பெண்கள் எப்பொழுதும் சென்டிமென்ட் ஆனவர்கள். அவர்களின் கண்ணீருக்கு மதிப்பு அதிகம். மனம் சங்கடப்படும் படியாக யாரேனும் ஏதாவது சொல்லி விட்டால் பொசுக் என்று கண்ணீர் விட்டு விடுவார்கள். இப்படி எதற்கெடுத்தாலும் அழும் பெண்களை பற்றி ஒரு ஆய்வு செய்திருக்கிறார்கள்.
இஸ்ரேலை சேர்ந்த ஆய்வாளர்கள் இது தொடர்பான ஆராய்ச்சியை மேற்கொண்டார்கள். ஆண்கள், பெண்கள் 60 பேர் இதில் கலந்த கொண்டனர். அவர்களில் பெண்களை மட்டும் ஒரு குழுவாக பிரித்து பரிசோதனையை தொடங்கினர். சோகமான அழுகை காட்சிகள் கொண்ட படத்தை தனியறையில் ஓட விட்டனர்.
அரை மணி நேரம் கழித்து இந்த பெண்களின் கண்களில் கண்ணீர் பெருக ஆரம்பித்தது. அப்போது அறைக்குள் நுழைந்த ஆராய்ச்சியாளர்கள் படம் பார்த்து கண்ணீர் வடித்த பெண்களின் கண்ணீரை ஒரு சோதனை குழாயில் சேகரித்தனர். இன்னொரு சோதனைக்குழாயில் உப்பு கலந்த நீரை தயார் செய்தனர்.
உண்மையான கண்ணீரை சில பெண்களின் முகத்திலும், உப்பு நீரை மற்ற பெண்கள் முகத்திலும் பேஷியல் போன்று பூசினர். யாருக்கு கண்ணீர் யாருக்கு உப்பு நீர் பூசப்பட்டது என தெரியாத நிலையில் ஆண்கள் சிலரை அந்த பெண்களின் முகம் அருகே வரவழைக்கப்பட்டனர்.
அவர்களை இந்த பெண்களின் முகம் அருகே நின்று பேச வைத்தனர். அப்போது ஆண்களின் முகத்தில் ஏற்பட்ட மாற்றங்களை பதிவு செய்த ஆய்வாளர்கள் அடுத்த நிமிடம் அவர்களின் ரொமான்ஸ் மூடுக்கு அவசியமான டெஸ்ட் ரோஜன் ஹார்மோன் அவர்களது உடலில் எந்த அளவுக்கு சுரந்துள்ளது என்பதை ஆய்வு செய்தனர்.
உண்மையான கண்ணீர் பூசப்பட்ட பெண்களின் முகத்திற்கு நேர் எதிராக நின்று பேசிய ஆண்களிடம் டெஸ்ட்ரோஜன் சுரப்பு மிகக்குறைவாகவும், உப்புநீர் பூசப்பட்ட பெண்களுக்கு நேர் எதிர் நின்று பேசிய ஆண்களிடம் இயல்பான ஹார்மோன் சுரப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதில் இருந்து ஒரு முடிவுக்கு வந்த ஆராய்ச்சியாளர்கள், தாரை தாரையாக கண்ணீர் விடும் பெண்களால் ஆணில் தாம்பத்ய ஆசை குறையும் என்றனர். அத்துடன் முகத்தில் உப்பு நீருடன் இருந்த பெண்களை போட்டோ எடுத்து ஆராய்ந்ததில் கண்ணீர் விட்ட பெண்களின் அழகு குறைந்து இருந்ததாகவும் கூறினர்.
பெண்களிடம் ஆண்களை கவர்ந்து இழுக்கும் விஷயம் கவர்ச்சியா புன்னகையா என்ற ஆராய்ச்சியிலும் பெண்களின் புன்னகையே ஆண்களை அதிகம் கவர்கிறது என்று முடிவு வந்துள்ளது.