Home பெண்கள் அழகு குறிப்பு மேக்அப் போடாமல் வெளியே போகவே மாட்டீர்களா..? கட்டாயம் இதை படியுங்கள்..!

மேக்அப் போடாமல் வெளியே போகவே மாட்டீர்களா..? கட்டாயம் இதை படியுங்கள்..!

17

கழிவறையில் உள்ள கிருமிகளை விட நாம் பயன்படுத்தும் மேக்அப் பையில் அதிகளவு கிருமிகள் உள்ளன. சிலர் காலகாலமாக ஒரு சில மேக்அப் பொருட்களை பயன்படுத்துவதுண்டு.

எல்லா பொருட்களுக்கும் போலவே மேக்அப் பொருட்களுக்கும் காலாவதித் திகதி ஒன்று உள்ளதென்பதை பலர் மறந்து விடுகின்றனர்.

ஏனைய பொருட்களின் காலாவதித் திகதியை மிகக் கவனமாக பார்க்கும் எம்மவர்கள் மேக்அப் விடயத்தில் அவ்வாறு நடந்து கொள்வதில்லை.

இதன் விளைவாக முகத்தில் சரும பிரச்சினைகள் ஏற்படுவதோடு முகப்பருக்கள் ஏற்பட்டு முகம் பொலிவிழந்து போகும். பணத்தைக் காட்டிலும், சருமம் மிக முக்கியம்.

வாங்கி பல நாள் ஆன மேக்அப் பொருட்கள் மிகவும் உலர்ந்து போய் இருப்பதுடன் இரசாயன நாற்றமும் சற்று அதிகமாக இருக்கும். இவ்வாறானபொருட்களைதூக்கிஎறிவதுநல்லது.

பவுண்டேஷன், கிளென்சர், பவுடர், ஐஷேடோ, மாய்ஸ்ச்சரைசர், சன்ஸ்கிரீன் உள்ளிட்டவற்றை இரண்டு ஆண்டுகள் வரை வைத்திருக்கலாம். லிப்பென்சில், ஐபென்சில் உள்ளிட்டவற்றை ஓராண்டு முதல் ஒன்றரை ஆண்டுக்குள் பயன்படுத்த வேண்டும். மஸ்கரா, கண் அருகில் போடக் கூடிய கிரீம் உள்ளிட்டவற்றை ஆறு மாதங்களுக்கு மேல் பயன்படுத்த வேண்டாம்.

அனைத்திலும் முக்கியமானது, உங்கள் அழகுசாதனப் பொருட்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம். ஆய்வகத்தில் இருப்பதைக் காட்டிலும் அதிக அளவில், ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய இரசாயனங்கள் நம்முடைய அழகு சாதனப் பொருட்களில்இருக்கின்றன. எனவே, முடிந்தவரை ஓர்கனிக் அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துவது நல்லது