Home பாலியல் செக்ஸ் கல்வி – வயது வந்தோருக்கு மட்டுமல்ல அனைவருக்கும்

செக்ஸ் கல்வி – வயது வந்தோருக்கு மட்டுமல்ல அனைவருக்கும்

33

tamil-masala-movie-drogam-nadanthathu-enna-hot-stills-38_650சொல்லி தருவதல்ல மன்மதக்கலை என்பது வாக்கு. மன்மதக்கலை என்பதை நாம் பொதுவாக கலவியோடு நாம் தொடர்பு படுத்திக்கொள்கிறோம். உண்மையில் மன்மதக்கலை என்பது கலவி மட்டும் தானா என்று சிந்தித்து பார்த்தோமேயானால் இல்லை என்று தான் சொல்லவேண்டும். இன்றைய நாளில் பேருந்திலோ, உடன் பணிபுரியும் சக பணியாளர்களாலோ, வக்கிர புத்தி கொண்ட மனிதர்களால் பெண்கள் துன்புறுத்தபடுகிறார்கள்.

இந்த நிலைப்பாட்டை நாம் எப்படி கட்டுப்படுத்துவது அல்லது முழுமையாக நீக்குவது என்று பார்க்கும் போது இளமையிலேயே அவர்களுக்கு பாலியல் கல்வியை போதித்தோமேயானால் ஓரளவு இத்தகைய குறைகளை நாம் களையலாம். இளம் பிராயத்திலேயே பாலியல் ரீதியினலான தொந்தரவுகளுக்கு குழந்தைகள் குறிப்பாக பெண் குழந்தைகள் உட்படும்போது பின்னாளில் அவர்கள் தீவிரமான மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள்.

இந்த குறையை போக்குவதற்கு உலகம் முழுவதிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. உலக மக்கள் தொகையில் முதலிடத்தில் உள்ள சீனா சமீபத்தில் (where babies come from), ஏன் சிறுவர்கள் சிறுமியரிடமிருந்து வித்தியாசப்படுகிறார்கள்….? (why boys are different from girls ) மற்றும் எவ்வாறு சிறுவர், சிறுமியர் பாலியல் கொடுமையை தவிர்க்கலாம்..? How minors can prevent molestation என்ற மூன்று வீடியோக்களை வெளியிட்டு அதுவும் யூ டியூப் தளத்தில் சுமார் 10 லட்சம் நபர்களால் பார்க்கப்பட்டுள்ளது.

மேலும் குழந்தைகள் பாலியல் தொந்தரவுகள் உட்படுத்தப்படுகிறார்கள் என்று சொல்லும் போது சில கட்டுக்கதைகளும் நம்மிடையே உலவிவருகின்றது. அதில் முக்கியமாக குழந்தைகள் இந்த தொந்தரவுகளுக்கு உட்படுத்தபடுவது அரிதான ஒன்று என்பதும் மேற்கத்திய நாடுகளில் மட்டும் தான் இந்த மாதிரியான குற்றங்கள் நிகழ்கிறது என்பதும்…

இந்தியாவில் குறிப்பாக ஆரோக்கியமற்ற குடியிருப்பு (Slum) பகுதிகளில் தான் இந்த குற்றங்கள் நிகழ்கின்றன என்பதும் பெண்குழந்தைகள் மட்டுமே இந்த தொந்தரவுக்கு உட்படுத்தபடுகிறார்கள் என்பதும் மேலும் பிரிந்த குடும்பங்களை சேர்ந்த குழந்தைகளுக்கு மட்டும் இவை ஏற்படுகிறது என்பதும் இந்த மாதிரியான குற்றங்களை செய்பவர்கள் குழந்தைகளை புதியதாக பார்ப்பவர்கள் என்பது போன்ற கருத்துக்கள் நம்மிடையே உள்ளது.

இது உண்மையல்ல நமது குழந்தைகளுக்கு நாம் பாலியல் கல்வி தொடர்பான கருத்துக்களை சொல்லித்தருவது அவசியம். முதலில் தன்னை தொட்டு பேசும் நபர்களை எதுவரையில் குழந்தைகள் அனுமதிக்க வேண்டும் என்பதை சொல்லித்தர வேண்டும். இதனை பொதுவாக குட் டச் பேட் டச் என்று அழைப்பதுண்டு. மேலும் நமது உடல் உறுப்புகளை தெளிவாக எடுத்துரைத்து அதன் செயல்பாடுகளையும் இலகுவாக சொல்லவேண்டும். மிகவும் பாதுகாப்பாக இருப்பது எப்படி என்பதை சொல்லவேண்டும்.

பாதுகாப்பு என்று சொல்லும் போதே ஏதோ பாதுகாப்பில்லாத அம்சம் நமது உடலில் இருக்கிறதா என்பதையும் சொல்லி பெற்றோர் அல்லது பாதுகாவலர் நமது எந்த எந்த உடல் உறுப்புகளை தொடலாம் என்பதையும் கூறி புதியவர்கள் அருகே குழந்தைகள் தனியாக செல்லக்கூடாது என்பதனையும் அறிவுறுத்தவேண்டும். இவையெல்லாம் சொன்னாலும் சில நேரங்களில் வீபரீதங்கள் நடக்கின்றனவே என்று சொல்வது கேட்கிறது.

ஆபத்து நேரத்தில் சத்தம் போட்டு அந்த இடத்தில இருந்து வெளியேறி நாம் பாதுகாப்பானவர் என்று நம்புகிற நபர்களிடம் போகும் படி சொல்லவேண்டும். வெளியிடங்களில் இருக்கும் போதும் பாதுகாப்பான நபர்களை சுற்றியே குழந்தைகள் இருப்பது போல் பார்த்துகொள்ளுதல் அவசியம். அவ்வப்போது குழந்தைகள் சொல்ல வரும் கருத்துக்களை காது கொடுத்து கேட்டு அவர்களின் சந்தேகங்களை நிவர்த்தி செய்து சரியான பாதையில் அவர்களை பயணிக்க வைக்க வேண்டும்.

குறிப்பாக ஆறு மாதத்திற்கு ஒரு முறை பாலியல் கல்வி தொடர்பான கலந்துரையாடல் நிகழ்ச்சிகளை அருகில் உள்ள குழந்தைகளோடு ஏற்பாடு செய்து நமது குழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தினால் ஓரளவு இந்த குற்றங்கள் குறைந்து நமது குழந்தைகள் பாதுகாப்பானவர்களாக வளர்வார்கள் என்பதில் சந்தேகம் இல்லை….!