penkuri, penmayai anupavipathu eppadi, sex tamil, tamil tips, tamil sex videos, tamil kathaikal, pengalin pirachchinaikal, pennuruppu pirachchinaikal,பிறப்புறுப்பின் கேண்டிடயாசிஸ் நோய்த்தொற்று என்பது என்ன?(What is Vaginal candidiasis infection? )
பிறப்புறுப்பின் கேண்டிடயாசிஸ் அல்லது பிறப்புறுப்பின் பூஞ்சான் புண் (வெஜைனல் த்ரஷ்) என்பது பொதுவாக வல்வாவெஜைனல் கேண்டிடயாசிஸ் (VVC) என்றழைக்கப்படுகிறது. இது கேண்டிடா எனும் பூஞ்சானால் பிறப்புறுப்பு மற்றும் பிறப்புறுப்பு இதழ்களில் நோய்த்தொற்றை ஏற்படுத்தி, பிறப்புறுப்பில் அழற்சியை ஏற்படுத்தும் பூஞ்சான் நோய்த்தொற்றாகும். பெரும்பாலும் அழற்சிக்கு பாக்டீரிய நோய்த்தொற்றுக்கு அடுத்தபடியாகக் காரணமாக இருப்பது பிறப்புறுப்பின் கேண்டிடயாசிஸ் நோய்த்தொற்றே ஆகும். VVC நோய்த்தொற்று, இனப்பெருக்கத் திறன் கொண்ட வயதுப் பிரிவைச் சேர்ந்த பெண்களில் முக்கால்வாசி பேரைப் பாதிக்கிறது. இந்தியாவில், பிறப்புறுப்பு சார்ந்த நோய்த்தொற்றுகளில் சுமார் 20-40% நோய்த்தொற்றுகளுக்கு கேண்டிடா பூஞ்சானே காரணமாக உள்ளது. பிறப்புறுப்பின் கேண்டிடயாசிஸ் நோய்த்தொற்றை சிக்கலானது சிக்கலற்றது என்று வகைபடுத்துகிறோம்.
பிறப்புறுப்பின் யீஸ்ட் நோய்த்தொற்று ஏற்படுவதற்கான காரணங்கள் என்னென்ன? (What is the cause of vaginal yeast infection?)
கேண்டிடா எனப்படும் பூஞ்சான் இனத்தைச் சேர்ந்த யீஸ்ட்டே பிறப்புறுப்பின் கேண்டிடயாசிஸ் நோய்த்தொற்று ஏற்படக் காரணமாக உள்ளது. பெரும்பாலும் இந்த நோய்த்தொற்றை ஏற்படுத்தும் இனம் கேண்டிடா அல்பிக்கேன்ஸ் (சுமார் 85%-90% இதுவே காரணமாக உள்ளது) என்ற இனமே ஆகும். அதற்கடுத்தபடியாக காரணமாக இருப்பது சி. கிளாப்ரட்டா இனமாகும்
கேண்டிடா யீஸ்ட் பல பெண்களின் பிறப்புறுப்பில் இருப்பதுண்டு, ஆனால் எவ்விதப் பிரச்சனைகளையும் ஏற்படுத்தாமல் இருக்கும்.
பிறப்புறுப்பில் இயற்கையாகவே பாக்டீரியா மற்றும் கேண்டிடா உள்ளிட்ட யீஸ்ட் போன்ற அனைத்தும் ஒரு சமநிலையான அளவில் இருக்கும். பிறப்புறுப்பில் உள்ள லாக்டோபேசில்லஸ் எனும் பாக்டீரியா லாக்டிக் அமிலத்தைச் சுரக்கிறது. இந்த அமிலமானது பிறப்புறுப்பை அமிலத்தன்மை கொண்டதாக வைத்துக்கொள்கிறது. இதன் மூலம் யீஸ்ட் அதிகம் பெருகாமல் தடுக்கப்படுகிறது. பாக்டீரியா மற்றும் பூஞ்சான் இவை இரண்டுக்கும் இடையிலான இயற்கையாக உள்ள சமநிலை சீர்குலையும்போது, கேண்டிடா பெருகி, நோய்த்தொற்று ஏற்படுகிறது.
கேண்டிடா அதிகம் பெருகுவதற்கான காரணங்களில் சில:
கர்ப்பத்தின்போது ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள்
கட்டுப்பாடற்ற நீரிழிவுநோய்
சில ஆன்டிபயாட்டிக் மருந்துகள் லாக்டோபேசில்லஸ் பாக்டீரியாக்களைக் கொள்வதால் பிறப்புறுப்பின் pH மதிப்பு மாறுதல்.
நோய் எதிர்ப்பு சக்தி குறையும் பிரச்சனைகள், உதாரணம் – HIV நோய்த்தொற்று.
ஆணுறை மற்றும் விந்தணுக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்துதல்
கருத்தடை மாத்திரைகள் எடுத்துக்கொள்ளுதல் அல்லது ஈஸ்ட்ரோஜன் அளவை
அதிகரிக்கின்ற, ஈஸ்ட்ரோஜன் அடிப்படையிலான ஹார்மோன் சிகிச்சை எடுத்துக்கொள்ளுதல்.
இறுக்கமான உள்ளாடைகள் அணிதல்
அடிக்கடி பாலியல் செயல்பாடுகளில் (குறிப்பாக உடலுறவின்போது இனப்பெருக்க உறுப்புகளை வாயால் தொடும்போது) ஈடுபட்டபிறகு யீஸ்ட் நோய்த்தொற்று பரவலாம். எனினும், பெண்கள் எந்த பாலியல் தொடர்பும் இல்லாமலே இந்த நோய்த்தொற்றைப் பெற முடியும் என்பதால், இதனை பாலியல்ரீதியாகப் பரவும் நோய்கள் என்பதன் கீழ் திட்டவட்டமாக வகைபடுத்துவதில்லை.
பிறப்புறுப்பின் கேண்டிடயாசிஸ் தொற்றின் அறிகுறிகள் என்னென்ன? (What are the symptoms of vaginal candidiasis?)
பிறப்புறுப்பின் கேண்டிடயாசிஸ் தொற்றின் சில அறிகுறிகள்:
பிறப்புறுப்பின் இதழ்களில் வலி மற்றும் அரிப்பு ஏற்பாடு, அதனால் சிறுநீர் கழிக்கும்போது
மற்றும் உடலுறவின்போது வலி ஏற்படுதல்
பிறப்புறுப்பின் இதழ் பகுதிகள் வீங்குதல், சிவத்தல்.
பிறப்புறுப்பிலும் அதன் திறப்பிலும் எரிச்சல் மற்றும் அரிப்பு.
பிறப்புறுப்பில் இருந்து திரவங்கள் வெளியேறுதல் – கெட்டியான, வெண்ணிறமான,
மணமற்ற, நீர் போன்ற அல்லது பாலாடைக்கட்டி (சீஸ்) போன்ற பொருள்கள் வெளியேறுதல்
நோய் கண்டறிதல் (Diagnosis)
பிறப்புறுப்பின் கேண்டிடயாசிஸ் நோய்த்தொற்றை மருத்துவமனைப் பரிசோதனைகள் மூலம் கண்டறிகின்றனர். மருத்துவர் உங்களுக்குள்ள பிரச்சனைகள் பற்றிக் கேட்டறிந்த பிறகு, கடந்த காலத்தில் உங்களுக்கு பிறப்புறுப்பு சார்ந்த நோய்த்தொற்றுகள் மற்றும் பால்வினை நோய்கள் ஏதேனும் இருந்ததா என்பது பற்றி சில கேள்விகளைக் கேட்கலாம்.
கீழ் இடுப்புப்பகுதி பரிசோதனை: நோய்த்தொற்றுகளுக்கான ஏதேனும் அறிகுறிகள் உள்ளதா என அறிவதற்காக, மருத்துவர் உங்கள் வெளிப்புற இனப்பெருக்க உறுப்புகளையும் பிறப்புறுப்பையும் ஆய்வு செய்வார்.
பிறப்புறுப்புத் திரவப் பரிசோதனை: பிறப்புறுப்பில் சுரக்கும் திரவங்களின் மாதிரி சேகரிக்கப்பட்டு, யீஸ்ட் உள்ளதா எனப் பரிசோதனை செய்வதற்காக ஆய்வகத்திற்கு அனுப்பப்படும்.
ஃபங்கல் கல்ச்சர் எனப்படும் பூஞ்சை பரிசோதனையின் மூலம் இது உறுதிப்படுத்தப்படுகிறது.
பிறப்புறுப்பில் ஏற்படும் யீஸ்ட் நோய்த்தொற்றுக்கு எப்படி சிகிச்சை அளிக்கப்படுகிறது?
சிக்கலற்ற நோய்த்தொற்றுக்கு (லேசான முதல் மிதமானது வரை):
பிறப்புறுப்பில் பூஞ்சைக்கு எதிரான சிகிச்சை (குறுகியகாலம் வழங்கப்படுவது): பூஞ்சை எதிர்ப்புத் திறன் கொண்ட மருந்து ஒன்று வழங்கப்படும், இதனை ஒரு நாள் முதல் ஏழு நாட்கள் வரை தினமும் பிறப்புறுப்பில் செலுத்திக்கொள்ள வேண்டும்.இம்மருந்துகள் கிரீம், ஆயின்மென்ட், மாத்திரை மற்றும் பேசரிகளாகவும்
கிடைக்கின்றன. உதாரணங்கள்: கிளாட்ரிமசோல், மைக்கோனசோல், பியூட்டோக்கோனசோல் மற்றும் டெர்கோனசோல்.
ஒரே மருந்தளவில் (டோஸ்) அளிக்கும் பூஞ்சான் எதிர்ப்பு (வாய்வழி மருந்து) சிகிச்சை:உதாரணம்: ஃப்ளூக்கோனசோல்.
சிக்கலான (கடுமையான) தொற்றுக்கு:
நீண்ட நாள் அளிக்கப்படும் பிறப்புறுப்பு பூஞ்சான் எதிர்ப்பு சிகிச்சை: ஏழு முதல் பதினான்கு நாள்கள் வரை நீண்ட நாட்களுக்கு, பூஞ்சான் எதிர்ப்பு மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன.
பல மருந்தளவில் (டோஸ்) அளிக்கப்படும் பூஞ்சான் எதிர்ப்பு (வாய்வழி மருந்து) சிகிச்சை:ஃப்ளூக்கோனசோல் போன்ற மாத்திரைகள் இரண்டு முதல் மூன்று மருந்தளவு (டோஸ்) கொடுக்கப்படலாம்.
பிறப்புறுப்பில் பூஞ்சான் நோய்த்தொற்றுக்கான சிகிச்சையில் ப்ரோபயோட்டிக்ஸ் பாக்டீரியாக்களைப் பயன்படுத்துவதால் என்ன நடக்கிறது என்பதைக் கண்டறிய ஆராய்ச்சி நடந்துகொண்டுள்ளது.
பொதுவாக ஆணுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதில்லை. ஆனால் ஒரு பெண்ணுக்கு மீண்டும் மீண்டும் நோய்த்தொற்று ஏற்பட்டால், அல்லது அவரது துணையான ஆணுக்கு ஆண்குறி மொட்டில் யீஸ்ட் நோய்த்தொற்று இருந்தால் (மொட்டுத் தோலழற்சி (பெலனைட்டிஸ்)) அவருக்கும் சிகிச்சை பரிந்துரைக்கப்படலாம். பிறப்புறுப்பில் யீஸ்ட் நோய்த்தொற்றுக்காக ஒரு பெண் சிகிச்சையெடுத்துக்கொண்டிருக்கும் போது, அவருடன் உறவுகொள்ளும் ஆண் ஆணுறையைப் பயன்படுத்துவது நல்லது.
அடுத்து செய்ய வேண்டியவை (Next Steps)
பின்வரும் நிலைகளில், மருத்துவ உதவியை நாடுங்கள்:
முதல் முறையாக உங்களுக்கு, பிறப்புறுப்பில் யீஸ்ட் நோய்த்தொற்று இருப்பதற்கான அறிகுறிகள் ஏற்பட்டால்
உங்கள் வயது 16க்குக் குறைவு அல்லது 60க்கு அதிகம் என்றால்
நீங்கள் கர்ப்பமாக இருந்தால் அல்லது தாய்ப்பாலூட்டினால்
கடந்த 6 மாதங்களுக்குள் உங்களுக்கு இரண்டு முறை யீஸ்ட் நோய்த்தொற்று ஏற்பட்டிருந்தால்
பிறப்புறுப்பில் இரத்தப்போக்கு, அடிவயிற்றில் வலி, நிறமுள்ள அல்லது நாற்றமுள்ள திரவங்கள் வெளியேறினால், அல்லது பிறப்புறுப்பு இதழ் பகுதியைச் சுற்றிலும் தோல் திட்டுகள் (ராஷ்) ஏற்பட்டால்
கடையில் கிடைக்கும் பூஞ்சான் எதிர்ப்பு மருந்தை எடுத்துக்கொண்டும் உங்கள் அறிகுறிகள் மறையாவிட்டால்