Home பாலியல் ஆணை விட பெண்ணுக்கு ஆசை அதிகமாம்!

ஆணை விட பெண்ணுக்கு ஆசை அதிகமாம்!

50

உறவு கொள்வதில் ஆணுக்கும், பெண்ணுக்கும் வெவ்வேறு தருணங்களில் ஆசை ஏற்படும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆணைவிட பெண்ணுக்குத்தான் பாலுணர்வு ஆசை அதிகம் ஏற்படும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உறவுக்கான ஆசைகள்

பாலுணர்வு ஆசை மூளையில் இருந்து பிறப்பிக்கப்படுகிறது. உடல் தன்னை தயார் செய்து கொண்டு இயங்குகிறது. இதற்கு மரபணு எனப்படும் ஜீன்களையும் உடன் ஆலோசிக்கிறது மூளை. உடலுறவு சக்தியை லிபிடோ சக்தி (Libido Power) எனக் கூறுகிறார்கள். இந்தச் சக்தி ஆண், பெண் இருவருக்கும் வித்தியாசமாக அமைகிறது. பெண்களுக்கும், ஆண்களுக்கும் ஒரே விதத்தில் ஒரே நேரத்தில் உடலுறவு ஆசை உண்டாவதில்லை.

ஆண்களுக்கு அதிகாலை நேரத்திலும், பெண்களுக்கு அந்தி மயங்கும் நேரத்திலும் ஆசை வெளிப்படுவதாக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. அபூர்வமாக சில நேரத்தில் மட்டுமே ஆண், பெண் இருவருக்கும் கலவி ஆசை கிளர்ச்சி பெற்று எழுகிறது. கிளிட்டோரிஸ் என்ற உறுப்புத் தான் பெண்களுக்கு செக்ஸ் ஆசையைக் கிளர்ச்சியுறச் செய்கிறது.

பெண்ணுக்கு ஆசை அதிகம்

பெண்ணுக்கு ஆர்வம் இல்லாத சமயங்களில் ஆண் பல்வேறு விளையாட்டுக்களின் மூலம் பெண்ணிற்கு ஆர்வம் வரச்செய்கிறான். இதில் விஷேசம் என்னவென்றால், ஆண்களை விட, பெண்களுக்குத் தான் எல்லாப் பருவத்திலும் பாலுணர்வு ஆசை அதிகம் எனவும் ஆராய்ச்சிகள் தெரிவிப்பது தான்! இது போலவே உடலுறவின் போதும் ஆண்களுக்குத் தான் எளிதாக உடல் தளர்வு ஏற்படுகிறது. உடலுறவின் போதும், உடலுறவின் முடிவில் வரும் உச்சக்கட்டத்தின் போதும் ஆண்கள் மிகுந்த ஆனந்தம் அடைவதுண்டு என பாலியல் ஆராய்ச்சி நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள்.

அதீத உச்சக்கட்ட உணர்வு

பாலுறவு என்பது சம்பிரதாயமான நிகழ்வோ அல்லது கலியாணக் கடமையோ அல்ல. இரு மனங்களின் ஒத்திசைவின் அவற்றின் அன்புப் பிணைப்பின் ஓரியக்க நிலை என்றே கருத வேண்டும்

பொதுவாக ஆண்கள் சிங்கிள் ஆர்கஸம் உள்ளவர்கள். பெண்கள் பலமுறை உச்சமடைய வேண்டும் என்று நினைப்பார்கள். ஆக அதே போல் பெண்களின் உணர்வுகள் பாலியலில் அதிகம் ஆதிக்கம் செய்ய வேண்டியதும் கவனத்தில் எடுக்கப்பட வேண்டியதும் அவசியம். தாம்பத்ய உறவு என்பது வெறும் பத்துநிமிடத்தில் முடிந்துவிடக்கூடியது என்று ஆண்கள் தீர்மானிக்கலாம். அதுவே பெண்களைப் பொறுத்தவரை நீடிக்கலாம் குறுகியதாக இருக்கலாம். அது அவர்களின் தனி உரிமை உணர்வு நிலை சார்ந்தது. அதை ஆண் மட்டும் தீர்மானிக்க முடியாது என்கின்றனர் ஆய்வாளர்கள்.