Home குழந்தை நலம் பட்டுப் பாப்பாவுக்கு காட்டன் ட்ரஸ் போடுங்க!

பட்டுப் பாப்பாவுக்கு காட்டன் ட்ரஸ் போடுங்க!

20

புதிதாய் பிறந்த குழந்தைகளுக்கு ஆடை அணிவிப்பது சற்று கவனமாக கையாளவேண்டிய விசயமாகும். நாம் அணிவிக்கும் ஆடைகள் குழந்தைகளுக்கு உறுத்தாத வகையில் இருக்கவேண்டும். குழந்தையின் உடல் தட்ப வெப்பத்திற்கு ஏற்ப சரியான உடைகளை தேர்ந்தெடுத்து அணிவிக்க வேண்டும் என்கின்றனர் குழந்தை நல மருத்துவர்கள்.

பருத்தி ஆடைகள்

பிறந்த குழந்தை அடிக்கடி சிறுநீர் கழிக்கும் எனவே எளிதாக கழற்றி மாட்டக்கூடிய ஆடைகளை அணிவிக்க வேண்டும்.

கோடை காலத்தில் பருத்தி துணிகளினால் ஆன ஆடைகள் என்றால் குழந்தைகளின் சருமத்திற்கு ஏற்றது. வியர்வையினால் நனைந்து சளி பிடிக்காமல் செல்லங்கள் தப்பிக்கலாம்.கோடையில் சிந்தெடிக் மெட்டீரியல் துணிக்களை அணிவித்தால் அது குழந்தைகளின் சருமத்திற்கு அரிப்பை ஏற்படுத்தும்.

ஆரோக்கியமான ஆடைகள்

பொதுவாக குழ‌ந்தைக‌ளி‌ன் ஆடைக‌ள் ‌மிகவு‌ம் சு‌த்தமாக இரு‌க்க வே‌ண்டு‌ம். அ‌திலு‌ம் கை‌க் குழ‌ந்தை‌யி‌ன் ஆடைகளு‌க்கு அ‌திக கவன‌ம் தேவை.அ‌வ்வ‌ப்போது ஆடைகளை மா‌ற்‌றி‌க் கொ‌ண்டே இரு‌ப்பது ந‌ல்லது. ஒரு நாளு‌க்கு 3 முத‌ல் 5 உடைகளையாவது மா‌ற்ற வே‌ண்டு‌ம்.

பொதுவாக குழ‌ந்தைக‌ளி‌ன் ஆடைக‌ள் மெ‌ல்‌லிய பரு‌த்‌தி து‌ணிகளா‌ல் தை‌க்க‌ப்ப‌ட்டதாகவு‌ம், ப‌ட்ட‌ன், ஊ‌க்கு‌ப் போ‌ன்றவை இ‌ல்லாததாகவு‌ம் இரு‌ப்பது ந‌ல்லது.

கையில்லாத காட்டன் சட்டை காற்றோட்டமுள்ள துணிகளை அணிவிக்கலாம். முடிபோடு‌ம்படியான நாடா‌க்க‌ளை கொ‌ண்டதாக ஆடைக‌ள் இரு‌க்கலா‌ம். இறு‌க்கமான ஜ‌ட்டிக‌ளை தயவு செ‌ய்து பய‌ன்படு‌த்த வே‌ண்டா‌ம்.

குளிர்காலத்தில் உடை

அதே சமயம் குளிர்காலம் என்றால் மென்மையான கம்பளிகளினால் ஆன ஆடைகளை குளிர் தாக்காதவாறு இரவு நேரங்களில் அணிவிக்கலாம். பாதங்களை காக்க குழந்தைகளுக்கு ஷாக்ஸ் அணிவியுங்கள் அது குளிருக்கு இதமாய் இருக்கும்.