குழந்தைகளுக்கு அனுபவம் ஏதும் இல்லை. அவர்களுக்கு நாம் கற்றுத் தர வேண்டும். பெற்றோர்கள் தங்களின் அனுபவத்தால் பல விஷயங்களை தெரிந்து நல்லதொரு வாழ்க்கையை வாழ்கிறார்கள். எல்லா பெற்றோரும் தாம் ஓர் இலட்சியவாதியாக இருந்து, தம்மைப் பார்த்து குழந்தைகள் பழக வேண்டும் என்று எண்ண முடியாது. பெற்றோர்களிடம் நல்ல பழக்கங்கள் இருத்தல் அவசியமாகும். சில பெற்றோர்கள் தாம் சொல்வதைக் கேட்டு தமது இலட்சியத்தை கடைப்பிடிப்பார்கள் என்று உறுதியுடன் சொல்ல முடியாது.
இலட்சியங்களாவன:
* கட்டுப்பாடு
* வார்த்தையைக் காப்பாற்றுதல்
* பணிந்து நடத்தல்
* பண்பட்டவராக இருத்தல்
* உண்மையாயிருத்தல்
* குடும்பத்தாரிடையே நல்ல பழக்கம்
பெற்றோர்களும் குழந்தைகளும் பள்ளியிலும் பள்ளி விடுமுறையிலும் சில குறிப்பிட்ட திட்டப்படி நடக்க வேண்டும். இப்பழக்கம் குழந்தைகளை எப்போதும் கட்டுப்பாடுடன் இருக்கச் செய்யும்.
குழந்தைகளுக்கு பள்ளி திறக்கும்போது அவர்களை தயாராக்கி சில பணிகளைச் செய்ய வைக்க வேண்டும். புதிய புத்தகங்களுக்கு அட்டை போடுதல், பையை நிரப்புதல், தங்கள் சீருடைகளைத் தயாரித்தல், மதிய உணவு பொட்டலம் கட்டுதல் முதலிய தன் ஊக்குவிப்பு முயற்சிதான். இது நன்றாக வேலை செய்யும்.
புதிய சந்தர்ப்பம், சூழலில் குழந்தைகள் செயல்பட உதவி செய்யும். புதிய கல்வி ஆண்டுத் துவக்கம், புதிய இடம் முதலியவை. பெற்றோர் மனது எளிதாகி குழந்தைகளின் கல்வியில் கவனம் ஏற்பட அவர்களோடு சேர்ந்து உழைக்க வேண்டும். குழந்தைகளை எப்படி வேண்டுமானாலும் மாற்றலாம். பெற்றோரின் விருப்பத்திற்கு ஏற்ப மாற்ற முடியும். குழந்தைகளுக்கு, பெரியோருக்கு கீழ்ப்படிதல் மற்றும் மரியாதை கொடுத்தல் பற்றி சொல்லித் தரவும்.
தாய், தந்தை, ஆசிரியர் மற்றும் விருந்தினர் ஆகியோரைக் கடவுளாகக் கருத வேண்டும். குழந்தைகள் தாய், தந்தை, ஆசிரியர் மற்றும் விருந்தினர் ஆகியோருக்கு கீழ்ப்படிந்து மரியாதையுடன் நடக்க வேண்டும். சில பெற்றோர்கள், தங்கள் குழந்தைகள் மிகவும் இளையவர்கள். அவர்களை சீர் செய்ய முடியாது என்றும் எண்ணுவார்கள். அவர்கள் முதலில் வளரட்டும் என்றும் கூறுவார்கள். இரும்பைச் சூடாக இருக்கும்போது அடித்தால் நாம் விரும்பிய வடிவைப் பெற முடியும். இதனை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். ஒரு செடியை நீங்கள் வளைக்க முடியாதபோது ஓங்கி வளர்ந்த மரத்தை எப்படி வளைப்பீர்கள்? இளம் வயதில்தான் குழந்தைகளுக்கு அறிவுரைகள் வழங்கலாம். இளம் பருவத்தில் கோபப்படாதீர்கள். அவர்களைப் பயப்படுத்த வேண்டாம். அவர்களுக்கு சொல்லிக் கொடுத்துக்கொண்டே அல்லது கற்பித்துக் கொண்டேயிருங்கள். அவசரப்படாதீர்கள். வேகமாகச் செய்திகளை மேலும் மேலும் சொல்லிக்கொண்டேயிருக்காதீர்கள்.
கீழ்ப்படிதல் என்பது ஓர் அடிப்படைப் பண்பு. இது அவர்களிடையே ஒரு வழக்கமாக மாற வேண்டும். இதற்கு மாறாக உங்கள் குழந்தையை பெரியோரைக் கண்டால் வணக்கம் செய் என்று உத்தரவு போடவும் கூடாது. குழந்தையே இப் பண்பினை வழக்கமாக மாற்றிக்கொள்ள வேண்டும். குழந்தை எப்போதும் இல்லையென்று சொல்லாது. அவர்கள் மீது ஆற்றலைப் பிரயோகிப்பது நமது நோக்கை அடையப் பயன்படாது.
குழந்தைகளுக்கு கீழ்க்கண்டவற்றை சொல்லிக் கொண்டேயிருங்கள்:
* பள்ளிக்குச் செல்லும்போது காலம் தவறாது செல்லவும்.
* பள்ளிக்குச் செல்லும்போது சீருடை அணிந்து செல்லவும்.
* பள்ளியின் வீட்டுப் பாடத்தை திட்டப்படி நேரப்படி முடிக்கவும்.
இவைகள் எல்லாம் கட்டுப்பாட்டுடன் செய்யப்பட வேண்டும்.
குழந்தை உண்மையை மட்டும் பேச வேண்டும். உண்மை எப்போதும் வெற்றிபெறும். குழந்தைகளை இந்த விஷயத்தில் நல்ல தெளிவான அறிவு வரும்படி செய்ய வேண்டும். உண்மைதான் எப்போதும் வெற்றியைத் தரும். “சத்திய மேவ ஜெயதே” – உண்மை மட்டும் வெற்றியைக் கொடுக்கும். இது உபநிஷத்தின் சாரம். எந்த இடத்திலும் பொய் பேசக்கூடாது.
குழந்தைகளை பூரண திருப்தி செய்ய ஹரிச்சந்திரன் மற்றும் மகாத்மா காந்தி பற்றிய கதைகளைச் சொல்லவும். ஹரிச்சந்திரா நாடகத்தை காந்திஜி குழந்தைப் பருவத்தில் பார்த்து அதன்பின் சத்திய வழி மற்றும் உண்மை வழியை பின்பற்றினார். பின்னர் தம் வாழ்நாளில் முழுக்க முழுக்க உண்மையை மட்டும் பேசினார். தன் சுயசரிதை நூலின் தலைப்பையே ‘எனது சோதனைகள்’ என்று எழுதினார்.
குழந்தைகளுக்கு படுக்கும் முன் சொல்லப்படும் கதைகளில் வீரம் மிக்க தைரியமிக்க கதாநாயகர்கள் பற்றிச் சொல்லவும். இதனால் குழந்தைகள் வீரமும் தைரியமும் ஜெயிக்கும் என்றும், ஆனால் கோழைத்தனம் தோற்றுவிடும் என்றும் புரிந்துகொள்வார்கள்.
நீங்கள் ஒரு பொய் சொன்னால், குழந்தைகளும் பொய் சொல்லத் தொடங்கும். எனவே அவர்களுக்கு முன் கவனமாக இருங்கள். சில பெற்றோர்கள் பொய் சொல்வதால் தங்கள் குழந்தைகள் நன்மையடைவார்கள் என நம்புகிறார்கள். ஆனால் இந்த உண்மையை குழந்தைகள் அறிந்த பின் தங்கள் பெற்றோர் பொய் பேசுவதால் நாமும் பேசலாம் என்று எண்ணத் தொடங்குவார்கள். முடிந்த அளவு பொய் பேசாமல் இருப்பதுதான் நல்லது. இல்லாவிடில் குழந்தைகள் மற்றொரு பொய் சொல்லுமளவிற்கு சூழ்நிலைகளை ஏற்படுத்தாதீர்கள்.
குழந்தைகளுக்கு விருந்தினரை வரவேற்கவும் அவர்களோடு நன்கு பழகவும் கற்றுக் கொடுக்கவும். விருந்தினரைப் பார்த்ததும், வணக்கம் சொல்லும் பழக்கம் வர வேண்டும்.
மாமா உள்ளே வாருங்கள், மாமா இங்கு அமருங்கள் என்ற வார்த்தைகள் விருந்தினரை மகிழ்விக்கும். இவர்களது நல்லொழுக்கத்தை விருந்தினர்கள் கண்டு வியப்படைவார்கள்.
உங்களை பிறர் எப்படி நடத்த வேண்டுமென்று விரும்புகிறீர்களோ அதே மாதிரி நீங்கள் பிறரை நடத்துங்கள். இத்தகைய கருத்தை பெற்றோர் தம் குழந்தைகளுக்கு கற்றுத் தர வேண்டும். பிறர் விரும்பத்தக்க வகையிலும், பண்பாடு உள்ள வகையிலும் பிறரிடம் நடந்துகொள்ள கற்றுத்தர வேண்டும். அதேசமயம் நாம் நம் குழந்தைகளோடு பழகும் போது இதேபோல் பழக வேண்டும். நமக்குப் பல பிரச்சினைகள் கவலைகள் இருந்தாலும் அவற்றை வெளிக்காட்டிக் கொள்ளக்கூடாது. குடும்பத் தலைவர் நல்ல நடத்தையுடன் நடந்தால், குழந்தைகள் அதைப் பின்பற்ற துவங்கிவிடும். நாம் அவர்களுக்கு முன் உதாரணமாக நடக்க பழகிக்கொள்ள வேண்டும். குடும்பம் என்றால், நாம் பல விழாக்களை ஏற்பாடு செய்வோம். பிறந்த நாள் விழா, பெயர் சூட்டும் விழா, புதுமனை புகுவிழா முதலியவை. நம் விருந்தினருக்கும், நண்பர்களுக்கும் நல்வரவு கொடுக்க சொல்லித் தர வேண்டும். நன்னடத்தை என்பது முதியோராலும், இளையோராலும் விரும்பப்படுவதாகும். விருந்தினரை வரவேற்பது என்பது ஓர் இயல்பான திறமையாகும். அவர்களைக் கவனமாக பார்த்துக்கொள்வது என்பது ஒரு நல்ல நாகரிகம். நாகரிகமான நடத்தை, பெருமையும் புகழும் தரும். நன்னடத்தை இல்லாவிடில் வேண்டா விளைவுகள் வரும். பெருமை குறையும்.
ஒவ்வொரு குழந்தையும் தான் வளரும்போது சுற்றுப்புறச் சூழலுக்கு ஏற்றவாறு வளர்கிறார்கள். குழந்தைகளுக்கு நல்ல ஆடை அணியும் பழக்கத்தை சொல்லித் தர வேண்டும். ஆடை மனிதனை முழு மனிதன் ஆக்குகிறது.
அடிப்படை நல்ல ஒழுக்கங்கள்:
1. நேர்மை, முழுமையான நேர்மை
2. மனசாட்சி, நீதி
3. அன்பு, நம்பிக்கை, திட நம்பிக்கை, கோட்பாடு
4. சுயக் கட்டுப்பாடு
5. நம்பிக்கைக்குப் பாத்திரமாதல்
6. மன்னிக்கும் மனப்பான்மை
7. கருணை
8. அடக்கம்
9. நல்ல பழக்கங்கள் மற்றும் வழக்கங்கள்
10. சுயநலமில்லாமை
குழந்தைகளுக்கு மேற்கூறிய நல்லொழுக்கங்களை எப்படிப் பெறுவது என்பது தெரியாமல் இருக்கலாம். இவற்றை தெரிவிக்க வேண்டியது பெற்றோரின் கடமை. இவற்றை அவர்கள் கடைப்பிடிக்குமாறு செய்ய வேண்டும். ஒரு குழந்தையையும் மற்றொரு குழந்தையையும் வித்தியாசப்படுத்திப் பார்க்காதீர்கள்.
முழுமையான நேர்மை என்பது குணநலன்களில் முதுகெலும்பு போன்று முக்கியமானது. உண்மைக்கு எப்போதும் உயர்வு உண்டு. அதனைப் பின்பற்றுவதால் ஒரு நல்லொழுக்க சீலர் ஆக முடியும். உண்மையான மற்றும் நேர்மையான செயல்கள்தான் உங்கள் குணாதிசயங்களில் தலைநிமிர்ந்து நிற்கக் கூடியது.
நீதி என்பது நாம் கடைப்பிடிக்க வேண்டியது. நாம் எப்படி செயலாக்கம் செய்கிறோம், நாம் என்ன செய்கிறோம், எப்படிச் செய்கிறோம், எப்படி நமது மனசாட்சியை நீதியான முறையில் நடப்பதற்குப் பயன்படுத்துகிறோம் என்பது பற்றியது. மனசாட்சி, நேர்மை மதிப்புகள், நம்பிக்கை, கடமை, நல்லொழுக்கம், உண்மை, தைரியம், மதிப்பாக நடத்தல், முன்னெச்சரிக்கை, நம்பிக்கைக்குப் பாத்திரமாக, புகழ், நன்மை, நாணயம், ஒழுக்கத்துடன் சேர்ந்த நேர்மை, இவையெல்லாம் நல்லொழுக்கம் பற்றியது.
அன்புடன் இரு. பொறாமைப்படாதே. தற்பெருமை கொள்ளாதே! அன்பானது கருணையும் பொறுமையும் கொண்டது. குழந்தைகள் ஒருவரையொருவர் நேசித்து அன்புடன் பழக வேண்டும். அவர்களின் சிந்தனைப் பரிமாற்றம் அவர்களது திறமை மற்றும் இயல்பான திறமைகளை வளர்ப்பதிலே பெரும் பங்கு வகிக்கிறது. நம்பிக்கை எப்போதும் வீண்போவதில்லை, நம்பிக்கையோடு இருங்கள், நம்பிக்கையும் திட நம்பிக்கையும் ஒருவரை எல்லோருடனும் நன்கு பழக வைக்கிறது. குழந்தைகளுக்கு தன்னிச்சைப்படி செய்ய சுதந்திரம் கொடுங்கள். அன்பும் சுதந்திரமும் இணைந்தே செல்லும்.
நார்மன் வின்சென்ட் பியலின் நேசிக்கும் கதையை இங்கு சொல்வது மிகவும் பொருத்தமாகும்.
எனக்கு ஒரு நண்பர், அவரது மகன் பேஸ்பால் விளையாட்டில் ஒருவிதமான அக்கறை கொண்டுவிட்டான். ஆனால் எனது நண்பருக்கு அந்த விளையாட்டு பிடிக்காது. ஆனால் ஒரு வெயில் காலத்தில், தன் மகனைக் கூட்டிக்கொண்டு பல ஊர்களுக்கு 6 வார காலமாக பல போட்டிகளை காணச் சென்றார்கள். நிறைய பணமும் செலவானது. ஆனால் இப் பயணம் அப்பா, மகன் உறவிலே ஒரு நல்ல திருப்புமுனை ஏற்பட்டு இணைபிரியா தொடர்பு ஏற்பட்டது. திரும்பி வந்த பின் நீங்கள் பேஸ்பாலை மிகவும் விரும்புகிறீர்களா? என்று கேட்டார். அதற்கு அவர் ‘இல்லை’ என்று பதில் தந்தார். ஆனால் எனது மகனைத்தான் எனக்கு ரொம்ப பிடிக்கும் என்றார்.
சுயக்கட்டுப்பாடு என்பது ஓர் கொள்கை. ஒருவர் தன் வாழ்க்கை குறிக்கோளை அடைய, தனது சிந்தனைகளை உருவாக்க, இது உதவும் என்று நெப்போலியன் ஹில் என்பவர் கூறுகிறார். சுயக்கட்டுப்பாடுதான், தன்னை கட்டுப்படுத்தவும், சுயமதிப்பின் அடித்தளமாகவும் அமையும்.
நம்பிக்கை என்பது பிறரிடம் உள்ள நேர்மைக்கும் பொறுப்புணர்வுக்கும் உள்ள அசைக்க முடியாத நம்புதல்தான். நாம் நமது நண்பரை நம்பிக்கைக்கு பாத்திரமானவர் என்று நம்புதல் என்றும் நன்மை தரும்.
தப்பு செய்வது மனித இயல்பு; அதனை மன்னிப்பது கடவுள் இயல்பு. பிறரை மன்னித்து ஏற்றுக்கொள்வது ஒருவருக்கு நல்ல அமைதியையும் நல்ல முழு ஆரோக்கியத்தையும் கொடுக்கும்.
பிராணிகளிடம் கூட அன்பாக இருங்கள். ஏழை எளியோர், உடல்நலமில்லாதோர் ஆகியோரிடமும் அன்புடன் பழகுங்கள்.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கருணையுடன் இருக்கச் சொல்லிக் கொடுங்கள். சுபாஷ் சந்திரபோஸ் இளமையில் தெரு மூலையில் ஒரு முதுமையான பெண்ணிற்கு தினம் மூன்று பைசா தருவது வழக்கம். நரேந்திரநாத் என்ற சாதாரண மனிதன் ஏழைகளிடம் பரிவு காட்டினார். அதனால் அவர் பின்னாளில் விவேகானந்தர் என்ற உலகப் புகழ்பெற்றவர் ஆனார்.
லாஆ டிசு என்பவர் கூற்றுப்படி,
* வார்த்தைகளில் கருணை நம்பிக்கை கொடுக்கும்.
* சிந்தனையில் கருணை ஆழமான அறிவைத் தரும்.
* கொடுப்பதில் கருணை அன்பினை உருவாக்கும்.
* வெறுப்புணர்வு வாழ்க்கையை முடக்கி வாழ்க்கையை இருட்டாக்கிவிடும்.
பெற்றோர்கள் குழந்தைகளுக்கு எதையும் வெறுத்து ஒதுக்கக்கூடாது என்று சொல்லித்தர வேண்டும். லார்டு பசவேஸ்வரா, “மக்களே! எல்லா உயிரினங்களோடும் கருணையோடு நடந்துகொள்ளுங்கள்!” என்று சொல்கிறார்.
ஒருவர் எப்போதும் மென்மையாகவும் மகிழ்ச்சியுடனும் இருக்க வேண்டும். எப்போதும் சிரித்துக்கொண்டேயிருங்கள். சிரிப்புக்கு விலை ஏதும் இல்லை. ஆனால் அது அளிப்பதோ ஏராளம். இதைப் பெறுபவர் பெரும் உவகை அடைகிறார். இது வீட்டில் சந்தோஷத்தை அளிக்கிறது.
மிகுந்த அடக்கத்துடன் இருங்கள். உண்மையான அடக்கம் என்பது எளிய மற்றும் சுயநலக் கலப்பில்லாதது. சுயநலம், தான் என்ற அகந்தை மனிதர்களை கொல்கிறது. கற்றோரின் அறிகுறி சுயநலமின்றி இருத்தல் ஆகும். குழந்தைகள் வளர்ந்து பெரியவர் ஆகும்போது சுயநலத்தன்மை வளரக்கூடாது. ஒரு சமஸ்கிருத ஸ்லோகம் “மெத்தப் படித்தவர் அடக்கத்துடன் சுயநலமின்றி இருப்பர்” என்று கூறுகிறது.
தைரியம்தான் மனித நல்லொழுக்கம். கோயதே என்பவர் கருத்துப்படி, “பணம் போனால் மீண்டும் அதை சம்பாதிக்கலாம், ஆரோக்கியம் கெட்டால் அதை மீண்டும் பெறலாம், ஆனால் தைரியம் போனால் நாம் எதையும் பெறவும் சாதிக்கவும் முடியாது” என்று கூறுகிறார். பெற்றோரின் முழு முதல் கடமை தன் குழந்தைகளிடையே தைரியத்தை வளர்த்தல். நமது நாடு வீரப்பெண்மணிகளான, ஜான்சிராணி லட்சுமிபாய் மற்றும் கிட்டூர் சன்னம்மா ஆகியோரைப் பார்த்துள்ளது. அவர்களுக்கு பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை விரட்ட போரிட வேண்டிய அளவு தைரியம் இருந்தது. மாணவர்கள் எப்போதும் தைரியத்துடன் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அவர்கள் எல்லா விளையாட்டிலும் தேர்விலும் வெற்றி பெறுவார்கள்.
சிறந்த பண்புகள்தான் நமது நோக்கம். நல்ல பண்புகள் இல்லா மனிதரை யாரும் மதிக்க மாட்டார்கள். நல்ல பழக்க வழக்கங்களால் பண்புகள் நன்கு பலம் பெறும்.
பொறுமையுடன் இருங்கள். பொறுமையானது கசப்புதான். அதன் பலன் மிகுந்த இனிப்பாக இருக்கும். மிகுந்த பொறுமையோடு இருப்பவர் நன்றாக வாழ்வார்.
சுயநலமில்லாமல் இருங்கள். தன்னைத்தானே நம்புவது என்பதும் சுயநலம் என்பதும் வேறு வேறானது. தன்னைத் தானே நம்புதல் என்பதுதான் இருப்பதை தனது இயல்பான திறமையால், அறிவினால் பிறருக்கு வெளிப்படுத்துதல் ஆகும். சுயநலம் என்பது ஒரு குறையுள்ள பொருளால் தோன்றும் வியாதி எனலாம். சுயநலம் விரும்பும் மனிதன் தன்னைத் தானே அன்புடன் நடத்த மாட்டான். அவன் தன்னையே வெறுக்கத் தொடங்குவான்.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு இந்தப் பன்னிரண்டு பண்புகளை வளரச் செய்தால், குழந்தைகளின் திறமைகள் மற்றும் இயல்புத் திறமைகள் வளர ஏதுவாகும்.
குழந்தைகள் சொல்வதைக் கேளுங்கள்
இது ஒரு செய்யுள். இதன் ஆசிரியரின் பெயர் தெரியாது. ஆனால் இது தரும் செய்தி ஒரு சிறப்பான செய்தி.
ஒரு விநாடி நேரம் ஒதுக்குங்கள் கேட்பதற்கு, உங்கள் குழந்தைகள் என்ன சொல்ல முயற்சி செய்கிறார்கள் எனக் கேட்கவும். இன்று கேளுங்கள், நீங்கள் என்ன செய்தாலும், அல்லது நீங்கள் சொல்வதைக் கேட்க அவர்கள் இருக்க மாட்டார்கள். அவர்களின் பிரச்சினைகளைக் கேளுங்கள், அவர்களின் தேவையைக் கேளுங்கள்.
அவர்களின் சிறிய வெற்றியைப் போற்றுங்கள். சிறிய பணிகளையும் மற்றும் அவர்களின் பேச்சைக் கேட்கவும், அவர்களது சிரிப்பை விரிவடையச் செய்யுங்கள். கண்டுபிடியுங்கள் என்ன விஷயமென்று? காண்க அவர்கள் விரும்புவது யாது? ஆனால், சொல்லுங்கள் தாங்கள் அவர்களை அன்புடன் நேசிப்பதாக, ஒவ்வொரு முறையும் இது நடக்கும், நீங்கள் அவர்களை திட்டினாலும், அவர்களிடம் அன்பான அரவணைப்பு காட்டுங்கள். “எல்லாமே நல்லபடிதான்”. நமது குழந்தைகளுக்கு அவர்களிடம் உள்ள அனைத்தையும் அவர்கள் சொல்ல சொல்ல நாம் கேட்டதையும் சொன்னால் அவர்கள் மகிழ்ந்து, நாம் எப்படி விரும்புகிறோமோ அப்படியே வளர்வார்கள். அதிலிருந்து அவர்கள் தவற மாட்டார்கள்.
ஆனால், நம் குழந்தைகளிடம் இப்படிச் சொன்னால், தாங்கள் உண்மையிலேயே அவர்கள் பெயரால் பெருமைப்படுவதாக, அதே நினைவில் வளர்வார்கள்.
அவர்கள் அவ்விளையாட்டில் வெற்றியாளர் ஆவார்கள்.
ஒரு விநாடி அவர்கள் சொல்வதைக் கேட்டுக்கொள்ளுங்கள். அவர்கள் என்ன நம்மிடம் சொல்ல முயற்சிக்கிறார்கள் என்பதை காது கொடுத்துக் கேளுங்கள். நீங்கள் என்ன செய்தாலும், அவர்கள் உங்களிடமே திரும்ப வந்து நீங்கள் சொல்வதைக் கேட்பார்கள்.