Home பெண்கள் பெண்குறி பெண்குறி முடி அகற்றும் முறை

பெண்குறி முடி அகற்றும் முறை

1658

downloadஒவ்வொருவருக்குமே அந்தரங்க உறுப்பில் வளரும் முடியை ஷேவிங் செய்யலாமா கூடாதா என்ற கேள்வி எழும். இந்த கேள்வியை நம் முன்னோர்களிடம் கேட்டால், நல்லதல்ல என்று சொல்வார்கள். ஆனால் தற்போதைய சந்ததியினரிடம் கேட்டால், அதை நீக்காமல் இருந்தால் எப்படி அசிங்கம் இல்லையா என்று சொல்வார்கள். இதே நேரத்தில் தற்போது பலரும் தங்களது பிறப்புறுப்பில் வளரும் தேவையற்ற முடியை நீக்குகின்றனர்.
ஆனால் பலருக்கும் பிறப்புறுப்பில் வளரும் முடியை எப்படி நீக்குவது சரி என்று தெரியாது. இதனால் பலருக்கும் பிறப்புறுப்பில் ஷேவிங் செய்த பின்னர் அரிப்புகள், எரிச்சல், போன்றவை ஏற்படும். ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை பிறப்புறுப்பில் வளரும் முடியை ஷேவிங் செய்யும் போது மனதில் கொள்ள வேண்டியவைகள் கொடுக்கப்பட்டள்ளன. அதைப் படித்து அதன்படி செய்தால், நிச்சயம் பிறப்புறுப்பில் அரிப்புகள் ஏற்படுவதைத் தடுக்கலாம்.
கத்திரிக்கோல் பெஸ்ட்
பிறப்புறுப்பில் உள்ள முடி நீளமாக இருந்தால், அதனை நீக்கும் முன், கத்திரிக்கோல் கொண்டு முதலில் ட்ரிம் செய்து கொள்ள வேண்டும். இதனால் ஷேவிங் செய்வது மிகவும் ஈஸியாக இருக்கும்.
சுடுநீர் குளியல்
பிறப்புறுப்பில் உள்ள முடியை நீக்கும் முன், சுடுநீரில் நன்கு குளியல் எடுத்துக் கொள்ள வேண்டும். இதனால் அங்குள்ள மயிர்கால்கள் தளர்ந்து, ஷேவிங் செய்யும் போது முடி விரைவில் வெளிவரும்.
குளிர்ந்த நீர்
ஷேவிங் செய்து முடித்த பின்னர் குளிர்ந்த நீரில் பிறப்புறுப்பைக் கழுவி, பின் ஷேவிங் க்ரீம் தடவிக் கொள்ள வேண்டும்.
ஷேவிங்
ஷேவிங் க்ரீம் தடவி சில நிமிடம் மசாஜ் செய்து, பின் ஷேவ் செய்தால், முடி சீக்கிரம் வெளிவருவதோடு, ஷேவிங் செய்வது எளிமையாகவும் இருக்கும்.
ரேசர்
எப்போது அந்தரங்க உறுப்பை சுத்தம் செய்யும் போதும், ரேசரில் புது பிளேடு போட்டு தான் பயன்படுத்த வேண்டும்.
சோப்பு தண்ணீர்
ஷேவிங் செய்து முடித்த பின்னர்,சோப்பு மற்றும் தண்ணீர் கொண்டு பிறப்புறுப்பை கழுவ வேண்டும். இதனால் அவ்விடத்தில் தொற்றுகள், பூஞ்கைள் போன்றவை தொற்றாமல் தடுக்கலாம்.
பவுடர்
கடைசியான ஆனால் முக்கியமாக பேபி பவுடர் மற்றும் டால்கம் பவுடரை பிறப்புறுப்பில் போட்டு வந்தால், அவ்விடத்தில் வறட்சி ஏற்படுதைத் தடுக்கலாம்.