சத்திரசிகிச்சை மூலம் சிறிதாக்குமாறு மருத்துவர்கள் ஆலோசனை!!
மெக்ஸிகோவைச் சேர்ந்த நபர் ஒருவர் உலகிலேயே மிகப் பெரிய ஆணுறுப்பு கொண்ட நபராக விளங்குகிறார். இவரின் ஆணுறுப்பு 18.9 அங்குலங்கள் (48 சென்ரி மீற்றர்) நீளமானது என மருத்துவர்கள் உறுதிப்
படுத்தியுள்ளனர்.
ரொபர்டோ எஸ்குய்வெல் கப்ரேரா எனும் இவர், மெக்ஸிகோவின் சல்டிலோ நகரைச் சேர்ந்தவர்.
அமெரிக்காவைச் சேர்ந்த நடிகர் ஜொனாஹ் பால்கன் என்பவர் இதற்குமுன் உலகில் நீளமான ஆணுறுப்பு கொண்ட நபராக கருதப்பட்டார்.
அவரின் உறுப்பு சாதாரண நிலையில், 9.5 அங்குலமாகவும் எழுச்சியடைந்த நிலையில் 13.5 நீளமானதாகவும் இருந்தது என கூறப்படுகிறது. இச் சாத னையை ரொபர்டோ எஸ்குய்வெல் கப்ரேரா முறியடித்துள்ளார்.
ஆனால், சுமார் அரை மீற்றர் (ஒன்றரை அடி) நீளமானதாக அவரின் ஆணுறுப்பு உள்ளபோதிலும், அதன் உண்மையான நீளம் சுமார் 7 அங்குலங்களாக இருக்கலாம் எனவும் ஏனையவை வெறும் தோல்தான் எனவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இத்தகைய ஆணுறுப்பான சிறுநீர்க் குழாய் தொற்று உட்பட பல்வேறு ஆரோக்கிய பிரச்சினைகளை அவருக்குப் ஏற்படுத்தியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இத்தகைய ஆணுறுப்பு மூலம் ரொபர்டோ எஸ்குய்வெல் கப்ரேராவினால் பாலியல் உறவில் ஈடுபடவும் முடியாதுள்ளதாம்.
இந்த விசித்திர ஆணுறுப்பை சத்திரசிகிச்சை செய்து அளவை சிறிதாக்கி சாதாரண தோற்றத்துக்கு கொண்டு வருவது உகந்தது என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர் என டாக்டர் டேவிட் சலாஸர் கொன்ஸாலெஸ் தெரிவித்துள்ளார்.
ஆனால், தனது உறுப்பு குறித்து ரொபர்டோ எஸ்குய்வெல் கப்ரேரா மிகவும் பெருமையடைந்தவராக காணப்படுகிறார். இதனால், சத்திரசிகிச்சை செய்து அளவை சிறிதாக்குவதற்கு அவர் மறுக்கிறார்.
‘உலகின் மிக நீளமான ஆணுறுப்பு கொண்டவனாக கின்னஸ் சாதனை நூலில் எனது பெயர் இடம்பெற வேண்டும் என நான் விரும்புகிறேன்.
ஆனால், இதை அவர்கள் உலக சாதனை யாக அங்கீகரிப்பதற்கு மறுக்கின்றனர்’ என்கிறார் ரொபர்டோ எஸ்குய்வெல் கப்ரேரா.