தாம்பத்தியம் என்பது மனித வாழ்வில் முக்கியமான விஷயமாக காணப்படுகிறது. ஒரு ஆண், பெண் சேர்ந்து கூடி ஒரு குழந்தை பெற்று தங்கள் வம்சத்தை விரிவாக்க வேண்டும் என்பது இயற்கையின் கூற்றாக காணப்படுகிறது.
மற்ற உயிரினங்கள் இனப்பெருக்கத்திற்காக மட்டுமே கூடுகிறது எனில், மனித இனம் மட்டுமே தங்கள் சுய-இன்பத்திற்காக கூடுகிறது. தாம்பத்தியத்தின் மீது ஒரு ஈடிணையற்ற ஈர்ப்பும், ஆர்வமும் கொண்டுள்ளது. ஏறத்தாழ உடலுறவு என்பதை அடிக்ஷனாக கொண்டிருப்பது மனிதர்கள் தான்.
ஒரு குறிப்பிட்ட வயது வரை இந்த செக்ஸ் என்பது மனிதர்கள் மத்தியில் ஒரு பேரார்வமாக காணப்படுகிறது. ஒருசிலர் மட்டுமே தாம்பத்தியத்தில் காம எண்ணம் அதிகரிக்க அதில் சிக்கி வெளிவர இயலாமல் போகிறார்கள்.
இப்படியான ஒரு விஷயத்தில் சிக்கிக் கொண்டிருப்பவர் தான் பெண் செக்ஸ் மருத்துவர் லூயிஸ் வான்டர் வெல்டே.
80 ஆண்கள்!
ஒன்றல்ல, ரெண்டல்ல லூயிஸ் 80 திருமணமான ஆண்களுடன் செக்ஸ் உறவில் இருக்கிறார். பல்வேறு வகையில் தாம்பத்தியத்தை அனுபவிக்க வேண்டும் என்பது லூயிஸின் குறிக்கோளாக இருக்கிறது. இவர் ஒரு விதவை பெண் மருத்துவர். இவருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.
ஆனாலும், இன்றும் தனது தாம்பத்திய தாகம் குறையவில்லை என்று கூறுகிறார் லூயிஸ். எந்த விஷத்திலும் தனது செக்ஸ் வாழ்க்கையை காம்பிரமைஸ் செய்துக் கொள்ள இவர் தயாராக இல்லை. லூயிஸின் கணவர் (34 வயதில்) கடந்த 2004 ஆண்டு மார்ச் மாதம் மரணம் அடைந்துவிட்டார்.
மருத்துவர்!
லூயிஸ் ஆரம்பத்தில் இருந்தே தாம்பத்திய வாழ்க்கையை முழுவதுமாக அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்துள்ளார். ஆகையால் இவர் 80 திருமணமான ஆண்களுடன் உறவு கொண்டிருக்கிறார். லூயிஸ் ஒரு பெண் செக்ஸ் மருத்துவர் ஆவார். இதனால், ஆரோக்கியமான தாம்பத்திய வாழ்க்கை குறித்து முழுவதும் அறிந்து வைத்துள்ளார்.
மனைவியரிடம்…
தான் உறவில் இருக்கும் திருமணமான ஆண்களில் பலரை இவர் டேட்டிங் தளங்களில் தான் கண்டிருக்கிறார். இந்த உறவு தனது குழந்தைகளை பாதித்துவிட கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார் லூயிஸ். இதனால், பெரும்பாலான காதலர்களின் மனைவிகளுக்கு தங்கள் உறவு குறித்து தெரியும் என்றும் கூறுகிறார்.
ஒருவனுக்கு ஒருத்தி?!
ஒருவனுக்கு ஒருத்தி என்பது அனைவரது வாழ்வுக்கும் ஒத்துப் போவது இல்லை என்கிறார் லூயிஸ். சிலர் வாழ்வில் அது விரைவில் முடிவை எட்டிவிடுகிறது. மனித இயற்கையில் இது உண்மையானது அல்ல என்கிறார் லூயிஸ்.
காதல் மற்றும் ஆர்வம் காரணமாக மீண்டும் ஒரு திருமணத்தில் இணைவதற்கு பதிலாக வேறு சில வழிகளும் இருக்கிறது. இதனால் செக்ஸ் வாழ்க்கை மீது ஆர்வம் கொண்டிருக்கிறேன். மற்றவர்களுக்கும் பயிற்றுவிக்கிறேன் என்கிறார் லூயிஸ்.
என்னை ஆராய வேண்டாம்…
என்னை ஆராய வேண்டாம்…
என்னை பற்றி ஆராயும் முன்னர் மக்கள் அவர்களது தாம்பத்திய வாழ்க்கையை சிறந்த முறையில் அனுபவிக்க கற்றுக் கொளல் வேண்டும். யாரெல்லாம் மகிழ்ச்சியாக இல்லையோ, அவர்களுக்கு எல்லாம் தாம்பத்தியம் அவசியம் தேவை. வாழ்க்கை மிகவும் சிறியது அதில் ஒருவனுக்கு ஒருத்தி செல்லுப்படி ஆகாது என்று கூறுகிறார் லூயிஸ்.
லூயிஸ் என்ன தான் அவர் பக்கத்தை நியாயப்படுத்தி கூறினாலும் கலாச்சாரம் என ஒன்று இருக்கிறது. அதிலும் ஒரு மருத்துவராக இருந்துக் கொண்டு லூயிஸ் தான் செய்வது சரி என்று கூறுவது சற்றே அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
எதிர்காலம் பதில் கூறும்…
செக்ஸ் மருத்துவராக இருப்பதால் லூயிஸ் பாதுகாப்பான முறையில் அவருக்கு எந்த தாக்கமும் ஏற்படமால் பல ஆண்களுடன் உறவில் ஈடுபடலாம். இப்போது உலக செய்திகளில் தோன்றுவது, பேட்டி கொடுப்பது எல்லாம் லூயிஸிற்கு மகிழ்ச்சியாக கூட இருக்கலாம்.
ஆனால், இவரது குழந்தைகள் வளர்ந்து பெரியாளாகும் போது. அவர்கள் இந்த சமூகத்தை எதிர்கொள்ளும் போது. அவர்களுக்கு ஏற்படும் வலியை அருகே இருந்து உணரும் போது நிச்சயம் ஒரு தருணத்தில் லூயிஸ் தான் செய்தது தவறு என்பதை உணரலாம். அதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
ஏன்?
ஒருவனக்கு ஒருத்தி என்பது ஏன்? செக்ஸ் மட்டுமே வாழ்க்கை இல்லை. அதை தாண்டி மன ரீதியான, உறவுகள் ரீதியான மகிழ்ச்சி மற்றும் வாழ்க்கை பெரிதாக ஒன்று இருக்கிறது. அதை எல்லாம் சேர்ந்து கூடி அனுபவிக்க வேண்டும். அதற்காக தான் ஒருவனுக்கு ஒருத்தி.
இன்று லூயிஸ் அழைத்தால் செக்ஸ் வைத்துக் கொள்ள 80 என்ன, 800 பேர் கூட வருவார்கள். இதுவே, நாளை லூயிஸிற்கு ஒரு பிரச்சனை, அரவணைப்புடன், உறுதுணையாக குறைந்தபட்சம் தோள்சாய்ந்து கொள்ள வேண்டும் என்று அழைத்தால் அவர்களில் ஒருவராவது வருவார்களா?
ஒன்று சமூகத்தில் தவறுகளை வெளிப்படையாக செய்வது.. அதை கூறுவது… அதன் மூலம் பிரபலமாவது என்பது மிக எளிதாகிவிட்டது.