பொதுவாக சமோசா தயாரிக்கும்போது, அதில் உருளைக்கிழங்கு மசாலாவோ அல்லது பட்டாணி மசாலாவோ அல்லது பிரட் துண்டு ஒன்றை வைத்து மூடி,
பின் எண்ணையில் பொறித்தெருப்பார்கள். அதை நாமும் விரும்பி உண்ணுவோம்.
ஆனால் சற்று வித்தியாசமாக அசைவத்தில் அதாவது கொந்தன கறி சமோசா தயாரிப்பது எப்படி என்று பார்ப்போமா?
தேவையானவை
கொந்திய கறி – 200 கிராம்
வெங்காயம் – 3
மைதா மாவு – 1 கப்
இஞ்சி, பூண்டு சோம்பு பட்டை லவங்கம் – அரை தேக்கரண்டி
நல்லெண்ணெய் – பொரிக்க தேவையான அளவு
டால்டா – 100 கிராம்
ஆப்ப சோடா – ஒரு சிட்டிகை
மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
உப்பு – தேவையான அளவு
செய்முறை :
கொந்தின கறியை அலசி மஞ்சள்தூள், மிளகாய்த் தூள் போட்டு, 1 டம்ளர் நீர்ஊற்றி வேக வைக்க வே ண்டும். கறி வெந்ததும் அதில் நறுக்கிய வெங்காயத் தில் பாதியையும், உப்பையும் சேர்த்து மேலும் அரை மணி நேரம் வேக வைத்து இறக்கிக் கொள்ளவும்.
இஞ்சி, பூண்டு, சோம்பு, பட்டை, லவங்கம் ஆகியவற்றை மிக்சியில் சிறிது நீர்தெளித்து அரைத்துக் கொள்ளவும். அடுப்பில் வாணலியைவைத்து ஒரு தேக்கரண்டி எண்ணெய்விட்டு, மீதமுள்ள வெங்கா யத்தையும், நசுக்கி வைத்துள்ள மசாலா வையும் போட்டு, வேக வைத்த கறியையும் சேர்த்து வதக்கவு ம். நீர் சுண்டி கறி சிவந்தவுடன் வாணலியை அடுப்பிலிருந்து இறக்கி கறியை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
மைதாமாவைச் சலித்து, 1/4தேக்கரண்டி உப்பு கரைத்த நீரைத் தெளித்து 70 கிராம் டால்டாவைக் காய்ச்சி ஊற்றி பூரிக்கு பிசைவது போல் பிசைந்து வட்டமாகத் திரட்டிக் கொள்ள வேண்டும்.
திரட்டிய பூரிகளை, கத்தியினால் இரண்டு சம பாகங்களாக அறுத்துக்கொள்ளவேண்டும். பின் ஒரு 1/2 பூரியை எடுத்து அதன் மத்தியில் 1/2 தேக்கரண்டி கறி வறுவலை வைத்து, பூரியை முக்கோணமாக மடித்து விடவேண்டும். இவ் வாறு எல்லா பூரிகளையும் சம்சாவாகச் செய்து கொள்ள வேண்டும்.
அடுப்பில் வாணலியை வைத்து, டால்டாவை ஊற்றிக் காய்ந்ததும், 2 அல் லது 3 சம்சாவாகப் போட்டுச் சிவந்தவுடன் எடுத்துவிட வேண்டும். அடுப்பை மிகவும் சிறியதாக எரிய விட வேண்டியது அவசியம்.