Home சமையல் குறிப்புகள் கணவாய் கிரேவி

கணவாய் கிரேவி

28

தேவையான பொருள்கள் :கணவாய் – கால் கிலொ

வெங்காயம் – 2
தக்காளி – 2
பூண்டு – 8 பற்கள்
உப்பு – தேவையான அளவு
மிளகாய்த் தூள் – ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி
தாளிக்க :
எண்ணெய்
சோம்பு – அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை

செய்முறை:

கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து பொடியாக நறுக்கிய பூண்டு சேர்க்கவும்.

அத்துடன் பொடியாக அரிந்த வெங்காயம் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.

தக்காளி நன்கு குழைந்ததும் தூள் வகைகளைச் சேர்த்து, கால் கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.

தண்ணீர் கொதித்தவுடன் சுத்தம் செய்த கணவாய் துண்டுகளைச் சேர்த்து 2 நிமிடங்கள் வேகவிட்டு இறக்கவும்.

எளிதில் தயாரிக்கக் கூடிய கணவாய் கிரேவி தயார்.