அழகிய ஒளிரும் சருமம் வேண்டும் என்பது எல்லாப் பெண்களின் ஆசையும் தான்! இளம் பெண்கள், வயதானவர்கள், வேலை செய்பவர்கள், இல்லத்தரசிகள் என எல்லோருமே அழகிய பொலிவான சருமத்தைப் பெறுவதற்காக பல்வேறு சருமப் பராமரிப்புத் தயாரிப்புகளை வாங்கிப் பயன்படுத்துகின்றனர்.
ஆனால், துரதிருஷ்டவசமாக அழகுத் தயாரிப்புகளுக்காக அவ்வளவு செலவு செய்தும் பழுக்கற்ற பொலிவான சருமத்தைப் பெற வேண்டும் என்ற ஆசை பலருக்கு நிறைவேறாமல் இருக்கலாம்.
பெரும்பாலும் இயற்கையான பொருள்களை விட்டுவிட்டு செயற்கையான தயாரிப்புகளைப் பயன்படுத்துவதும் இதற்குக் காரணம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர். ஆயுர்வேதத்தின் கருத்துப்படி, ஆரோக்கியமான பொலிவான சருமத்தைப் பெறத் தேவையான அருமருந்துகள் உங்கள் சமையலறையிலேயே உள்ளன! அவற்றில் மிகவும் சக்தி வாய்ந்தது மஞ்சள்!
சருமத்தைப் பொலிவாக்க, மஞ்சளில் அப்படி என்ன உள்ளது? (So what makes turmeric an outstanding beauty ingredient?)
சிறந்த ஆன்டிபயாட்டிக் பண்புகள்: மஞ்சளில் உள்ள முக்கிய மூலப்பொருள் கர்க்யூமின் ஆகும். இது மிகுந்த அழற்சி எதிர்ப்புப் பண்பும் பாக்டீரிய எதிர்ப்புப் பண்பும் கொண்டது. மஞ்சளை மேற்பூச்சாகப் பூசும்போது, முகப்பருக்களையும் பிற பருக்களையும் குறைக்கிறது என்றும் அவற்றின் தழும்புகளும் மறைகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எண்ணெய்ப்பசை உள்ள சருமத்தில் சமநிலையைப் பராமரிக்கும் திறன்: ஓர் ஆய்வின்படி, மஞ்சளை மேற்பூச்சாகப் பூசும்போது சருமத்தில் உள்ள சீபம் சுரப்பியில் இருந்து எண்ணெய் சுரப்பது கட்டுப்படுத்தப்படுகிறது. சருமத்தில் எண்ணெய் சுரப்பது குறையும்போது, பருக்கள் மற்றும் குருக்கள் உண்டாகும் வாய்ப்பும் குறைகிறது.
முதுமையைத் தடுக்கும் செயலில் இதன் பங்களிப்பு: நீண்ட நாட்கள் மாசடைதலாலும், வெயில் மற்றும் பிற உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தும் காரணிகளாலும், உடலில் தடையின்றி சுற்றிவரும் அழற்சி ஏற்படுத்தும் பொருள்கள் (உடலில் சுரக்கப்படும் அழற்சி ஏற்படுத்தும் பொருள்கள், இவை செல்களை சேதப்படுத்தக்கூடியவை, இவற்றை ஆங்கிலத்தில் ஃப்ரீ ரேடிக்கல்கள் எனப்படும்) ஆன்டிஆக்ஸிடண்டுகளை (பழங்களிலும் காய்கறிகளிலும் காணப்படும் பொருள்கள், இவை உடலில் தடையின்றி சுற்றிவரும் அழற்சி ஏற்படுத்தும் பொருள்களை எதிர்த்துப் போரிடுகின்றன). இந்த ஃப்ரீ ரேடிக்கல்கள் செல்களுக்கு சேதத்தை ஏற்படுத்துவதோடு, மட்டுமில்லாமல் வயதாகும் முன்பே முதுமைத் தோற்றம் மற்றும் சுருக்கங்கள் ஏற்படுதல் போன்ற பிரச்சனைகளையும் ஏற்படுத்துகின்றன. மஞ்சளில் இருக்கும் ஆண்டிஆக்ஸிடண்ட் மற்றும் அழற்சி எதிர்ப்புப் பண்புகளால் மஞ்சள் முதுமையை எதிர்க்கும் இயற்கையான அருமருந்தாகத் திகழ்கிறது.
மஞ்சளை எப்படிப் பயன்படுத்துவது?
உங்கள் சருமத்தின் வகைக்கு ஏற்ப, மஞ்சளை ஃபேஸ் பேக்காகப் பயன்படுத்தலாம். பொதுவாக எண்ணெய்ப்பசை உள்ள சருமத்திற்கு அரைத்த அரிசி, கடலை மாவு அல்லது தேனுடன் சேர்த்து மஞ்சள் பயன்படுத்தப்படும். வறண்ட சருமம் கொண்டவர்கள் அரைத்த ஓட்ஸ் அல்லது பாதாமுடன் சேர்த்து மஞ்சளைப் பயன்படுத்துவது நல்ல பலன் தரும். சாதாரண சருமம் கொண்டவர்கள் யோகர்ட்டும் மஞ்சளும் கலந்த கலவையைப் பயன்படுத்தலாம். சிறந்த பலன் கிடைக்க, மஞ்சளைப் பயன்படுத்தும் முன்பு சருமத்தை சுத்தப்படுத்த மறக்க வேண்டாம். அத்துடன் மஞ்சள் மாஸ்க்கை அகற்றியதும் ஈரப்பதமூட்டவும் மறக்க வேண்டாம்.