குளிப்பது என்பதே சுகமான விஷயம் தான் . அதிலும் குழந்தைகளைக் குளிக்க வைப்பதென்றால் பெற்றோர்களின் மனம் குதூகலமடையத்தானே செய்யும். ஆனால் நாம்குளிப்பதும் குழந்தையைக் குளிப்பாட்டுவதும் ஒன்றல்ல. இரண்டுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன.
குழந்தையைக் குளிப்பாட்டுவது என்பது ஒரு கலை. அதை மிகுந்த கவனத்துடன் கையாள வேண்டும். எடுத்தவுடனேயே குழந்தையை தண்ணீருக்குள் நனைத்துவிடக்கூடாது.
சோப், டவல், டயப்பர், சுத்தமான துணி ஆகிய தேவையான பொருட்களை முதலில் எடுத்து அருகில் வைத்துக் கொண்டு அதன்பின்னரே குழந்தை மேல் தண்ணீரை ஊற்ற வேண்டும்.
முதலில் பாதம், அடுத்து முழங்கால் பகுதி, மார்பு, கழுத்து என கீழிருந்து மேலாக கொஞசம் சொஞ்சமாக தண்ணீர் ஊற்ற வேண்டும். எடுத்தவுடனே தலையில் இருந்து ஆரம்பித்தால், திடீரென தண்ணீரில் நனைந்த அனுபவத்தில் குழந்தை மிரட்சியடைந்துவிடும்.
பாத்ரூமை சற்று மிதமான வெப்பநிலையில் வைத்திருக்க வேண்டும்.
குழந்தையை டப்பில் இறக்கிவிட்ட பின் தண்ணீர் ஊற்றக்கூடாது.
தண்ணீரில் சில்லென்று இருக்கக்கூடாது. கொதிக்கவும் கூடாது. சற்று வெதுவெதுப்பான நிலையில் உள்ள நீரைக்கொண்டே குழந்தையைக் குளிப்பாட்ட வேண்டும்.
டப்பிற்குள் 2 முதல் 4 இன்ச் வரை மட்டுமே நீர் நிரப்ப வேண்டும்.
குழந்தையை உட்கார வைத்த நிலையிலேயே குளிப்பாட்ட வேண்டும்.