Home சூடான செய்திகள் ஆணை விட பெண் பலமானவள்!!

ஆணை விட பெண் பலமானவள்!!

23

பெண்களுக்கு மாரடைப்பு வரும் வாய்ப்புகள் குறைவு என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. ஆண்களில் 100 பேருக்கு மாரடைப்பு வந்தால், பெண்களில் 10 பேருக்கு மட்டுமே வருகிறது.

இக்காலத்தில் ஆணும், பெண்ணும் ஒரே மாதிரியான வேலை பார்க்கிறார்கள் மற்றும் ஒரே மாதிரியான நிகழ்வுகளை சந்திக்கிறார்கள். பிறகு ஏன் பெண்ணுக்கு மட்டும் மாரடைப்பு அதிகமாய் வருவதில்லை? என்பதை பற்றி பார்க்கலாம்.

ஆணை விட பெண் பலவீனமானவள் என்பது தவறான கருத்து. மாதவிடாய், கர்ப்பம், பிரசவம், வீட்டு வேலை என பலவற்றுக்குப் பின்னும் பெண் சக்தியோடு நடமாடுகிறாள். ஆதலால் இறைவன் படைப்பில் ஆணை விட பெண்ணே சக்தி நிறைந்தவள் மற்றும் பலமானவள்.

பெண்ணுக்கு 14 வயதுக்கு மேல் கர்ப்பப்பையின் சினை முட்டை உருவாகி ரத்தக்கசிவு ஏற்படுகிறது. அடுத்தடுத்த 26 நாட்களுக்கு ஒரு முறை, இவை உருவாகும் போது ஏற்படும் பலவீனத்திலிருந்து பெண்ணைக் காக்க ‘ஈஸ்ட்ரோஜன்’ எனப்படும் ஹார்மோன் சுரக்கிறது. இதுவே பெண்ணுக்கு பலமும் பாதுகாப்பும் தரும் மருந்தாக உள்ளது.

இந்த ஹார்மோன் 50 வயது வரை சுரப்பதால் பெண்கள் சக்தியோடு பல பணிகளை செய்ய முடிகிறது. 50 வயதை கடந்த பெண்களுக்கு ஆண்களைப் போலவே மாரடைப்பு வர அதிகம் வாய்ப்பு உள்ளது. மேலும் எலும்பும் பலவீனம் அடைகிறது. இதனால் பெண் சோர்வடைகிறாள்.

பெண்களுக்கு வயிறு, இடுப்புப் பகுதி 38 இன்ச், 40 இன்ச் என்று அகலமானால் இதய நோய்கள் வரும் வய்ப்பு உள்ளது. ஆதலால் 50 வயதை கடந்த பெண்கள் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும்.