tamil doctor tips, tamil sex doctor tips, eppadi pennai santhosa pauththuwaathu, tamilsexdoctor.com, tamilsex.com, sex kelvi pathilkal, tamil sex kelvi pathilkal, sex kelvikal,kama kelvi,sex kelvi pathil,paliyalkelvi pathil,antharanka elvi patil,udaluravu kelvikal.,kelvi,sex kelvi,
அன்பு சகோதரிக்கு —
என் வயது, 50; அரசு துறை யில் அதிகாரியாக பணிபுரி கிறேன். எங்களது நெருங்கிய குடு ம்ப நண்பரின் மகளும், என் இளைய மகளும், சிறு வயதில் இருந்தே ஒரே பள்ளியில், ஒன்றாக வே படித்தனர். குடும்ப நண்பரும், அவரது மனை வியும் படித்த வர்கள், பண் புள்ளவர்கள் ; இருவருமே அந்தஸ்தான பணியில் உள் ளனர்.
அவர்களது மகளோ, அதற்கு நேர்மாறானவள். ஒழுக்கமின்மை, சொல் பேச்சு கேளாமை, தன்னிச்சையாக மனம் போன போக்கில் நடந்து கொள்வது, ஆண்களுடன் போனில் மணிக்கணக்கில் பேசு வது என்று இருப்பாள். பலமுறை
அறிவுரை கூறியும், திருந்திய பாடில்லை.
பள்ளி வேன் டிரைவரிடம், அவ ள் அடிக்கடிபோனில் பேசுவ தை அறிந்து, பள்ளி நிர்வாகத் திடம் கூறி, அவனை வேலை யிலிருந்து நீக்க செய்தோம்.
பள்ளியில், எல்லாரும் அவளு டன் பழக தயங்கினர். ஆனாலு ம், என் மகளை அவளுடன் நட்புடன் இருக்க செய்தேன். பள்ளி மற் றும் டியூஷன் செல்லும்போது, இருவரையும் ஒன்றாகவே செல்ல சொன்னேன். அதனால், அவளது நடவடிக்கையில் சிறு மாறுதல் ஏற்பட்டது.
சிறிது காலத்திற்கு பின், வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிய தைப் போல், உள்ளூர் ரவுடி ஒருவனுடன், அவள் பழக ஆரம்பித்தா ள். எவ்வளவோ கண்டித்தும் பயன் இல்லை. போலீஸ் அதிகாரியாக இருக்கும், அவளது பெரியப்பாவிடம் கூறி, அவளுக்கு அறிவுரை கூறச் செய்தோம். அதிலும், பயனில்லை. இதனால், படிப்பில் கவன ம் குறைந்து, பிளஸ் 2வில் குறைவான மதிப்பெண் பெற்றாள்.
அதன்பின், அவளது மனநிலையை ஒருமுகப்படுத்த, யோகா செய்ய சொன்னோம். மேலும், மனநல மருத்துவரிடம் சிகிச்சை அளித்தோ ம்.
அவளது குணம் சற்று மாறியதை அறிந்து, கல்லூரியில் சேர்த்தோ ம். அக்கல்லூரியில் பணிபுரியும், அவள் அம்மாவின் தூரத்து சொந்த க்காரரை, அவளை கண்காணிக்கவும் ஏற்பாடு செய்தோம்.
கல்லூரியில் ஒருவன், இவளுக்கு அறிமுகமாகியிருக்கிறான். அவ னுடன் சேர்ந்து ஊர் சுற்றுவது தெரிந்து, அதிர்ந்து போனோம்.
நாங்கள் உட்பட, குடும்ப உறுப்பினர் அனைவரும் அவளுக்கு பல் வேறு அறிவுரைகள் கூறினோம். தன் தாயின் நடவடிக்கையால் தான், இப்படி நடந்து கொள்வதாக கூறுகிறாள். ‘தான் எந்தவிதத்தில் சரியில்லை…’ என்று, அவள் தாய் புலம்புகிறார்.
ஒரே ஒரு ஆறுதல் என்னவென்றால், எக்காரணம் கொண்டும், படிப் பை பாதியில் நிறுத்தப் போவதில்லை என்றும், இப்போது பழகி வரு பவரிடம் இருந்து விலகி விடுவதாகவும், படிப்பு முடிந்தவுடன், தன் ஆண் நண்பர்களில் யாராவது ஒருவனை தேர்ந்தெடுத்து, மணந்து கொள்வேன் என்று கூறுகிறாள். நாங்கள் இப்போது என்ன செய்வது ?
*அப்பெண் கூறுவதை நம்பி, படிப்பை தொடர அனுமதிக்கலாமா?
*அவளுடைய நடத்தையை மாற்ற ஏதாவது வழி உண்டா?
*அவளுடைய பெற்றோர் என்ன செய்ய வேண்டும்?
*நல்ல மாப்பிள்ளையை பார்த்து திருமணம் செய்து வைக்கலாமா?
நல்ல வழியை கூறுவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.
— இப்படிக்கு,
உங்கள் சகோதரி.
அன்பு சகோதரி —
ஆங்கிலத்தில் எழுதிய உன் கடிதம் கிடைத்தது. தமிழ் வார இதழில் வரும் மனநல ஆலோசனை பகுதிக்கு, தமிழ் தெரிந்த நீ, ஆங்கிலத் தில் கடிதம் எழுதியிருக்கிறாய். இது, உன் உயர்வு மனப்பான்மை யை காட்டுகிறது.
உன் குடும்ப நண்பரின் மகள், கைபேசி உதவியுடன், ஒரே நேரத்தில் பல ஆண்களுடன் பேசுவதாகவும், முதலில் வேன் டிரைவர், பின் ரவுடி, பின் இன்னொருவன் என, பட்டியல் நீள்வதாகவும், படிப்பை முடித்ததும், ஆண் நண்பர்களில் ஒருவனுடன் ஓடிப்போக திட்ட மிட்டிருப்பதாகவும், தன்னுடைய துர்நடத்தைக்கு முழுகாரணமும் தன் தாய்தான் என, ஒப்புதல் வாக்குமூலம் அளிப்பதாகவும் கூறுகி றாய். அவள் மீதும், அவளின் தாய் மீதும் உள்நோக்கத்தோடு களங் கம் கற்பிக்கிறாயோ என, சந்தேகம் துளிர்க்கிறது.
நீ உண்மையைத்தான் கூறியிருக்கிறாய் என்றாலும், உன் கடிதத்தி ல், நெருங்கிய குடும்பத்தினரின் மகள், இவ்வளவு மட்டமாக இருக் கிறாள் என்ற குரூர சந்தோஷம் நிரம்பி வழிவது தெரிகிறது.
சகோதரி… ஒன்றை புரிந்து கொள். எல்லா மனிதர்களும் முழுக்க முழுக்க நல்லவர்களும் இல்லை, முழுவதும் கெட்டவர்களும் இல் லை. எல்லாருக்குள்ளும் தெய்வங்களும், சாத்தானும் சம அளவில் இடத்தை பங்கீட்டுதான் அமர்ந்திருக்கின்றனர். அதனால், ஒருவரின் குற்றங்களை பெரிதுபடுத்தி பேசுவதனால் மட்டும் அவர்களை திருத்தி, நல்லவர்களாக்கி விட முடியாது என்பதை உணர்.
உன் நண்பரின் மகள் விஷயத்தில், நீங்கள் அனைவரும் தான் முதல் குற்றவாளிகள். எப்படி என்று கேட்கிறாயா? பள்ளிக் குழந்தைக்கு மொபைல் வாங்கிக் கொடுத்ததுடன், அவளின் அன்றாட செயல் பாட்டை கவனிக்க மறந்தது உன் நண்பர் குடும்பத்தினர் செய்த முதல் குற்றம். அடுத்து உன்னைப் போன்றவர்கள்; சிறு விஷயத்தை யும் ஊதி பெரிசாக்கி, சின்ன தவறையும் பூதாகரமாக்கி, பிரச்னை யை மேலும் சிக்கலாக்கி, மனதுக்குள் சந்தோஷம் காண்பவர்கள்.
பள்ளிச் சிறுமிக்கு என்ன நல்லது கெட்டது தெரியும்… அவள் முதன் முதலில் பள்ளி வேன் டிரைவருடன் பேசியவுடனே, ஒழுக்கம் கெட் டவள் என்ற நாமகரணத்தை சூட்டி, அவளைத் தனிமைப்படுத்தி, மனதுக்குள் தான் கெட்டவளோ என்ற எண்ணத்தை எல்லாரும் சேர் ந்து ஏற்படுத்தி விட்டீர்கள். அறிவுரை என்ற பெயரில், அவள் குற்றங் களை பட்டியல் போட்டு, அவள் மனதையும் சிதைத்து விட் டீர்கள்.
அவளிடம் உள்ள நல்ல குணங்களை, பண்புகளை அதிகமாக சொல் லி, அவள் குறைகளை மேம்போக்காக சுட்டி காட்டி, அன்பு காட்டி நல்வழிப்படுத்தியிருந்தால், அவள் தொடர்ந்து இத்தகைய தவறு களை செய்திருக்க மாட்டாள்.
மேலும், பெரும்பாலான அப்பர் மிடில் கிளாஸ் பெற்றோர் செய்யும் மிகப் பெரிய தவறு, ஒரு பொருளின் அருமையை, அதன் மதிப்பை பிள்ளைகள் உணரு முன்பே, அவர்கள் கேட்டதுமே வாங்கிக் கொடு ப்பது. இது சாதாரண விஷயமாக தோன்றலாம். ஆனால், நீ கூறுகி றாயே… தான்தோன்றித்தனம்… அக்குணம் ஒரு குழந்தையிடம் வள ர்வதற்கு, இது தான் காரணம். தவறுகள் மனிதர்களிடம் ஒட்டுமொ த்தமாக வந்து குத்தகை எடுத்து ஒட்டிக்கொள்வதல்ல; ஒன்றிலிரு ந்து ஒன்றாக அவ்வப்போது வந்து ஒட்டிக் கொள்வது தான். அதற்கு மருந்து அறிவுரை அல்ல; அன்பு.
எந்தக் குடும்பத்தில் பெற்றோர் பிள்ளைகளிடமிருந்து விலகியிருக் கின்றனரோ அந்த குடும்பத்தில் பிள்ளைகள் இம்மாதிரி வழி தவறி போக வாய்ப்பு ஏற்படுகிறது. இது பெற்றோரின் தவறே தவிர, பிள் ளைகளின் தவறு அல்ல. உன் நண்பரும் அவர் மனைவியும், தங்கள் மகளிடம் அன்பும், நட்பும் காட்டி, மன நெருக்கத்தில் இருந்திருந்தா ல், இந்த பிரச்னைக்கு இடமிருந்திருக்காது.
தற்சமயம் பழகி வருபவனிடமிருந்து விலகுவதாக தெரிவித்திருக்கி றாள், அதனை நம்பலாமா வேண்டாமா என, கேட்டிருக்கிறாய். அவ ளை சந்தேகப்பட்டு, படிப்பை நிறுத்துவதை விட, படிப்பை அனுமதி ப்பது மேல். ஒரு வேளை, அவள் காதலில் அல்லது திருமணத்தில் தோற்றாலும், படிப்பும், வேலையும் அவளை காப்பாற்றும்.
கைபேசி மூலம், பல ஆண் நண்பர்களிடம் பழகி வாழ்க்கையை தொலைத்த பெண்கள் யாரையாவது கூட்டிவந்து அவளிடம் பேசச் சொல்லலாம். மகப்பேறு மருத்துவர், எய்ட்ஸ் நோய் சிறப்பு சிகிச் சை மருத்துவர் மூலம், முறையற்ற ஆண் சகவாசங்கள் மூலம், பெண்களுக்கு நேரும் அவலங்களை எடுத்துரைக்க செய்யலாம்.
பிரச்னை முற்றியபின், அறிவுரை என்பது அனாவசியம். படிப்பை முடித்தவுடன், சொந்தத்திலே ஒரு வரன் பார்த்து திருமணம் செய்து வைக்கலாம்.
எல்லா ஆண்களிடம் பேசியிருந்தாலும், தகுதியான ஒரே ஒரு ஆணிடம் மனதை பறிகொடுத்திருக்கிறாள் என்றால், அவன் நல்ல வனா, அவளை மணந்து, நல்லபடியாக குடும்பம் நடத்துவான் என்ற நம்பிக்கை இருந்தால், அவனுக்கே அவளை திருமணம் செய்து வைக்கலாம்.
பொதுவாக, ஒரு அறிவுரை: பெண்களுக்கு பத்தாம் வகுப்பிலிருந்து, இளங்கலை பட்டபடிப்பு முடிக்கும் வரை, கைபேசி வாங்கி தராதீர் கள். வாங்கி தர வேண்டிய கட்டாயம் வந்தால், ‘போஸ்ட்பெய்ட்’ கனெக்ஷனுடன் கூடிய கைபேசி வாங்கித் தாருங்கள்.