தேவையான பொருட்கள்:
சிவப்பு அரிசி – ஒரு கப்,
உளுந்து – கால் கப்,
வெந்தயம் – கால் டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
• சிவப்பு அரிசியை தனியாகவும், உளுந்து – வெந்தயத்தை தனியாகவும் 4 மணி நேரம் ஊறவிடவும்.
• பிறகு அவற்றை சேர்த்து மாவாக அரைத்து, உப்பு போட்டுக் கலக்கவும். பிறகு இந்த மாவை 4 மணி நேரம் புளிக்கவிடவும்.
• தோசைக்கல்லை சூடாக்கி, மாவை தோசைகளாக வார்த்து, சுற்றிலும் எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும். இதை புதினா சட்னியுடன் பரிமாறவும்.