போது வருவதுதான் உண்மைக் காதல் என்றும் திருமணத்திற்குப் பின்னர் வேறொருவடன் ஏற்படுவதை கள்ளக்காதல் என்றும் சொல்கின்றனர். ஆனால் காதல் என்பது அன்புரீதியானதா? உணர்வுகளை மட்டுமே அதை புரியவைக்க முடியுமா? எதுவும் எதிர்ப்பார்த்து வருகிறதா? என்றால் எவராலும் புரியவைக்க முடியவில்லை. காதலோ, காமமோ எதுவென்றாலும் ஹார்மோன்கள் செய்யும் மாயம்தான் என்கின்றனர் நிபுணர்கள்.

பட்டாம்பூச்சி பறக்கும்
காதல் என்பதை மனதில் தோன்றுகின்ற உணர்வுகளில் மிகத் தூய்மையானது என்கிறார் ஜான் ட்ரைடன். அந்த பெண்ணை நினைச்சாலே பறக்கிற மாதிரி இருக்கு. வயிற்றில பட்டாம்பூச்சி பறக்குது என்கின்றனர் சிலர். அதேபோலதான் பெண்களுக்கும், காதல் வந்தலே தூக்கம் தவறிப்போகும். உணவு ருசிக்காது. ஆனால் காதலுக்கும், காமத்திற்கும் நூழிலைதான் வித்தியாசம் இருக்கிறது என்கின்றனர் நிபுணர்கள் சற்று பிசகினாலும் காதல், காமத்திற்குள் நுழைய வாய்ப்பிருக்கிறது.

என்ன வித்தியாசம் ?
வாழ்வு, காதலால் நிரம்பியிருக்கிறது. அதன் முடிவடையாத தொடர்ச்சிக்கு காமம் தேவைப்படுகிறது. ஆனால், காதலுக்கும் , காமத்திற்கும் நிறைய வித்தியாசம் இருப்பதாக விஞ்ஞானிகள் சமீபத்தில் நிரூபித்திருக்கிறார்கள். காதல் என்கிற உணர்வு மனதிலும், உடலிலும் உருவாக்குகிற தொடர்பு நிகழ்வுகளுக்கு அறிவியல் ரீதியான விளக்கங்கள் வெளிவந்து விட்டன. காதலின் முதல் ஆரம்ப்புள்ளி ‘லஸ்ட்’, அடுத்த பால் மேடு மேற்படுத்துகிற காமத்துப்பால், கவர்ச்சி.

ஹார்மோன்களின் வேலை
ஆளு அழகா சூப்பரா இருக்காளே என்ற ரீதியில் பார்க்கத் தொடங்கி பிறை மாதிரி நெற்றி, குவளைக் கண், கூர்மையான மூக்கு என்று வர்ணிப்பதில் நிற்கும். இதற்குக் காரணம் உடலில் சுரக்கும் டெஸ்டரோஸ்டீரான் மற்றும் ஈஸ்ட்ரோஜன் என்கிற ஹார்மோன்கள்.

மனிதர்கள் பிறந்ததிலிருந்தே உடலில் இருந்தாலும் பருவத்தில், நமக்குரிய பெண் / ஆணை பக்கத்தில் சந்திக்கும் போது தான் விழித்துக் கொள்கின்றன. அப்போது இதயத்தில் ஒரு மின்னல் வெட்டும், வயிற்றுக்குள் பட்டாம்பூச்சியும் பறக்கின்றனர். காதுக்குள் இளையராஜாவின் வயலின் இசை ரீங்காரமிடும்.
நீங்கள் சந்தித்த நபர் உங்களை விட்டு கடந்து போன பின்னும் உங்கள் மனம் அவரைச் சுற்றியே வரும். விஞ்ஞானிகள் இந்த நிலையை ‘அட்ராக்ஷ்ன்’ என்று வர்ணிக்கிறார்கள். காதல் அந்த இடத்தில் தடுக்கி நிற்கிறது. சிலருக்கு நொண்டி நடக்க ஆரம்பித்து விடுகிறது. ஏன் ஸ்ட்ரக்? தடை என்று சொல்கிறீர்கள்?

அந்தப் பெண்ணை பார்த்த்திலிருந்து சரியாகச் சாப்பிட முடியவில்லை. எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை. பசி போச்சு, தூக்கம் போச்சு, படிப்பில் கவனம் போச்சு, எங்கேயோ பேய் அடித்த மாதிரி பார்க்க வேண்டியிருக்கிறது. உள்ளங்க இளமை.ப்ளக்போட்ஸ்.கொம் வேர்த்துப் போகிறது. ஒழுங்காக யோசிக்க கூட முடியவில்லை. இதெல்லாம் ஏன் நடக்கிறது என்று இதற்கும் பதில் சொல்கிறார்கள் விஞ்ஞானிகள்.

காதல் ரசாயனங்கள்
நம் மூளையில் சுரக்கும் டோபமைன் என்ற ஹார்மோன்தான் இத்தகைய கிறுக்குத்தனங்களை செய்கிறது என்கின்றனர். இந்த காதல் ரசாயனம்தான் மனதிற்குள் மின்னலை வெட்டிக்கொண்டே இருக்கிறது. காதலிக்கும் நபரைப் பற்றிய சிந்தனைகளை தூண்டிவிடுகின்றனவாம். இந்த ரசாயனம் சாக்லெட்டிலும், ஸ்ட்ராபெரியிலும் இருக்கின்றன. சாக்லெட்டை காதலர்கள் உதட்டுக்கு உதடு மாற்றுவதற்குப் பின்னணியில் இந்தக் காரணம் தான் இருக்கிறது என்கிறார்கள். இந்த காதல் ரசாயனத்தை PEA என்கிற விஷயம்தான் கட்டுப்படுத்துகிறது. இதுதான் காமநிலையில் இருந்து காதல் நிலைக்கு மாற்றுகிறது. காதலிக்கும் பெண்ணின் முகம் திரும்ப திரும்ப வருகிறதா? அவளின் நினைவில் பைத்தியம் பிடித்துப் போகிறதா? மூளையில். PEA பிடித்து ஆட்டுகிறது.

பிரிக்க முடியாத நிலை
இந்த இரண்டு நிலைகளையும் தாண்டிய பிறகு வருவதுதான் ‘அட்டாச்மெண்ட்’ என்கிற மூன்றாவது நிலை. அதாவது நீ இல்லை என்றால் நான் இல்லை என்ற உயிரில் கலந்த உணர்வு நிலை. இந்த அட்டாச்மெண்ட் நிலைக்கு தள்ளுவது இரண்டு ஹார்மோன்கள் ஒன்று ஆக்ஸிடோஸின் என்பது மற்றொன்று வாஸோப்ரஸின். ஆக்ஸிடோஸின் காதலர்களுக்கு இடையிலான இணைப்பை உறுதி செய்கிறது. பலப்படுத்துகிறது. வாழ்நாள் முழுக்க ஒரு பந்தம் தொடர வைக்கிறது இல்லையா? அதை வாஸோப்ரஸின் செய்கிறது.

உண்மைக்காதல் உடல்ரீதியாக பார்க்காது உணர்வுரீதியாகத்தான் பார்க்கும். உள்ளதை உள்ளபடி ஏற்றுக்கொள்ளும். எதையும் எதிர்பார்க்காது. ஆனால் உடலை மட்டுமே பார்க்கும் காமநிலைக்குதான் அதிகம் எதிர்பார்ப்பு இருக்கும் ஒரு பொஸசிவ்னெஸ் இருக்கும். உங்களுடையது காதலா, காமமா? அதையும் தாண்டியதா?