முகத்தில் உள்ள பருக்கள், கரும்புள்ளிகளை அகற்ற அழகு நிலையங்களில் பயன்படுத்தப்படும் ஊசிகள் ஊடாக எயிட்ஸ் மற்றும் செங்கமாலை ஆகிய நோய்கள் பரவும் ஆபத்து இருப்பதாக வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளார்.
அழகு நிலையங்களுக்கு செல்லும் சிலர் தமது முகத்தில் இருக்கும் பருக்கள் மற்றும் கரும்புள்ளிகளை அப்புறப்படுத்தும் சிகிச்சைகளை செய்து கொள்கின்றனர்.
அவற்றை அகற்ற பயன்படுத்தப்படும் ஊசிகள் கொதிக்கும் நிரில் இட்டு சுத்தப்படுத்தப்படுவதில்லை என்பதால், அவற்றின் ஊடாக நோய்கள் பரவும் ஆபத்து காணப்படுகிறது. இந்த ஊசிகள் மூலமாக பல்வேறு வகையான வைரஸ்கள் பரவக்கூடும்.
முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை சுத்தப்படுத்த அழகு நிலையங்களில் எம்லா என்ற மருந்து பயன்படுத்தப்படுகிறது. இந்த இரசாயனம் மருத்துவர்கள் பயன்படுத்தும் உடலை மரத்து போக செய்யும் இரசாயன மருந்தாகும்.
இதனை அழகு நிலையங்களில் பயன்படுத்துவது தவறானது. இப்படியான மருந்துகளை பயன்படுத்தும் போது ஏதேனும் அவசர நிலைமை ஏற்பட்டால், அவர்களிடம் சிகிச்சைகளை செய்வதற்கான முறை இல்லை. இதனால் உயிர் ஆபத்துக்கள் ஏற்படக் கூடும்.
மருத்துவமனைகளில் செய்யும் தசை பகுதிகளை சுடுவது, அறுவை சிகிச்சைகளை அழகு நிலையங்களில் செய்யக் கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.