இறால் – 1/4 கிலோ
உருளைக்கிழங்கு – 1
இஞ்சி – சிறிய துண்டு
பூண்டு – 1
வெங்காயம் – 1
பச்சைமிளகாய் – 3
சோயா சாஸ் – 1 பெரியகரண்டி
மிளகாய் தூள் – 1/2 கரண்டி
சோள மாவு – 100 கிராம்
மைதா மாவு – 100 கிராம்
முட்டை – 1
அஜினமோட்டோ, உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
வெங்காயம், இஞ்சி, பூண்டு, மிளகாய் ஆகியவற்றைப் பொடியாக நறுக்கவும். கிழங்கை மெல்லியதாக நறுக்கவும். முட்டையை கலக்கி அதில் சோளமாவு, மைதா மாவு சேர்த்து கலக்கி அதில் இறாலை போட்டு 2 நிமிடம் பொரிக்கவும். அதே போல் கிழங்கையும் பொரிக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி நறுக்கின வெங்காயம், பூண்டு, இஞ்சி, மிளகாய் போட்டு நன்கு வதக்கவும். அதில் சாஸ், அஜினமோட்டோ, உப்பு சேர்த்து 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு அதில் இறால், கிழங்கை போட்டு தண்ணீர் வற்றியவுடன் அடுப்பை அணைக்கவும்.