Home சூடான செய்திகள் பெண்கள், அரைகுறை அறிவுடனேயே இருக்கிறார்களாம்!

பெண்கள், அரைகுறை அறிவுடனேயே இருக்கிறார்களாம்!

32

பெண்கள், அரைகுறை அறிவுடனேயே இருக்கிறார்களாம்! – ஆய்வில் பகீர் தகவல்

18 முதல் 40 வயது வரை உள்ள ஆயிரம் பெண்களிடம் ஓர் ஆய்வை நடத்தியது ஆங்கில இதழ் ஒன்று. பெரும்பான்மையான
பெண்கள் இனப்பெருக்க ஆரோக்கியம், கருத்தரி த்தல், குழந்தைப்பேறு உள்ளிட்ட பல விஷயங்க ளிலும் அரைகுறை அறிவுடனேயே இருப்பது அந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதன் படி…
30% பெண்கள் இனப்பெருக்க உறுப்புகளில் ஏற்ப டும் பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதி ல்லை. பிரச்னை முற்றினால்தான் சிகிச்சைக்கு வருகிறார்கள்.
40% பெண்களுக்கு கர்ப்ப காலம் குறித்த பயம் பெரிதாக இருக் கிறது.
50% பெண்களுக்கு குறைபாடுகளுட ன் குழந்தை பிறக்காமல் இருக்கக் கொடு க்கப்படும் ‘மல்டி வைட்டமின்’ மாத்திரைகள் குறித்த விழிப்புணர்வு இல்லை.

25% பெண்கள், பால்வினை நோய்கள்பற்றி அறியாமல் இருக்கிறார்கள். புகை பிடிப்பது, பருமன் போன்றவை குழந்தைப் பிறப்பை பாதிக்கும் என்பதும் அவர்களுக்குத் தெரிய வில்லை.
20% பெண்கள் ‘வயதானால் குழந்தை பெறும் வாய்ப்பு குறையும்’ என்பதையோ, அதன் விளைவாக கருக்கலையும் ஆபத்து அதிகரிப் பதையோ, தாமதமாகக் கருத்தரிப்பதால், குழந்தை மரபணுக் கோளாறுகளுடன் பிறக்கக்கூடும் என்பதையோ அறியாமல் இருக்கிறா ர்கள்.
50% பெண்கள் ஒரே நாளில் பல முறை உடலுறவு வைத்துக்கொண்டால் மட்டு மே குழந்தை பிறக்கும் என நம்புகிறார் கள்.
30%பெண்கள் வித்தியாசமான மாறுபட்ட நிலைகளில் உடலுறவு கொண்டால் மட்டுமே கர்ப்பம் தரிக்கலாம் என கருதுகிறார்கள்.
10% பெண்கள் மட்டுமே, ‘கருமுட்டை உருவாவ தற்கு முன் தாம்பத்திய உறவு நிகழ்ந்தால்தான் கருத்தரிக்கும் வாய்ப் புகள் அதிகரிக்குமே தவிர, அதற்குப் பிறகான உறவு எந்த வகையிலும் உதவப்போவதில் லை’ எனத் தெரிந்து வைத்திருக்கிறார்கள்.