ஆணின் மரபணுக்கள் அவசர கதியில் செயல்பட, இதனால் அவன் உடல் மீண்டும் ஒரு முறை மாறி போனது. பெண் எத்தனை பேரோடு உறவு கொள்வாள் என்பதை இவனால் யூகிக்கவும் முடியாது, அந்த கால நிலவரப்படி தடுத்திருக்கவும் முடியாது. இவனால் செய்ய முடிந்ததெல்லாம், மிக அதிகமான எண்ணிக்கையிலும், அளவிலும் விந்தணுக்களை உற்பத்தி செய்து மிகையாய் பாசனம் செய்வது மட்டுமே.
ஒரே தரம் கூடினாலும், இவன் பாட்டிற்கு எக்கசெக்க விந்தணுக்களை வெள்ளமென பாய்த்து தள்ளினால், ஏற்கனவே இன்னொருவனின் விந்தணுக்கள் அவள் உடம்பில் இருந்தாலும், அவற்றை எல்லாம் மூழ்கடித்துவிட்டு, இவனுடையவை முந்தி ஓடிபோய் அவள் கருமுட்டையை பிடித்து கலந்துவிடுமே. அப்புறம் என்ன மரபணு ஆட்டத்தில் இவனே ஜெயித்திடுவானே!
இந்த மிகைபாசன யுத்திக்கு ஏற்றாற் போல மனித அணின் உடலும் மாறியது. விந்தகங்கள் பெரியாதி, அவை உற்பத்தி செய்யும் வந்தணுக்களும் பல மில்லியன்கள் அதிகமாயின. இப்படி உருவாகும் விந்தணுக்கள் நீந்த அவற்றுக்கு சக்தி வேண்டுமே. அதனால் பிரத்தியேகமான எரிபொருளை தரவும், நீர் தன்மையை அதிகரிக்கவுமென புராஸ்டிரேட் சுரபியும், செமினல் சுரபியும் பெரிதாகி, கூடுதல் சுறூசுறுப்புடன் இயங்க ஆரம்பித்தன.
மனித இனத்திற்கு மிக பெருங்கிய இனமான கொரிலா குரங்குகளில் ஆணின் உடல் இயங்கும் விதமே வேறு. கோரிலா ஆல்ஃபா ஆணுக்கு ஆண் குறி சின்னதாகவும், அது வெளிபடுத்தும் விந்தணூ அளவு மிக குறைவாகவும் தான் இருக்கும். இத்தனைக்கும் கொரிலா ஆல்ஃபா ஆண் மனித ஆணைவிட பல மடங்கு பெரிய உடலை கொண்டது. இருந்தும் அது உற்பத்தி செய்யும் விந்தணு விகிதம் மனிதனை ஒப்பிடும் போது மிக குறைவே. ஏன் தெரியுமா?
கொரிலா பெண்கள் எல்லாமே ஒரே ஒரு ஆல்ஃபா ஆணோடு மட்டும் தான் கூடும். அவன் அவற்றை பாதுகாப்பான், தன் பிரதேசத்தினுள் புது ஆண்களை நுழையவே விட மாட்டான். அதனால் அவனுக்கு போட்டியே இல்லை. அவன் கொஞ்சூண்டு விந்தணுக்கள் எல்லாமே குறி தவறாமல் பெண்களின் கருமுட்டைகளை சென்று அடைந்துவிடும் என்பதால், அவன் அதிகம் உற்பத்தி செய்து மிகைபாசனத்திற்கு வீண்டிக்க வேண்டிய அவசியமே இல்லை.
ஆனால் மனிதர்களுக்கு அடுத்து நெருங்கிய உறவுக்கார இனமான சிம்பான்சிக்களின் இப்படி இல்லை. சிம்பான்சி ஆணும் பெண்ணும் கிட்ட தட்ட ஒரே சைஸில் தான் இருக்கும். சிம்பாண்சி பெண்கள் பல ஆண்களோடு கூடும் பழக்கம் கொண்டவை. உடனே, “சீ மோசமான பெண்ணா இருக்கே, மானங்கெட்ட இந்த சிம்பான்சீ” என்று உங்கள் மனித அணுகுமுறையில் இருந்து விமர்சிக்க ஆரம்பித்து விடாதீர்கள். மரபணு அணுகுமுறையில் இருந்து உற்று கவனித்தால், பெண் சிம்பான்சி, இப்படி பலதாரம் செய்வதற்கு பின் இருக்கும் அந்த முக்கிய வாழ்வியல் காரணம் புரியும்…..
ஆண் சிம்பான்சிகள் ரொம்பவே ஆக்கிரோஷமானவை. ஒரு பெண்ணை பார்த்து விட்டால் போதும், அவள் கையில் இருக்கும் பச்சிழம் பிள்ளையாக இருந்தாலும் பிடித்து, மரத்திலிருந்து தள்ளிவிட்டு கொன்றே விடும். யாருக்கோ பிறந்த குட்டிகளை இப்படி கொன்று, தன்னுடைய வாரிசுகளை மட்டும் உருவாக்கிக்கொள்வது தான் ஆண் சிம்பான்சிக்கு இயல்பு. இதை முறியடிக்க தான் பெண் சிம்பான்சி எல்லா ஆண்களோடும் கூடி வைக்கிறது, “அட, இது நம்ம குட்டியா இருக்குமோ?” என்று தயங்கியாவது ஆண் உயிர் தேசம் விளைவிக்காமல் இருக்குமே!
ஆக பெண் பல ஆண்களோடு கூடி தன் குட்டிக்கு அதிக பாதுகாப்பை தேட, இது ஆண் சிம்பான்சிகளுக்குள் மிக தீவிரமான மரபணுப்போட்டியை ஏற்படுத்த, தன் மரபணுக்களை முந்த வைப்பதற்க்காக ஆண் சிம்பான்சிகள் தேவைக்கதிகாய் எக்கசெக்க விந்தணுக்களை உறபத்தி செய்து, பெண்ணுக்குள் செலுத்தி வைக்கின்றன. இப்படி விந்தணு போட்டி நடப்பது சிம்பான்சிக்களுக்கு இயல்பு.
மனிதர்களும் சிம்பான்சிகளும் நெருங்கிய மரபணு தொடர்புள்ள உறவுக்கார இனங்கள் என்பதால் சிம்பான்சியின் இதே போக்கு மனித ஆணிடமும் இருப்பதை அவன் விந்தணு உற்பத்தி விகிதத்தில் இருந்து நாம் காணலாம்
ஆக, மாறிக்கொண்டே இருக்கும் பெண்ணின் தேர்வு விதிகளுக்கு ஈடுக்கொடுத்து மனித ஆணூம் காலத்திற்கேற்ப மாறிக்கொண்டே வந்தான். முதலில் ஆண் குறி நீளமானது. பிறகு பாக்கிலமில்லாமலேயே விரைப்புறும் அதிசய ஆற்றலை பெற்றான். அதன் பிறகு மிகை பாசனத்திற்கு தேவையான அதிகபடியான விந்தணுக்களை உற்பத்தி செய்யும் ஆற்றலை பெற்றான்.