1. சமையல் செய்யும்போது காய்கறிகளின் சத்து அதிகமாக வீணாகாமலிருக்கக் காய்கறிகளைப் பெரும் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
2. தண்ணீர்
கொதி வந்த பிறகு காய்கறிகளைப் போட்டு வேகவைக்க வேண்டும். காய்கறிகளைக்
குறைந்த நேரம் வேகவைப்பதால் ஊட்டச் சத்துக்களை பாதுகாக்கலாம். சமைத்த
காய்கறிகளை மீண்டும் சூடாக்குவதால் உயிர்ச்சத்துக்கள் அழிகின்றன.
3. காய்கறிகளை அரியும் முன்பே கழுவ வேண்டும். காய்கறிகளை அரிந்து தண்ணீரில் போடுவதால் வைட்டமின் சத்து குறைகிறது.
4. காய்கறிகளின் தோலை ஒட்டியே பெருமளவில் வைட்டமின்களும், உலோகச் சத்துக்களும் இருப்பதால் காய்கறிகளைத் தோலுடன் சமைப்பதே நல்லது.
5. முந்தைய நாள் இரவே காய்கறிகளை நறுக்கி வைத்துவிடுவதாலும் அதிலுள்ள சத்துக்கள் குறைகின்றன.
6. காய்கறி, கிழங்குகள் விரைவில் வேக வேண்டும் என்பதற்காக சோடா உப்பைப் பயன்படுத்தக்கூடாது. இது சத்துக்களை அழித்துவிடும்.