உணவுக் கட்டுப்பாடுகள்
இன்றைய சூழ்நிலையில் பெண்களுக்கு அதிகமாக ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று ஹார்மோன் பிரச்சனை.
அதிக வேலைச் சுமை, மன அழுத்தம் போன்றவற்றால் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.
ஹார்மோன் சரியாக செயல்படாமலிருந்தால் பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் ஏற்படும் மாதவிடாய் சுழற்சியிலும் மாற்றம் ஏற்படும்.
இத்தகைய பிரச்சனைகளை சில உணவு கட்டுப்பாடுகள் மூலம் சரி செய்யலாம்.
1. மாதவிடாயின் போது வலிகள் ஏற்படும்.
அதற்கு நம் உடலில் உள்ள சத்து குறைபாடே காரணம்.
அதற்கு தினமும் பால் உட்கொள்ள வேண்டும்.
2. அதிக இரத்தப்போக்கு ஏற்பட காரணம் இரும்புச் சத்து குறைவாக இருக்கலாம்.
உணவில் முட்டை, கீரை வகைகளை சேர்க்க வேண்டும்.
3. பெண்களுக்கு மாதவிடாயின்போது உடல் சோர்ந்து காணப்படுவர்.
நல்ல ஊட்டச்சத்து உணவுகளை உண்ண வேண்டும்.
அதோடு ஆப்பிள், மாதுளை பழங்களையும் சேர்க்க வேண்டும்.
4. அதிகமான காய்கறிகள், பழங்களை சாப்பிட வேண்டும்.
உணவில் பருப்பு வகைகளையும் சேர்க்க வேண்டும்.