அசைவம் என்று யார் சொல்லக் கேட்டாலும், உடனே “சிக்கன்” தான் நினைவுக்கு வரும். கூட எச்சிலும் ஊறும். அசைவப் பிரியர்கள் அத்தனை பேருக்கும் மிகவும் பிடித்தமானதாக இருக்கிறது சிக்கன். இந்த சிக்கனை சமைப்பதில் கடைகளும் சரி, வீடுகளும் சரி சளைப்பதாயில்லை. சிலர் வீடுகளில் வாரத்தில் 2 முதல் 3 நாட்கள் சிக்கன் தான் செய்வார்கள். ஆனால், பாஸ்புட் கடைகளில் அன்றாடம் சிக்கன். சில்லி சிக்கன், சிக்கன் ரைஸ், கிரில்டு சிக்கன் என்று நாவை சுண்டியிழுக்கும் வகையறாக்கள் ஏராளம்.
ருசி நன்றாக இருக்கிறது என்று உண்டு விடுகிறோம். ஆனால் இன்று பலர் விளைவுகள் ஏராளமாக இருந்தாலும் கூட வீட்டு சமையலை விட ஹோட்டல்களில் சமைக்கும் சாப்பாட்டுக்கு பலரும் அடிமையாக உள்ளனர். அதிலும், சிகப்பு நிறத்தில் எண்ணெயில் பொரித்து எடுத்து அழகாக பரிமாறப்படும் சிக்கனுக்கு ரசிகர்கள் ஏராளம்.
சிக்கனுடன் கூடவே, இரண்டு துண்டு எலுமிச்சை பழங்களும் இருக்கும். இதற்கு ஒரு முக்கிய காரணம் உள்ளது. சிக்கனில் அதிக அளவுக்கு இரும்புச் சத்து உள்ளது. இரும்புச் சத்தை நமது உடல் முழுமையாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றால், வைட்டமின் – சி தேவை. அதனால் தான், சிக்கன் சாப்பிடும் போது, வைட்டமின் – சி சத்து நிறைந்த எலுமிச்சை சாற்றை பிழிந்து விட்டுச் சாப்பிடச் சொல்கிறார்கள்.