Home உறவு-காதல் காதல் தோல்வியா?… காரணம் இதுவாதானே இருக்கும்?..

காதல் தோல்வியா?… காரணம் இதுவாதானே இருக்கும்?..

34

எல்லோருக்குமே தங்களுடைய வாழ்வில் மறக்க முடியாத விஷயம் என்றால் அது அவர்களுடைய முதல் காதல்.

அந்த முதல் காதல் அவர்களுடைய வாழ்வின் இறுதி வரை நியாபகம் இருக்கும். அந்த முதல் காதல் சிலருக்கு கைகூடி திருமணத்தில் முடியலாம். ஆனால் பலருக்கு தங்களுடைய முதல் காதல் தோல்வியடைந்ததாகவே வரலாறு உள்ளது.

இந்த காதல் தான் அவர்களுடைய வாழ்க்கையை புரட்டி போட்டு நிகழ்வாக அமையும்.

ஒருவருடைய முன்னேற்றம், தோல்வி என எல்லாவற்றுக்கும் அவர்களுடைய காதல் அடிப்படையாக அமைய ஆரம்பித்துவிடும்.

அப்படிப்பட்ட முதல் காதல் தோற்றுப்போவதற்கு பல காரணங்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகள் உண்டாவதுண்டு. அதில் பெற்றோர்கள் மறுப்பது, சமூக சூழல் இதுபோன்ற புறக்காரணிகள் ஒருபுறம் இருக்க, காதலிக்கும் நபர்களாக இருவருக்கும் இடையே நிகழ்கிற நிறைய விஷயங்கள் அவர்களுடைய காதல் தோல்வியை நோக்கிச் செல்ல காரணமாக அமைந்துவிடுகின்றன.

இருவருக்குமே உடன்பிறந்த சகோதரன்/சகோதரி இருந்தாலும் மன ரீதியாக, உடல் ரீதியாக ஆண்/பெண் எதிர்கொள்ளும் பிரச்னைகள், சவால்கள் பற்றி அறிந்து கொள்வது முதல் காதலின் போது தான்.

குறிப்பாகச் சொல்லப்போனால் அதீத நம்பிக்கை, ஒரு நபரை எந்த அளவுக்கு நம்புகிறோம், அதனால் ஏற்படும் சந்தோஷம்/துக்கம்என இரண்டையும் அந்த முதல் காதலில் உணர முடியும்.

ஒருவேளை அவரை பிரியும் நிலை வந்தால், அந்த வலி மிகவும் கொடூரமானதாக இருக்கும்.

உண்மையாக ஒரு பெண்ணை முதன் முதலில் நேசிக்கும் ஒருவனுக்கு உடலை விட மனது தான் சிறந்தது என்பது தெரியவரும்.

பெரும்பாலான காதலில் விரிசல் ஏற்படுவது அதீத பாசத்தால் தான். இங்கு போகாதே, அவருடன் பேசாதே என பெண்கள் இடும் அன்பு கட்டளைகள் ஆண்களுக்கு எரிச்சலைத் தான் தரும்.

இதுபோன்ற வாழ்க்கையின் சின்ன சின்ன அடிப்படைகளை அந்த முதல் காதல் நம்மிடம் இருக்கும்போது நமக்குப் புரியாது. அது நம்மைவிட்டுப் போனபிறகு, தோல்வியில் தான் இந்த விஷயங்கள் அனைத்தும் புரிய வரும்.