அன்பை வெளிப்படுத்தும் மிகச்சிறந்த ஆயுதம் முத்தம். ஆயிரம் வார்த்தைகளால் புரிய வைப்பதை விட இதழால் எழுதும் முத்தத்தினால் அன்பை புரியவைக்கலாம். அந்தளவிற்கு சக்தி படைத்தது முத்தம்.
சாதாரணமாய் முத்தமிடுவதை விட ஈர உதடுகளால் தங்களுக்கு உரியவரை ஆழமாய் முத்தமிடுவதையே ஆண்கள் விரும்புகின்றனராம். அது அன்பின் ஆழத்தை அறியும் முயற்சியாகவே ஆண்கள் நினைக்கின்றனராம். இது குறித்து மிகப்பெரிய ஆய்வுகள் நடைபெற்றுள்ளன.
ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளரான ஹெலன் பிஷர், முத்தம் குறித்தும் அதன் தன்மை குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். ஆண்களின் இந்த முத்தத்தில் காதல் மட்டுமல்ல, கொஞ்சம் ஆராய்ச்சியும் இருக்கிறது என்று தெரியவந்தது.
நம்ம ஆளு வளமையானவளா, செழிப்பானவளவா என்பதை அறியும் ஆராய்ச்சிதானாம் இது. முத்தத்தோடு நிற்காமல் உதடுகளால் துளாவுவதைத்தான் அநேக ஆண்கள் விரும்புகின்றனர் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். முத்தம் எந்த அளவிற்கு ஆழமாக, இருக்கிறதோ அந்த அளவுக்கு ஆண்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள் என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
வசியப்படுத்தும் முத்தம்
முத்தத்தின் மூலம் தனது காதலி அல்லது மனைவியை வசியப்படுத்தி விட வேண்டும், மற்றவை அப்போதுதான் எளிதாக இருக்கும் என்ற எண்ணமும் கூட ஆண்களின் இந்த ஈர முத்தத்திற்கு ஒரு காரணம் என்கிறார் ஹெலன். ஆழமான முத்தத்திற்கு மற்றொரு காரணமும் இருக்கிறது.அது, பெண்ணின் உணர்ச்சிகளைத் தூண்டுவிக்கும், டெஸ்டோஸ்டிரானை தங்களது முத்தத்தின் மூலம் பார்ட்னரிடம் அனுப்பி விடும் உத்தி என்கின்றனர் ஆய்வாளர்கள்.
நம்பிக்கையின் வெளிப்பாடு
ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி முத்தம்தான் எல்லாவற்றுக்கும் ஆரம்பம். அதை நம்பிக்கையின் வெளிப்பாடாகவும் கருதுகிறார்கள் என்று அமெரிக்காவின் ஈஸ்டன் நகரில் உள்ள லபாயெட் கல்லூரியின் ஆய்வாளரான வென்டி ஹில் என்பவர் கூறியுள்ளார்.
எந்த அளவுக்கு முத்தம் ஆழமாகவும், தீவிரமாகவும் இருக்கிறதோ அதை வைத்து தங்களது பார்ட்னரின் நம்பகத்தன்மையை அறிந்து கொள்ள முடியும் என்பது ஆண் மற்றும் பெண்களின் நம்பிக்கை. ஒரு உறவு சிறப்பாக அமையும் போது அது அருமையான பழக்கமாக மாறுகிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.