எனக்கு வயது 26 இன்னும் திருமணம் ஆகவில்லை அனால் என் காதலியோடு நான் செக்ஸ் வைத்திருக்கிறேன் எனக்கு கவலை என்ன என்றால் என் உறுப்பு விறைப்பில் இருக்கும் அனால் என் காதலியோடு நான் இருக்கும் அந்த நேரத்தில் அவள் என் உறுப்பை பிடித்து செக்ஸ் செயட்படில் இருக்கும் பொது எனக்கு விந்து வந்து விடுகிறது
அவளுக்கு முழுமையாக என்னால் இடுகுடுக்க முடியவில்லை எனக்கு நல்ல பதில் தரவும் சில வேலை நான் அவளின் உறுப்புக்குள் என் உறுப்பை செலுத்த முற்படும் பொது ஒரு இருதடவைகள் உள்ளே போய்வந்ததும் எனக்கு விந்து வந்துவிடும் எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது நான் எந்த மாத்திரையும் பயன்படுத்துவதில்லை யாரிடமும் கேட்பதும் இல்லை எனக்கு நல்ல பதில் தரவும்
யோனித் தசையிறுக்கம் என்றால் என்ன? (What is it?)
பெண்களைப் பாதிக்கின்ற, பாலியல் செயல்குறைபாட்டின் ஒரு வகையே யோனித் தசையிறுக்கமாகும். இந்தப் பிரச்சனை உள்ளவர்களுக்கு, யோனியைத் தொடும்போது அல்லது யோனிக்குள் ஆணுறுப்பையோ பிற பொருள்களையோ நுழைக்க முயற்சி செய்யும்போது, யோனியைச் சுற்றிலுமுள்ள தசைகள் தன்னிச்சையாக சுருங்கி மூடிக்கொள்ளும். இந்தத் தசை சுருக்கத்தால், யோனித் திறப்பு இறுக்கமாகி யோனிக்குள் ஆணுறுப்பை நுழைப்பது கடினமாகிவிடும். இது பெரும்பாலானவர்களுக்கு வரும் பிரச்சனையல்ல, முறையான ஆலோசனை பெறுவதன்மூலமே இதனை சரிசெய்யலாம்.
பின்வரும் சூழ்நிலைகளில் இது ஏற்படுகிறது:
பாலியல் செயல்பாடுகளின்போது
மகளிர் நலவியல் மருத்துவர் யோனிப்பகுதியை ஆய்வு செய்ய முயற்சி செய்யும்போது
மாதவிடாயின்போது டேம்பொன் பயன்படுத்த முயற்சி செய்யும்போது
உடலுறவின்போது வலி, பெண்ணுறுப்புக்குள் ஆணுறுப்பு நுழைவது கடினமாக இருப்பது அல்லது நுழைக்கவே முடியாமல் இருப்பது போன்ற பிரச்சனைகள் உள்ள பெண்களுக்கு யோனித் தசையிறுக்கம் இருக்கலாம். இந்தப் பிரச்சனை உள்ள பெண்களுக்கு பாலியல் கிளர்ச்சி வழக்கம் போல் ஏற்படும், ஆனால் உடலுறவில் ஈடுபடுவதில் அவர்களுக்கு பிரச்சனை இருக்கும்.
இதில் முதல் நிலை, இரண்டாம் நிலை என இரு நிலைகள் உள்ளன.
ஆணுறுப்பை யோனிக்குள் நுழைக்கவே முடியாத நிலை இருந்தால், அதனை முதல் நிலை யோனித் தசையிறுக்கம் என்று குறிப்பிடுகின்றனர்.
தொடக்கத்தில் ஆணுறுப்பை யோனிக்குள் நுழைத்துவிட்ட பிறகு மீண்டும் நுழைக்க முடியாமல் போகும் நிலை இருந்தால், அதனை இரண்டாம் நிலை யோனித் தசையிறுக்கம் என்று குறிப்பிடுகின்றனர்.
சில சமயம், மாதவிடாய் முற்றிலும் நின்றுவிட்ட பெண்களும் உடலுறவின் போது வலி ஏற்படுவதாகவும், யோனியில் போதுமான வழவழப்பின்மை குறித்தும் தெரிவிக்கிறார்கள். இவர்களில் சிலருக்கும் யோனித் தசையிறுக்கம் ஏற்படலாம்.
இந்தப் பிரச்சனை திருமண உறவையும் காதல் உறவையும் பெரிய அளவில் பாதிக்கக்கூடும். இதனால் மன இறுக்கம், நம்பிக்கை இழப்பு, மனக்கலக்கம் போன்ற மனப் பிரச்சனைகளும் ஏற்படுகின்றன.
இந்தப் பிரச்சனை யாருக்கு வரலாம்? (Who experiences it?)
உடலுறவைப் பற்றிய தவறான கருத்தைக் கொண்டுள்ள பெண்களுக்கு இந்தப் பிரச்சனை வருவதாகத் தெரியவருகிறது. தனது யோனி மிகச் சிறியதாக உள்ளது என்ற அவர்களது எண்ணமும் இந்தப் பிரச்சனை வர ஒரு காரணமாக இருக்கலாம். மேலும் சில காரணங்கள்:
பாலியல் துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்டிருப்பது
கர்ப்பம் குறித்து பயம்
கசப்பான முதல் உடலுறவு அனுபவம்
உறவில் பிரச்சனைகள்
அறுவை சிகிச்சை அல்லது பிரசவத்திற்குப் பிறகு யோனி சேதமடைந்திருப்பது
யோனியில் நோய்த்தொற்று (இது உடலுறவின்போது அதிகரிக்கும்)
இந்தப் பிரச்சனை வரக் காரணம் என்ன? (Why do women experience vaginismus?)
இது அரிதான ஒரு பிரச்சனையாகும். இந்தப் பிரச்சனை வருவதற்கு என்று குறிப்பிட்ட காரணங்கள் இல்லை, உடல் குறைபாடுகள் எதுவும் யோனித் தசைகள் சுருங்கக் காரணமாக இருப்பதுமில்லை. சிலசமயம் இந்தப் பிரச்சனைக்கு துல்லியமான காரணங்கள் எதுவும் இருப்பதுமில்லை.
பாலியல் என்பதே தவறு, பாவம் என்ற கண்டிப்பான வளர்ப்பு முறையும் உடலுறவில் அசௌகரியம் மற்றும் யோனித் தசையிறுக்கம் போன்ற பிரச்சனைகள் வரக் காரணமாக இருக்கலாம்.
இதற்கான சிகிச்சை (Treatment)
இது சிகிச்சையளித்து சரிசெய்யக்கூடிய ஒரு பாலியல் கோளாறுதான். இந்தப் பிரச்சனை இருப்பது குறித்து ஒருவர் குற்ற உணர்வு கொள்ள வேண்டிய அவசியமில்லை.
இந்தப் பிரச்சனை இருப்பதாகத் தோன்றினால், முதலில் ஒரு மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறுங்கள். மருத்துவர் உங்கள் உடலைப் பரிசோத்தித்து, உங்களுக்கு இதற்கு முன்பு என்னென்ன உடல் பிரச்சனைகள் வந்துள்ளன என்பது பற்றிய தகவல்களைக் கேட்டறிந்து அனைத்தையும் ஆய்வு செய்வார். உங்கள் பாலியல் உறவு மற்றும் உங்களை உங்கள் பெற்றோர் வளர்த்த முறை பற்றியும் அவர்கள் கேள்விகள் கேட்கலாம்.
முறையான நோயறிதல் முறைப்படி உங்களுக்கு யோனித் தசையிறுக்கம் இருப்பதாக மருத்துவர் உறுதிப்படுத்திய பிறகு, பின்வரும் சிகிச்சை முறைகளில் ஒன்று அல்லது சிலவற்றை ஒருங்கிணைத்து அளித்து அதற்கு சிகிச்சையளிக்கப்படும்:
நோய்த்தொற்று ஏதேனும் இருந்தால், அதைத் தீர்க்க மருந்துகள் பரிந்துரைக்கப்படும்.
உடலுறவின்போது ஆணுறுப்பு யோனிக்குள் நுழையும் சமயத்தில் சௌகரியமாக உணர உதவும் வகையில், பாலியல் குறித்த தொடர்ச்சியான ஆலோசனை வகுப்புகள் நடத்தப்படும்.
கீழ் இடுப்புத்தளத் தசைகளைத் தளர்ச்சியாக வைத்திருக்கப் பழகுவதற்கு, கெகல் பயிற்சிகள் மிகவும் பலனளிக்கக்கூடும்.
பாலியல் சிகிச்சை, யோனி பயிற்சிகள் போன்ற சிகிச்சை முறைகள் ஆணுறுப்பு யோனிக்குள் நுழைவதை ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு உங்கள் உடலைப் பழக்க உதவும்.
பிரச்சனை பெரிய அளவில் இருந்தால், சேதமடைந்திருக்கும் யோனி அல்லது எண்டோமெட்ரியாசிஸ் ஆகியவை இதற்குக் காரணமாக இருக்கும்பட்சத்தில், அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்படும்.