Home பாலியல் பாலுறவு பற்றிய தவறான நம்பிக்கைகள் / பழக்க வழக்கங்கள்

பாலுறவு பற்றிய தவறான நம்பிக்கைகள் / பழக்க வழக்கங்கள்

92

ஆசன வாய் மூலம் உடலுறவுக்கு பின் வெந்நீரில் உப்பு போட்டு கழுவினால் நோய் வராது.
#. ஆணுறுப்பு பெரிதாக இருந்தால் ஆணுறை தேவையில்லை.
#.விந்துவை உட்கொண்டவுடன் வேப்பிலை சாப்பிட்டால் நோய் வராது.
#.ஆசன வாயில் புணர்ச்சி கொள்பவர்கள் வேப்பிலை சாப்பிட்டால் பால்வினை நோய் கிருமி, HIV கிருமி மலம் மூலம் வெளிவந்து விடும்.
#. மிக இளம் வயது ஆண் / பெண்ணிடம் ஆணுறையின்றி உடல் உறவு கொண்டால் எச்.ஐ.வி வராது.
#. விந்துவை உட்கொள்வதன் மூலம் முகம் பொலிவடைகிறது.
#. ஆசன வாய் உடலுறவுக்குப் பின் குழாய்த் தண்ணீரில் கழுவினால் எச்.ஐ.வி தொற்றாது.
#. வயதானவர்களிடம் உடலுறவு வைத்துக் கொண்டால் எச்.ஐ.வி வராது.
#. வாய் வழி உடலுறவும் ஆசன வாய் உடலுறவும் ஒரே நேரத்தில் செய்வதால் இளமை கூடும்.

இது போன்ற பல்வேறு சிந்தனைகளும் – எண்ணங்களும் மேலோங்கலாம். இது போன்ற செயல்களிலும் ஈடுபடலாம்.இவை அனைத்தும் தவறான நம்பிக்கை ஆகும். இவற்றில் உண்மை எதுவும் இல்லை பாதுகாப்பின்றி உடலுறவில் ஈடுபடும் போது பால்வினைத் தொற்று , எச்.ஐ.வி தொற்று இருவரில் யார் ஒருவரிடம் இருந்தாலும் மற்றொருவருக்கு, தொற்று ஏற்படும்.

எனவே அறிவியல் பூர்வமற்ற தவறான நம்பிக்கைகளை கைவிட்டு, ஒருவனுக்கு ஒருத்தி என்ற அடிபடையில் வாழ்வதும் மற்றும் பாதுகாப்பான உடலுறவுப் பழக்கத்தை கடைபிடிப்பதாலும் நோய்த் தொற்று இல்லாத சமூகம் உருவாக வழி வகுக்கும்.