தேவையான பொருட்கள்
கேழ்வரகு மாவு – 100 கிராம்,
பால் – ஒரு லிட்டர் (காய்ச்சி ஆறவைத்தது),
தேன் அல்லது கருப்பட்டி – 150 கிராம்,
இஞ்சி – மிகச் சிறிய துண்டு,
பாதாம், பிஸ்தா, முந்திரி (சேர்த்து) – 50 கிராம் (சூடான நீரில் ஒரு மணி போட்டு வைத்து, விழுதாக அரைக்கவும்),
எலுமிச்சைச் சாறு – கால் டீஸ்பூன்,
சீவிய முந்திரி , பிஸ்தா – 10 கிராம்.
செய்முறை
இஞ்சியை தோல் சீவி பொடியாக நறுக்கி வைக்கவும். கேழ்வரகு மாவை சுடுநீரில் சேர்த்து, மாவு பதத்தில் கலக்கி, மூடி வைக்கவும். பின்னர் தேன் அல்லது கருப்பட்டி, இஞ்சி, பால் மூன்றையும் மிக்ஸியில் நுரை வரும் வரை அடிக்கவும்.
இதனுடன் எலுமிச்சைச் சாறு, கலக்கி வைத்த கேழ்வரகு மாவு மற்றும் பாதாம் – பிஸ்தா – முந்திரி விழுது சேர்த்துக் கலந்து, மறுபடியும், நுரை வரும் வரை அடித்து நீளமான டம்ளரில் ஊற்றி சீவிய முந்திரி, பிஸ்தா தூவி அலங்கரித்து, ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்து பருகலாம்.
இது வயதானவர்களுக்கு மிகவும் ஏற்ற பானம். அவர்களுக்கு ஃப்ரிட்ஜில் வைக்காமல் அப்படியே கொடுக்கலாம்.