அறிவியல் வேகமாக வளர்ந்து வரும் நிலையில் , கிடைக்கும் இடங்களில் எல்லாம் அறிவியலை வேகமாக புகுத்தி வருகின்றனர் . அறிவியலில் இன்னும் ஒரு படி மேலே போய் நமது மூடைப் பொறுத்து மாறும் வகையில் ஆடை ஒன்றை வடிவமைத்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள் . இந்த ஆடையை நெதர்லாந்தைச் சேர்ந்த ஸ்டுடியோ ரோஸ்கார்டே என்னும் நிறுவனம் வடிவமைத்துள்ளனர் . இந்த ஆடையின் பெயர் , “இண்டிமேசி 2.0 ” . இந்த ஆடை வெள்ளை மற்றும் கருப்பு நிறங்களில் கிடைக்கிறது . இந்த ஆடை அணிபவர் தீடிரென்று மூட் மாறினால் , ஆடை வெளிப்படையாக மாறிவிடும் . அவர் கோவம் அடைந்தாலோ , அதீத பதற்றம் அடைந்தாலோ , மூட் ஏறினாலோ இந்த ஆடை மற்றவர்களுக்கு வெளிப்படையாக மாறிவிடும் . இதில் உள்ள சென்சார்கள் உடலில் ஏற்படும் மாற்றங்களையும் , இதய துடிப்பையும் அளந்து அதற்கேற்ப ஆடைய மாற்றி அமைக்கும் .