பிறப்புறுப்பில் புண் அல்லது இரணம்
வாய், உதடுகள் மற்றும் ஆசனவாயிலும் புண்கள் தோன்றலாம்
புண்கள் ஒற்றையாகவும் பலவாகவும் இருக்கலாம், வலியோடும் வலி இல்லாமலும் இருக்கலாம்
ஒரு பக்கமோ அல்லது இரண்டு பக்கமுமோ நெறிகட்டலாம்
பரவும் முறை
பிறப்புறுப்பில் ஏற்படும் புண்கள் பிறப்பு வாய் ஆண் குறி ஆசனவாய் மலக்குடல் வாய் மற்றும் உதட்டில் உள்ள புண்களோடு தொடர்பு ஏற்படும்போது பரவுகின்றன.
இவை சிபிலிஸ் என்ற கிரந்தி, டோனோவானோசிஸ் அல்லது கிரானுலோமா இங்குனேல் ஆகியவற்றால் ஏற்படுகின்றன.
புண்கள் ஆறிவிட்டது போல் தோன்றினாலும் புண்கள் இல்லாவிட்டாலும் கூட இவை ஒருவரிடமிருந்து மற்றவருக்கு தொற்றும் வாய்ப்பு உள்ளது.
தடுப்பு முறை
உடலுறவுத் துணைவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்படும் வாய்ப்புகளை குறைப்பது. துணைவர்கள் புண்கள் முழுமையாக ஆறும் வரையில் எந்த வகையிலும் புண்களோடு தொடர்பு ஏற்படாதவகையில் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
பொதுவான அறிகுறிகள்
புண்கள் முழுமையாக குணமாகும் வரை உடலுறவை தவிர்ப்பதும், அல்லது ஆணுறை பயன்படுத்தி உடலுறவு கொள்வதும் நோய் தொற்று ஏற்படாமல் பாதுகாத்துக்கொள்ள உதவும் மிக எளிய முறைகளாகும்.
சிகிச்சை
இன உறுப்பு புண் ஒத்தவகை நோய்களை (அக்கி நீங்கலாக) பென்சாத்தின் பென்சிலின் ஊசி மருந்தை ஒரே முறையும் அசித்ரோமைசின் மாத்திரை ஒரே முறையும் மருத்துவரின் கண்காணிப்பில் கொடுக்க வேண்டும்.
மருந்துக்கு ஒவ்வாமை உள்ளதா என்று கண்காணிக்கவும்
மருந்து செலுத்தப்பட்டதால் ஏதேனும் சிரமத்தை உணர்ந்தால் நோயாளி உடனே மருத்துவமனைக்கு வரவேண்டும்
சிகிச்சை முடிந்து ஏழு நாட்கள் கழித்து நோயாளி தொடர் கண்காணிப்புக்கு மருத்துவமனைக்கு வரவேண்டும்.
மருந்து
4 பென்சாத்தின் பென்சிலின் 2.4 மில்லியன் யுனிட் ஊசி மருந்தை இரண்டு பிரிவுகளாக பிரித்து சோதனை ஊசி போட்டு ஒவ்வாமை ஏற்படவில்லை என்பதை உறுதி செய்தபின் இரண்டு புட்டங்களிலும் ஒவ்வொன்றாக போட வேண்டும். அசித்ரோமைசின் 1 கிராம். ஒரே வேளை ஒரு நாள் மட்டும்.
4 நோயாளிக்கு பென்சிலின் ஒவ்வாமை இருந்தால் மருந்துப்பை எண் 4ல் உள்ள டாக்சிசைக்ளின் 100 மிகி மாத்திரையை இரண்டு வேளை வீதம் 15 நாட்களுக்கு கொடுக்க வேண்டும். அத்துடன் அசித்ரோமைசின் 1 கிராம். ஒரே வேளை ஒரு நாள் மட்டும் கொடுக்க வேண்டும்.
விளைவுகள்
இன உறுப்பு புண் ஒத்தவகை நோய்களை (அக்கி நீங்கலாக) முறையாக சிகிச்சை செய்யாமல் விட்டாலோ அரைகுறையாக சிகிச்சை எடுத்தாலோ சிறிது காலம் கழித்து ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தலாம்.
சிகிச்சை செய்யாமல் விட்டுவிட்டால் சிபிலிஸ் நோய் நரம்பு மண்டலம் மற்றும் இதயத்தை பாதித்து மரணத்துக்கு காரணமாகிவிடும்.
சிபிலிஸ் நோய் கருவுற்ற பெண்களிடமிருந்து குழந்தைக்கு பரவி குழந்தை இறந்து பிறக்கவும் குறையுடன் பிறக்கவும் காரணமாக அமைந்துவிடுகிறது. கருவுற்ற தாய்க்கு பரிசோதனை செய்து சிபிலிஸ் நோய்க்கு சிகிச்சை செய்வதால் இதை தடுக்க முடியும்.
மிக முக்கியமாக பிற பால்வினை நோய் மற்றும் இனப்பெருக்க மண்டல நோய் தொற்றுக்கள் போல் இன உறுப்பில் புண் உள்ள நபருக்கு 5 முதல் 10 மடங்கு எச்ஐவி தொற்று ஏற்படும் ஆபத்து உள்ளது.
துணைவரை பரிந்துரை செய்தல்
நோயாளி கடந்த மூன்று மாதங்களில் தொடர்பு கொண்ட உடலுறவுத்துணைவர்ஃகளுக்கு தனக்கு பால்வினை நோய் உள்ளதை தெரிவித்து அவர்களையும் சிகிச்சை மையத்திற்கு சிகிச்சை பெற அழைத்து வர ஊக்கப்படுத்த வேண்டும்.
எச்சரிக்கை
ஒரு சில மருந்துகளை கர்ப்பகாலத்தில் உட்கொள்வது ஆபத்தானது. எனவே நோயாளியின் அல்லது அவரது பெண் துணைவரின் கர்ப்ப நிலையை தெரிந்து கொண்டு மருந்து கொடுப்பது நல்லது.
கர்ப்பிணி பெண்கள் மற்றும் அவர்களது துணைவர்கள் தங்கள் மருத்துவரிடம் அவர்களின் கர்ப்பத்தை தெரிவிக்க வேண்டும். அப்போதுதான் மருத்துவர் குழந்தைக்கு தொற்று பரவாமல் காப்பாற்ற முடியும்.