மும்பையில் உடற்பயிற்சி செய்ய ஜிம்முக்குப் போகும் குடும்பப் பெண்களில் பலரும் அந்த ஜிம்மில் உள்ள ஜிம் மாஸ்டர்களுடன் கள்ளக்காதலில் திளைப்பதாக ஒரு அதிர்ச்சித்தகவல் வெளியாகியுள்ளது. இந்தக் காரணத்துக்காக விவாகரத்து செய்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்தபடி உள்ளதாம். கள்ளக்காதல்கள் முன்பை விட இப்போது பல மடங்கு அதிகரித்துள்ளது. வயது வித்தியாசம் இல்லாமல் பலரும் வீழ்கிறார்கள்.
தினசரி நான்கு செய்தியாவது இதுகுறித்து வெளியாகி விடுகிறது. இந்த நிலையில் மும்பையில், ஜிம்முக்குப் போய் கள்ளக்காதலில் சிக்கும் குடும்பப் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அங்கு விவாகரத்துகள் அதிகரித்து வருகிறதாம். gym-girls இன்று கள்ளக்காதல்களால் திருமண பந்தங்களி்ன் அடிப்படையே ஆட்டம் காண ஆரம்பித்துள்ளது.
ஒருவருக்கு ஒருவர் என்ற நிலை மாறி, வீட்டில் மனைவி, வெளியில் “many” என்ற நிலைக்கு ஆண்களும், பெண்களும் அலை பாய ஆரம்பித்து விட்டனர். இந்த நிலையில் மும்பையில் ஜிம் எனப்படும் உடற்பயிற்சி நிலையங்களுக்கு வரும் குடும்பப் பெண்கள் பலர் ஜிம் மாஸ்டர்களுடன் கள்ளக்காதலில் வீ்ழ்கிறார்களாம். இந்தப் பெண்களில் பலரும் பணக்கார குடும்பங்களைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்.
இவர்களது கணவர்கள் எப்போது பார்த்தாலும் பிசினஸ் பிசினஸ் என்று விழுந்து கிடப்பதால் இவர்களுக்கு ஜிம் மாஸ்டர்கள் ஆறுதல் களங்களாக மாறி வருகிறார்களாம். இப்படிப்பட்ட பெண்களுக்கு ஜிம்மே கதியாகவும் மாறிப் போய் விடுகிறதாம். காலை, பகல் என்றில்லாமல் பல பெண்கள் இரவுகளிலும் கூட ஜிம்மையும், ஜிம் மாஸ்டர்களையும் நம்பி வரும் நிலை அதிகரித்து வருகிறதாம். இப்படிப்பட்ட உறவுகளை ஏற்படுத்திக் கொள்ளும் பெண்கள் ஜிம்மிலேயே நீண்ட நேரத்தைக் கழிக்கிறார்களாம்.
சாதாரணமாக காபியில் ஆரம்பித்து உடல் ரீதியான உறவு வரை இந்த உறவுகள் படு வேகமாக மாறி விடுவதாக வழக்கறிஞர் மிருதுளா கடம் கூறுகிறார். இப்படிப்பட்ட பெண்களும், அவர்களின் கணவர்களும் விவாகரத்து முடிவை எடுத்து கோர்ட்டுகளை நாடுவது அதிகரித்து வருகிறது. அதேசமயம், இதுபோன்ற மனைவிகளைக் கையும் களவுமாகப் பிடிக்க பல கணவர்கள் தனியார் துப்பறியும் நிறுவனங்களை நாடும் சம்பவங்களும் நடக்கிறதாம்.
மும்பை பந்த்ராவைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர் தனது மனைவியை அதிரடியாக விவாகரத்து செய்தார். அவரே பல லட்சம் பணத்தையும், வீடு உள்ளிட்ட வசதிகளையும் மனைவிக்குக் கொடுத்தார். பின்னர் தனது இரு குழந்தைகளையும் தனது பொறுப்பில் எடுத்துக் கொண்டு மனைவியை தள்ளி வைத்து விட்டாராம். கோர்ட்டும் அவர்களுக்கு விவாகரத்து கொடுத்து விட்டது. இந்தப் பெண், எப்போது பார்த்தாலும் யோகா, யோகா என்று கூறிக் கொண்டு வேறு வேலையில் ஈடுபட்டு வந்தாராம்.
அதேபோல 45 வயதுப் பெண் ஒருவர் தன்னை விட பல மடங்கு இளைய வயது கொண்ட ஜிம் மாஸ்டரிடம் மயங்கி அவரிடமே எப்போதும் கதியென கிடந்துள்ளார். கணவர் பார்த்தார், சத்தம் காட்டாமல் விவாகரத்து செய்து விலகிப் போய் விட்டார். பல பெண்கள் ஆங்கிலத்தில் நன்றாகப் பேசும் ஜிம் மாஸ்டர்களிடம் ஈஸியாக ஒட்டிக் கொண்டு விடுகிறார்களாம். இதில் ஆச்சரியப்படத்தக்க அம்சம் என்னவென்றால் இதுபோன்ற விவகாரங்களில் பெற்றோர்கள் தங்களது மகள்களுக்கு ஆதரவாக இல்லாமல், மருமகன்கள் பக்கம் வந்து நிற்பதுதான்.
காரணம், தங்களது மகள்களின் காரியத்தால் இவர்கள் வெட்கித் தலை குணியும் நிலை ஏற்படுவதால். மருமகன்களுக்கும், தங்களது பேரப் பிள்ளைகளுக்குமே இவர்கள் முழு ஆதரவாக இருக்கிறார்களாம். மும்பையில் இப்போது பரவி வரும் இந்தக் கலாச்சாரம் மிகவும் மோசமானது. இது திருமண பந்தம் என்ற பாரம்பரியத்தையே ஆட்டிப் பார்க்கும் செயலாகும். இதில் பெண்கள் என்றில்லாமல் பல ஆண்களும் கூட ஈடுபடுகிறார்கள். ஆனால் பெண்கள்தான் அதிக அளவில் ஈடுபடுகிறார்கள் என்பது அதிர்ச்சி தருகிறது என்கிறார் கடம்….!